4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

பொன்னாடை - முனைவர் கோ.வ. பரத்வாஜ்

 

பொன்னாடை

நெஞ்சு கழுத்து வலிக்க

விதமாய் நெய்தவனுக்கு போடலங்க

இன்னைக்கு ஒருவனுக்கும்

நாளைமாறியவர்களின் தோளில் ஆடுகிறது

வாக்குக்காகபோட்ட ஆடையை துவைக்கும்மாவு பொங்கலங்க

புகைப்பட வண்ண அழகோடு வாங்கிய பட்டம்

அழுக்காகிக் கொண்டு இருக்கிறது

நெய்தல் கரையில் நடுங்கியவனுக்கு

முத்தாடை அணிவிக்கும் பேகனான மன்னர்கள் எங்கே?

பாரதம், படைவீரர்கள் தியாகிகளுக்கு முவர்ணம்

அமைச்சர்களுக்கு கட்சிநிறம்

சமயதாருக்கு மஞ்சள், சிவப்பு, வெண்மை, கறுப்பு

வனவாசத்தில் மாற்று வாழ்க்கைக்கான பசுமான் புலிதோல்

இப்படியான எப்பொன்னாடைக்கு மதிப்பு?

மக்கள் அணிவிக்கிறார்கள் வாழ்க்கையின் மேடையில்

மகேசன் ஆனவர்க்கு அடுக்கிய மகிழ்ச்சி

கீழேசரிபவர்கள் துண்டு துண்டாக போகிறார்கள்

இம்மண்ணில் பிறக்கும் மழலைகளை வரவேற்கவும்

இறப்பவர்க்கு மறுபிறப்பில் அணிந்துவா என்றது தாய்வீடு

இயற்கையின் இலைகளே உயர்வுதாழ்வு அல்லாத

மீண்டும் அந்த பொன்னாடை வாழ்க்கை எப்பொழுது?

 

முனைவர் கோ.. பரத்வாஜ்,

கவுரவ விரிவுரையாளர்,

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி),

வியாசர்பாடி, சென்னை-600 039.