4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

பசுவின்பசி - முனைவர் கோ. வ. பரத்வாஜ்

 

பசுவின்பசி

ஆவினங்கள் விலையைத் தேடுவதில்லை

விளைச்சலை தேடுகின்றன

 

வேதனையில் சொரிகின்ற பால்

குவளையிலா

அல்ல! அல்ல!

 

விளக்கிற்கும் நரம்புகளின் வலுவிற்கும்

நாடும் உயரும் என,

அமரும் நாற்காலியின் அபிஷேகத்திற்குத் தானே

பாலாவது காய்ச்சலாமென கடைவீதிக்குச் சென்றால்,

கைக்குழந்தையுடன் திரும்பிவரும்

தாய்மார்களின் கூட்டங்கள்

அம்மாடியோ!!

 

சுவரொட்டியில் மரம்நடும்விழா

பார்த்தப் பசுக்கள் நாத்து நடுங்களே

என்று உமிழ்ந்துத் தின்னுகின்றன

அம்மே! அம்மே!

 

ஹிரோஷிமா நாகாசாகியில்

மறுமையில் புல் முளைக்கும்

மேயலாம் என்ற கனவு

கயிற்றைப் பிடித்த காத்த மரங்களின் வேர்கள், தொழுவங்கள்,

கோபுரமான வைக்கோல்,

அடர்ந்த செடிகள்,

சண்டையின்றித் தண்ணீர்

குடிக்கும் குட்டைகள்,

காலை மாலையில் பாடிக்கொண்டே போகும் கூட்டம்

இந்த சரித்திரச் சுவடுகள் எங்கே?

அம்மே! அம்மே!


முனைவர் கோ. . பரத்வாஜ்