4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

முறிந்த கிளையும் துளிர்க்கும் - சிந்தியா.தி

 

முறிந்த கிளையும் துளிர்க்கும்

 

 

 

 

 

சிந்தியா.தி,

முனைவர் பட்ட ஆய்வாளர் ,

சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.

அலைபேசி:9080174892

மின்னஞ்சல் முகவரி:sinthuponnai14@gmail.com

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கதை மாந்தர்கள்

Ø  ஜெயராமன்

Ø  ஜானு

Ø  வாசுகி

Ø  பிரியா

Ø  நந்து

Ø  நவீன்

 

              ஜெயராமன் என்பவருக்கு இரு மனைவிகள் ...முதல் மனைவி ஜானுவுக்கு ஒரு பெண் குழந்தை .குழந்தை பிறந்த உடனே ஜானு இறந்துவிட்டாள்... மூன்று வருடம் சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டான்....அவளது பெயர் வாசுகி ..ஜெயராமனும் வாசுகியும் ஒரே அலுவலகத்தில் தான் வேலை பார்க்கின்றனர் ..முதல் ஒரு வருடம் குழந்தையை நன்றாகப்பார்த்துக் கொண்டாள்..ஒரு வருடம் கழித்து வாசுகிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன ....நாட்கள் சென்றன.பிரியாவுக்கு ஆறுவயது கடந்தது .நவீன், நந்துவுக்கு மூன்று வயது ஆனது ...இருவரையும் தனியார் பள்ளியில் சேர்த்தாள். பிரியாவை அரசாங்கப் பள்ளியில் சேர்த்தாள்.

              வாசுகி ,சித்தி கொடுமைகளை சிறிதுசிறிதாக ஆரம்பித்தாள்.தனது பிள்ளைகளுக்கு விலை உயர்ந்த பொருட்கள் ,ஆடைகள் வாங்கித் தந்து வளர்த்தாள்..பிரியாவை  ஒரு வேலைக்காரி போல வளர்த்தாள்.ஆனால்,பிரியாவிற்கு எதையும் சமாளிக்கும் திறமையும் பக்குவமும் உண்டு ..அப்பா மீதும் ,சித்தி மீதும் மிகுந்த பாசம் கொண்டவள் ..தம்பிகளை அம்மா போல பார்த்து கொள்வாள் ..

             வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் பார்த்து விட்டு கல்லூரிக்குச் செல்வாள் ...இரவு , வேலைபார்த்து முடிக்க மணி பன்னிரண்டு ஆகிவிடும் ..அதற்குப் பிறகு படிக்கத் துவங்குவாள் ....காலையில் நான்கு மணிக்கு எழுந்து வேலைபார்ப்பாள்..மிகவும் கடினமான சூழ்நிலை வந்த போதும் சுலபமாகக் கடந்து சென்றாள் ..

        பி.எ.ஸ்சி கணிதம் இளங்கலைபட்டப் படிப்பினை முடித்தாள்....வயது இருபத்தொன்று  முடிந்தது ...இதற்கு பிறகும் இவளை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று வாசுகி முடிவு செய்தாள்....மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தில் மாப்பிள்ளை பார்த்தாள்...இவளுக்கு திருமணத்தில் சிறிது கூட விருப்பம் இல்லை...பிரியாவின் தந்தைக்கும் விருப்பம் இல்லை .ஆனால் அவளது சித்தி கேட்கவில்லை ..

       மாப்பிள்ளைக்கு அனைத்து கெட்ட பழக்கமும் உண்டு ..மது அருந்துதல் .புகை பிடித்தல்..என்று நிறைய உண்டு ...இவளுக்கு இது தெரியாது ....திருமணமும் முடிந்தது ......திருமணம் ஆகி சென்ற வீட்டிலும்..இதே நிலை தொடர்ந்தது...சித்தி கொடுமை சென்று மாமியார் கொடுமை வந்தது ..ஆனால் அவளுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை...காலங்கள் கடந்தது ...பிரியாவின் கணவன் குடித்து விட்டு வீட்டிற்கு வருதல்...அடித்தல் போன்ற செயல் தொடர்ந்தது...பிரியாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது..அவளின் அனைத்து கவலையும் மறைந்தது..குந்தையின் சிரிப்பில் ....சில வருடம் சென்றது...

ஒரு நாள் குடித்துவிட்டுவண்டியிலே வீட்டிற்கு வந்த பிரியாவின் கணவன் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் இறந்து விட்டான்..பிரியாவின் மாமியார் அவன் இறந்ததற்குராசி தான் காரணம் என்று  கூறி வீட்டை விட்டு வெளியே போகச்சொன்னாள்..அவள் அழுது கொண்டே தனது வீட்டிற்கு சென்றாள்....அங்கு சித்தி அவளை உள்ளே வரச்சொல்லாமல் கதவை இழுத்து மூடி விட்டாள் ......ஒரு நாள் முழுவதும் அழுதுகொண்டே ரோட்டில் சுத்திகொண்டிருந்தாள்....பிறகு ஒரு ஆனாதை ஆசிரமம் பார்த்தாள் ...அங்கு சென்று இருப்பிடம்தருமாறு பாதிரியாரிடம்  கெஞ்சினாள்...அவரோ இங்கு யாரும் இல்லாதவருக்குத் தான் இடம்..நீங்கள் தாராளமாக இங்கு தங்கலாம்...என்றார்....

           இவளோ வெளியில் சென்று வேலை பார்த்து சம்பாதித்து வந்தாள் ...தனது குழந்தையின் எதிர்காலம் நினைத்து மிகவும் கவலையுடன் இருந்தாள்...

           பாதிரியார் பிரியாவை அழைத்து ..இந்த சிறு வயதில் ஏன் உனக்கு இந்த நிலைமை என்று கேட்டார்..அவள் தனது வாழ்கையில்நடந்தவற்றை எடுத்துக்  கூறினாள் .....

           உனது ஆசை என்ன என்றார் ......நான் கலெக்டர் ஆகவேண்டும் என்பதே எனது இலட்சியம் என்றாள்......உனது குழந்தை இங்கு நன்றாக ஒழுக்கத்துடனும் பாதுகாப்பாகவும்வளரும் ....நீ பயிற்சி நிலையம் சென்று படித்து உனது இலட்சியத்தை நிறைவேற்று என்றார்.....அவளோ தனது குழந்தையைபிரிய மனம் இல்லாமல்.....அழுதுகொண்டே இருந்தாள் .....உனது குழந்தையின் எதிர்காலம் உனது கையில் தான் என்றார் ..பிறகு சம்மதித்தாள் ..

  இரண்டு ஆண்டுகள் வெளியில் சென்று படித்தாள் அனைத்து செலவுகளையும் பாதிரியார் பார்த்துக் கொண்டார் ..தேர்வில்...முதல் மதிப்பெண் பெற்று தனது இலட்சியத்தை அடைந்தாள்..தனது குழந்தையை பார்த்து கண்ணில் நீர் வடிய பாதிரியாரை வணங்கி நின்றாள்..தனது சொந்த ஊரில் வேலை கிடைத்தது ..தனது குழந்தையைஅழைத்துக் கொண்டு அங்கு சென்றாள் பதவியும் ஏற்றுக் கொண்டாள்....

            ஒரு அலுவலகத் திறப்பிற்கு விருந்தினராக அழைத்திருந்தனர் ....அங்கு தான் பிரியாவின் அப்பாவும், சித்தியும் வேலை பார்க்கின்றனர் ...விருந்தினரை வரவேற்கக் கையில்பூங்கொத்து வைத்துக் காத்திருந்தனர் ....காரைவிட்டு பிரியா இறங்கினாள். அவளது தந்தையும் சித்தியும் ஆச்சிரியமாக அவளை பார்த்து நின்றனர் ..அவளது தந்தை ஏக்கத்துடன் பார்த்தார் ....பிரியா அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டு உள்ளே சென்றாள் ....மேடையில் பிரியா அமர்ந்திருப்பதை அவளது தந்தையும், சித்தியும் பார்த்துக்கொண்டே இருந்தனர் ....அவள் அனைவரையும் ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு கருத்துகளை கூறினாள்..எனது இந்த நிலைமைக்கு எனது  தந்தையும் ,சித்தியும் ஒருகாரணம் என்றாள் இந்த இடத்தில்  ..அவர்களுக்கும் நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன் என்றாள்  ..வாசுகி தலை குனிந்து நின்றாள் ...

            எனக்கு கடவுளாகத்தெரிவது என்னை வழிநடத்திய ஆசிரமத் தந்தை தான்..நான் தனிமையில் கஷ்டப்படும் வேளையில் எனக்கு துணையாக நின்றவர் .. அவரே கடவுள்...என் வாழ்க்கை முழுவதும் அவரை தெய்வத்திற்க்கு நிகராக வைத்திருப்பேன் என்று பாதிரியாரை பெருமைப்பட கூறினாள்....

 

நாம்எந்தஒரு சூழ்நிலையிலும் பிறரை ஒதுக்குதல் கூடாது..

எவரேனும் கஷ்டப்படும் வேலையில் உதவி என்று வந்து நின்றாலும் நம்மால் முடிந்த உதவிகளை செய்தல் வேண்டும் ...

மலையளவு துயரம் வந்தாலும் சோர்ந்து விடாமல் வாழ்க்கையின் இலட்சியத்தை நோக்கி ஓடுதல் வேண்டும் ...இதுவே நம் வெற்றி  ,,