4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 டிசம்பர், 2021

தாய்லாந்தில் விநாயகர் வழிபாடு - நிதுஷாளினி மனோகரன்

 

தாய்லாந்தில் விநாயகர் வழிபாடு

 

நிதுஷாளினி மனோகரன்

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

 

அறிமுகம்

இந்தியாவிற்கே உரியதாக விளங்கும் இந்துப்பண்பாடு காலப்போக்கிலே இந்தியாவிற்கு வெளியே பலநாடுகளிலும் பரவலடைந்ததற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இவ்வாறு பரவலடைந்த நாடுகளில் தென்கிழக்காசிய நாடுகளும் சுட்டத்தக்கதாகும். இத்தகைய தென்கிழக்காசிய நாடுகளில் தாய்லாந்து, கம்போடியா, ஜாவா, சம்பா, பர்மா, மலேசியா, சுமாத்ரா, போர்ணியோ, மதுரா, பாலித்தீவுகள் போன்றன முக்கியம் பெறுகின்றன.


தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப்பண்பாடு நிலவியிருந்த தன்மையினை புராதன இந்திய இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம், புராணங்கள், ஜாதகக்கதைகள் என்பவற்றில் குறிப்புகள் ஊடாக அறியமுடிகிறது. மேலும் அந்நாடுகளில் பெறப்பட்ட கல்வெட்டுக்கள், சிதைந்தகட்டடங்கள், கோவில்கள், சிற்பங்கள், நூல்கள், ஓவியங்கள், வரலாற்றுக்குறிப்புக்கள், தொல்பொருட்சின்னங்கள் போன்ற சான்றுகள் தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவிய தன்மையினைக் காட்டி நிற்கின்றன.

தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் தென்கிழக்காசிய நாடுகளைக் கைப்பற்றி தமது ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வந்த காலத்தில் தமிழக மன்னர்களுடன் இணைந்து இந்துப்பண்பாடும், வழிபாட்டு அம்சங்களும் அங்கு பரவியது எனலாம். இந்தியாவின் வியாபாரிகள், வணிக கணங்கள், மன்னர்களால் தமது பாதுகாப்பிற்கான குறியீடாக கொண்டுவரப்பட்ட விநாயகரை இங்கிருந்த அனைத்து மக்களும் போற்றிய தன்மையினைக் காணலாம். இவ்விதமாகவே தாய்லாந்திலும் விநாயகர் வழிபாடு வளர்ச்சி பெற்றுக்கொண்டது.

தாய்லாந்து

தாய்நாடு என சிறப்பாக அழைக்கப்படும் இந்நாடு சீயம், சியபாமாநாடு, சியாமதேசம், சியாம், சியன், துவாரவதி என்றெல்லாம் முற்காலங்களில் அழைக்கப்பட்டிருந்தது. சுமார் 60 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் இன்று பௌத்தம் பெரும்பான்மைக்குரிய மதமாக காணப்பட்ட போதிலும் பண்டைய காலத்தில் இந்துமதம் நன்கு பரவி வளர்ச்சி பெற்றமைக்குச் சான்றுகள் உண்டு. இந்திய மன்னர்கள் பலர் இங்கு ஆட்சி புரிந்தனர். இதன் தலைநகராகிய பாங்கொங்கில் பல இந்துஅரசர்களும் புரோகிதர்களும் வாழ்ந்துள்ளனர். இங்குள்ள மக்கள் புத்தரை வழிபடும் அதே சமயம் விநாயகரையும் பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.

தாய்லாந்து பிரதானமாக பௌத்த தேசமாக இருந்தாலும், இந்து தெய்வங்களுக்கான சிலைகள் மற்றும் சிவாலயங்கள் பெருமளவில் காணப்படுகின்றன. தாய் பௌத்தர்கள் வழக்கமாக இந்துக் கடவுளர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள், ஆனால் இந்த தெய்வங்கள் வழக்கமாக இந்து மதத்துடன் ஒப்பிடும்போது தாய்மொழியில் வேறுபெயரைக் கொண்டுள்ளன. மிகவும் பரவலாகக் காணக்கூடிய மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய ஒன்று கணேஷ் (கணேஷா), யானைத்தலை கடவுள் பொதுவாக தாய்லாந்து நாட்டின் மொழியில் ஃபிராபிகானெட் என்று குறிப்பிடப்படுகிறார்

தாய்லாந்தில் விநாயகர்

தாய்லாந்தில் விநாயகர் வழிபாட்டின் தோற்றம் தொடர்பான பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. கி.பி.414ஆம் ஆண்டிலேயே பாலித்தீவில் விநாயகர் வழிபாடு இருந்ததாக சீன யாத்திரிகரான பாகியன் தனது பிரயாணக் குறிப்பில் கூறியுள்ளார். அங்கிருந்து தாய்லாந்திலும் பரவியது என்பர். காடுகளில் அலைந்து திரிந்து வேட்டையாடி உணவைச் சேமித்து தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் சென்ற இனக்குழுமங்களின் கணங்களின் பதியாக கணபதி தோற்றம் பெற்றார் என்றும், புராதன நெல்லுற்பத்தி மையங்களினூடாக கணபதியின் முக்கியத்துவமும் வழிபாடுகளும் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்ததென தொல்லியல் சான்றுகள் சுட்டுகின்றன.

மோதக மரபுடனான விநாயகரின் மரபே தாய்லாந்தில் சிறப்புற்றிருந்தது. தாய்லாந்தில் விநாயகர் வழிபாடு பெறுகின்ற முக்கியத்துவத்தினை அங்குள்ள ஆலயங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு உணர்ந்து கொள்ளலாம்.

கணேஷ் தடைகளை நீக்குபவர் என்று அழைக்கப்படுகிறார், மக்கள் வணிகத்தைத் தொடங்குதல், வெளிநாட்டுப் பயணம் செய்தல், புதிய வீடு கட்டுவது அல்லது திருமணம் செய்வது போன்ற ஒவ்வொரு புதிய முயற்சியைத் தொடங்கும் போதும் கணேஷ் சன்னதிக்கு பிரசாதம் கொடுப்பது பொதுவான நிகழ்வாகும். இங்குள்ள மாணவர்களும் பரீட்சைக்கு முன்பு விநாயகரை வழிபட்டு ஆசிபெற்றுச் செல்லும் நம்பிக்கை இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது. கணபதியுடன் தொடர்புடைய பிற பண்பாட்டுக் கூறுகளாக வெற்றி, சாதனை, ஞானம் மற்றும் செல்வம் என்பன அமைகின்றன. எனவே இந்து தெய்வம் வழிபாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

தாய்லாந்தில் விநாயகர் ஆலயங்கள் மற்றும் சிலைகள்

தாய்லாந்து முழுவதும் ஏராளமான விநாயகருக்கான ஆலயங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் சிலைகள் உள்ளன. பெரும்பாலான தாய்லாந்து மக்களின் பிரதான வழிபாட்டிற்குரிய கடவுளாக விளங்கும் கணபதியை சீன தேசத்தைச் சேர்ந்தவர்களும் வழிபடுவதற்காக இங்கு வருகை தருவதைக் காணலாம். வாரஇறுதி நாட்களில் இறைஅருள் பெற வரும் பக்தர்களுக்கு துறவிகளின் ஆசீர்வாதமும் கிடைக்கின்றது. இதன்படி தாய்லாந்தில் விநாயகருக்கான இடத்தினைபின்வருமாறு நோக்கலாம்.

1.     சச்சோயெங்சாவ்மா காணத்தில் மூன்று ராட்சத விநாயகர் சிலைகள் மற்றும் அவற்றின் ஆலயங்கள் (Three Giant Ganesha Status in Chachoengsao Province)

தாய்லாந்தின் பாங்கொங்கில் விநாயகர் ஃபிராபிகானெட் (PhraPhicanet) என்று அழைக்கப்படுகிறார். இங்கு அவர் அதிர்ஷ்டம்


மற்றும் வெற்றியின் தெய்வமாகவும், தடைகளை நீக்குபவராகவும் வணங்கப்படுகிறார். அவர் கலை, கல்வி மற்றும் வர்த்தகத்துடன் தொடர்புடையவர். இந்த யானைதலை கொண்ட இந்துகடவுளுக்கான சன்னதிகள் மற்றும் சிலைகளைத் தாய்லாந்து முழுவதும் காணலாம். விநாயகர் சிலைகளில் சிலைகளை சச்சோயெங்சாவ் மாகாணத்தில் காணலாம்.

பெரிய அமர்ந்த விநாயகரை Chachoengsao என்ற இடத்தில் உள்ள வாட்ஃபிராங்அகாட்டில் காணலாம். இது 49 மீட்டர்உயரமும் 19 மீட்டர் அகலமும் கொண்டது. தமிழகத்தில் எவ்வாறு அழகிய தோற்றத்துடன் விநாயகர் அலங்காரம் செய்து வீற்றிருப்பாரோ அதே போன்ற தோற்றத்தை இங்கும் காணமுடிகிறது.

Ø  ஆலயங்கள்

NakhonNayok எனும் இடத்தில் விநாயகருக்கான இரண்டு ஆலயம் அமைந்துள்ளது. அவற்றுள் முதலாவது ஆலயத்தில் மேற்குறிப்பிட்ட வகையில் சயனித்த நிலையில் ஆலயத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள கடவுளின் உருவம் இளஞ்சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அச்சிலையினை நோக்கும்போது பின் இருகரங்களிலும் ஒடிந்த கொம்பும், தாமரை மொட்டும் அமைய, முன்னிருகைகளில் ஒன்று தொடைக்கையாக தொடையின் மீது வைக்கப்பட்ட நிலையிலும் மற்றைய கரம் வரதஹஸ்தம் தாங்கி காணப்படுகின்றது.


இச்சிற்பத்தின் கீழுள்ள பக்கச்சுவர்களில் கணபதியின் அவதார வடிவங்கள் புடைப்புச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்விநாயகப் பெருமானை தாய்லாந்து மக்கள் நல்ல அதிஷ்டத்தையும், செல்வத்தையும் தருபவராக எண்ணி ஒருவர்பின் ஒருவராக வந்து தொட்டு வணங்கும் தன்மையினை அறியலாம்.

இந்த கடவுளின் மீது அங்குள்ள மக்கள் எந்தளவு பக்தியும் நம்பிக்கையும் கொண்டுள்ளனரென்பதை அவ்ஆவலயத்தில் எழுதப்பட்டுள்ள Praying for one by one the images of ganesha are very colorful. People pray one by one touching them wishing they can good luck எனும் வாசகம் உறுதிசெய்கின்றது.


இரண்டாவது இராட்சத விநாயகர் சிலை நின்ற கோலத்தில் காணப்படுகின்றது. இது Chachoengsao எனுமிடத்தில் உள்ள க்ளோங்குயான் கணேஷ் சர்வதேச பூங்காவில் உள்ளது. 30 மீட்டர் உயரம் கொண்ட இந்தசிலை கருமை நிறத்தில் அமைந்துள்ளது. மேலும் தலையின் பின்னால் திருவாசி போன்ற அமைப்பும் இடதுபுற பின்கையில் கூரிய ஆயுதம் ஏந்தியவாறு காட்சியளிக்கும் இந்த விநாயகரை அங்குள்ள மக்கள் பாதுகாப்பிற்கான குறியீடாகக் கருதுகின்றனர். இந்த விநாயகர்சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்தை இயற்கைப் பூங்காவாக அமைத்து ஒரு சுற்றுலாத் தளமாகவும் தாய்லாந்து அரசினால் சிறப்பிக்கப்பட்டுள்ளதைக் காணலாகிறது.


உலகிலேயே மிகவும் பிரமாண்டமான விநாயகர்சிலை ஒன்றும் இங்குள்ளது. இந்த மூன்றாவது இராட்சத விநாயகர்சிலை Chachoengsao நகரில் உள்ள What Saman Rattanaram எனும்  இடத்தில் காணப்படுகின்றது. THE BIGGEST IN WORLD எனப்படும் சயனநிலையில் காணப்படும் இந்த விநாயகரை தாய்லாந்து மக்கள் 'ப்ராபிக்கனட்' அல்லது 'ப்ராபிக்கனிசுவன்' (PhraPhikanet/ PhraPhikananesun) என்று அழைத்து வழிபடுகின்றனர்.  சாய்ந்த நிலையில் உள்ள இந்த சிலையானது 16 மீட்டர் உயரமும், 22 மீட்டர் நீளமும் கொண்டது. பீடம் ஒன்றின் மீதுள்ள ஆசனத்தை அணையாகக் கொண்டு இடதுகாலின் மீது வலதுகாலை இட்டு சரிந்த தோற்றத்துடன் காணப்படும் இந்த விநாயகரும் இளஞ்சிவப்பு நிறத்திலேதான் காட்சியளிக்கின்றார். மேலும் இச்சிலை அமைந்துள்ள பீடத்தைச் சுற்றி சிறுபகுதிகளாப் பிரித்து அவை ஒவ்வொன்றிலும் விநாயகரின் புராணக் கதைகளை எடுத்துக்கூறும் வகையில் அவரது உருவங்கள் சிறிதாக வரையப்பட்டுள்ளதன. ஏராளமான பக்தர்களால் இங்கும் அவர் போற்றப்படுகின்றார். இந்த விநாயகரின் உருவத்தை முழுமையாக புகைப்படம் எடுக்க எண்ணில் 15மீட்டர் தூரத்திற்கு அப்பால் நின்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும்.  இதிலிருந்தே அந்த சிற்பத்தின் உயரம் பற்றிய தெளிவு கிடைக்கின்றது.

2.     இரண்டாவது விநாயகர் ஆலயம்

தாய்லாந்தின் NakhonNayok எனுமிடத்தில் மற்றுமொரு விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. பாங்கொங்கிற்கு அருகில் 5 அடி மாடி உயரத்தில் திறந்தவெளியில் விநாயகர் சிற்பம் ஒன்று உள்ளது. இச்சிற்பம் புராணக் கதைகளைத் தழுவியிருப்பதைக் காணலாம். தோற்றம் பற்றி நோக்கும் போது வலது கீழ்க்கரத்தில் மோதகமும், வலது மேல்கரத்தில் பாசம் என்பவற்றையும், இடது கீழ்க்கரத்தில் ஒடிந்த கொம்பும், இடது மேல்கரத்தில் திரிசூலமும் தாங்கியுள்ளார். இந்த கணபதியின் உருவத்தைச் சுற்றி நாகஉருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வாரத்தின் இறுதிநாட்களில் தாய்லாந்து மக்கள் ஒன்றுகூடி இக்கடவுளின் பாதங்களைத் தொட்டு வழிபடுவதுண்டு.

v  பாங்காக்கின் மத்திய உலகில் கணேஷ் சன்னதி(Ganesha Shrine in Bangkok Ganesh Shrine at Central World, Bangkok)

பாங்காக்கில் உள்ள விநாயகர் ஆலயம் Center world shopping mall முன்னால் உள்ள திரிமூர்த்தி ஆலயத்திற்கு நேரே அமைந்துள்ளது. இங்கு சிவன் மற்றும் பார்வதியின் மகனாக விநாயகர் சிறப்பிக்கப்பட்டுள்ளார். இங்குள்ளவர்களால் விநாயகர் புத்தி மற்றும் ஞானத்தின் மாஸ்டர் என்று கருதப்படுகிறார்,  இங்கு வருபவர்கள் கலை, வெற்றி மற்றும் சாதனை மூலம் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

பெரியவயிறு, யானைத்தலை, மனிதக்கூறுகள், பலஆயுதங்கள், பாம்புகளின் கூறுகள் என்பவற்றைக் கொண்டு இந்த விநாயகர் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளார். கலைத்துறையுடன் இணைக்கப்பட்ட கடவுளாக சுட்டினாலும் உண்மையில் தடைகளை அழிப்பவர். கல்செதுக்குதல் போன்ற ஒரு நுட்பமான செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் கைவினைஞர்கள் விநாயகரை அழைத்து தொழில் செய்வதுண்டு. மேலும் அவர் அதிர்ஷ்டத்தின் கடவுள் என்றும் நம்பப்படுகிறார்.

யானைத்தலையுடன் கணேஷர் இருப்பதற்கும் கதை கூறப்பட்டுள்ளது. அதாவது கணேஷரின் தந்தை கோபத்தின் அறியாமலேயே தனது சொந்த மகனின் தலையை வெட்டியதாக புராணம் கூறுகிறது. அதன்பின் திருத்தங்களைச் செய்ய அவர் தனது வீரர்களிடம் தாங்கள் சந்தித்த முதல் விலங்கின் தலையைக் கொண்டுவரச் சொன்னார். அப்போது கிடைத்த யானையின் முகமே பின்னர் விநாயகருக்கு உண்டானது என்று புராணக்கதையும் இங்கு கூறப்படுகின்றது. இத்தெய்வத்திற்கு முக்கிய பிரசாதமாக சிவப்புதாமரை, சிறிய சின்னங்கள், பிரகாசமான ஆரஞ்சு சாமந்திபூக்கள், இனிப்புகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சன்னதியைச் சுற்றி வைத்து வழிபடுவதுண்டு.


மத்திய உலக பாங்காக்கிற்கு அருகிலுள்ள திரிமூர்த்தி சன்னதிக்கு அடுத்ததாக விநாயகர் சன்னதி ஒன்று மீண்டும் உள்ளது. ஆயுதங்களை ஏந்தி மூன்று தலைகளுடன் பொன்நிறத்தில் காட்சியளிக்கும் இந்த இறைவன் தொழில் சார்ந்த மக்களுடன் குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் பிரபலமானவர். ஞானத்துக்காகவும், நல்ல அதிர்ஷ்டத்திற்காகவும் வேண்டி பூக்கள், தூபக்குச்சிகள் ஏந்தி அவர்கள் இந்த கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்.

Ø  சிற்பங்கள்


இவ்வாறே உலகின் மிகஉயரமான விநாயகர்சிலை ஒன்றும் தாய்லாந்தில் உள்ளதைக் காணலாம். சின்மயாகாணாடிஸ்ஜடொல் என்ற பெயரைக் கொண்ட 66 அடி உயரமானதும் 24 அடி உயரமான சிம்மாசனத்தையும் கொண்ட விநாயகர்சிலை இங்குள்ளது. நிலத்திலிருந்து 90 அடி உயரமானதும் 800 மெட்ரிக்டன் எடையுடன் நாகவடிவங்கள் பொறித்துக் காணப்படும் இந்த சிற்பம் இந்தியாவின் கோலாலம்பூரில் உள்ள சிலைகளுக்கு ஒப்பானதாகும்.


சியாங்மாயில் உள்ள டோய்சுதேப் கோவிலில் விநாயகரின் சிலை சியாங்மாயில் ஒரு வணிக செயற்பாட்டின் போது வீதிக்கு வெளியே நடனமாடும் கணேஷின் சிலை

Ø  தாய்லாந்தில்விநாயகர்சதுர்த்தி




கணேஷின் பிறந்தநாள் உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இது வழக்கமாக சந்திர நாட்காட்டியைப் பொறுத்து ஆகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதங்களில் நடைபெறும். விநாயகக் கடவுளுக்குரிய முக்கிய விரதமாக சதுர்த்தி அமைகின்றது. இந்த விரதத்தினை தாய்லாந்து மக்களும் மிகச்சிறப்பாக அனுஷ்டித்து வருகின்றனர். Raminthara Bangkok சிவன் கோயில் மற்றும் NakhonNayok விநாயகர் ஆலயம் ஆகிய இரு இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்ஆலயங்களில் விரதத்தின்போது வண்ணமயமான குங்குமப்பூக் கொடிகள், பதாகைகள் மற்றும் மலர் அலங்காரங்கள் என்பவற்றுடன் பத்துநாட்கள் பாரம்பரியமான திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. இவற்றைவிட நவராத்திரி காலப்பகுதியிலும் விநாயகக்கடவுளுக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுகின்றன. அங்கு இந்துக்களுடன் தாய்பௌத்தர்களும் இணைந்து கொண்டாட்டங்களில் பங்கேற்கின்றனர்.

Ø  அருங்காட்சியகங்களில் விநாயகர்

தாய்லாந்தில் NakhonNayok, Chiang mai, Sanpatong எனும் மூன்று இடங்களிலுள்ள அருங்காட்சியகங்களில் விநாயகர் வழிபாட்டிற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அந்தவகையில் அழகிய பூந்தோட்டச் சூழலில் Chiang mai என்ற இடத்தில் விநாயகரின் பெயரிலேயே அருங்காட்சியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மண்டபத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணியளவில் வழிபாடுகள் இடம்பெறும். அதில் அனைத்து பக்தர்களும் கலந்துகொள்வர்.

NakhonNayok என்ற இடத்திலுள்ள அருங்காட்சியகத்தில் அழகுகொழிக்கும் வண்ணம் மிகவும் நுணுக்கமாக முறையில் அலங்கரிக்கப்பட்ட உயர்பீடத்தில் விநாயகர்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து வாழ் மக்கள் விநாயகப்பெருமானை மரியாதையோடும் மிகுந்த நம்பிக்கையோடும் அன்றிலிருந்து இன்றுவரை வழிபட்டு வருவதனை இந்த அருங்காட்சியகத்தில் உள்ள விநாயகர் சிற்பம் எடுத்தியம்புகின்றது.

Ø  ஓவியங்களில் விநாயகர்

NOVICA என்ற இடத்தில் எழில் கொஞ்சும் வகையில் விநாயகரின் ஓவியம் ஒன்று புனையப்பட்டுள்ளது. தலையில் கிரீடத்துடன் பழங்காலப் பாணியில் முக்கோண சிம்மாசனத்தில் அமர்ந்த நிலையில் இவ்வோவியம் வரையப்பட்டுள்ளது.

Ø  அரச முத்திரைகளில் விநாயகர்


தாய்லாந்து அரசாங்கமே விநாயகக் கடவுளிற்கு முன்னுரிமை அளிப்பது போன்று தபால் முத்திரைகள் நாணயங்களில் அக்கடவுளின் உருவங்கள் பொறிக்கப்பட்டமை இந்த நாட்டின் விநாயகர் பெறும் முக்கியத்துவத்தை சுட்டுகின்றது. 


தாய்லாந்து நாட்டின் பத்துபாட் காசுகளில் விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து நாட்டின் விநாயகரின் உருவம் பொறிக்கப்பட்ட அரச தபால் முத்திரை இதுவாகும்.

பொதுவாக தாய்லாந்து மொழியில் ஃபிராபிகானெட் என்று குறிப்பிடப்படும் கணேஷ் நுண்கலைகளை நேசிப்பவராக அறியப்படுகிறார், இதனால் அங்குள்ள மக்களிடையே கலைகளும் பிரபலமாகின. அதே காரணத்திற்காக யானைத்தலை கடவுளின் உருவம் தாய்லாந்தின் நுண்கலைத்துறையின் சின்னத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் படைப்பாற்றலை ஊக்குவிப்பார் என்றும் கருதப்பட்டு இன்றுவரை இந்த நாட்டில் இந்து சமயம் செல்வாக்குப் பெற்றுக் காணப்படுகின்றது

உசாத்துணைகள்

1.     சிங்காரவேலு., (1981), 'தென்கிழக்காசியாவில் இந்து சமயச் செல்வாக்கு', சென்னை பல்கலைக்கழக வெளியீடு.

2.     திருநாவுக்கரசு.., (1987), 'தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு', உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை

3.     கணேசலிங்கம்., (1995), 'பண்பாடு- தென்கிழக்காசிய நாடுகளில் சைவசமயம்', இந்து சமய கலாசால அலுவல்கள் திணைக்களம்,கொழும்பு.

4.     https://www.thaitravelblogs.com/2016/08/three-giant-ganesha-statues-in-chachoengsao-province/

5.     http://www.bangkok.com/shrines/ganesha-shrine.htm

6.     https://traveltriangle.com/blog/hindu-temples-in-bangkok/

7.     https://www.thaizer.com/culture-shock/ganesh-in-thailand/