4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஜனவரி, 2022

கிளைக்குத் திரும்பிய மலர் - தி.சிந்தியா

 

கிளைக்குத் திரும்பிய மலர்

 

 

 

தி.சிந்தியா ,

முனைவர் பட்ட ஆய்வாளர் ,

சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர்.

அலைபேசி:9080174892

மின்னஞ்சல் முகவரி:sinthuponnai14@gmail.com

 

 

 



 

 

 

 

கதை  மாந்தர்கள்:

·         வைஷ்ணவி

·         மாரியப்பன்

·         ரங்கநாயகி

·         சஞ்சய்

·         மாதேஷ்

 

* அறத்தூர் என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பம் வாழ்ந்து வந்தது .மாரியப்பன் ரங்கநாயகி என்ற இரு தம்பதியினர் சிறுவயதிலேயே பெரியோர்களால் நிச்சயித்து திருமணம் செய்து கொண்டனர்

மூன்றுமாதங்கள் அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக அமைத்தது .நாட்கள் ஓட ஓட இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் வர ஆரம்பித்தது.

இவர்களுக்கு முதலாவதாக ஒரு பெண்குழந்தையும் ,இரு வருடம் கழித்து ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது ...இருவரையும் மிகவும் பாசத்துடனும் அன்புடனும் வளர்த்து வந்தனர் .....குழந்தைக்கு தேவையான அனைத்தையும் வாங்கி கொடுத்தனர்...

             மாரியப்பன் துணிக் கடையில் பணியாற்றுகிறார்.ரங்கநாயகி வீடு வீடாக சென்று பாத்திரம் துலக்குதல்,துணி துவைத்தல் ,சமைத்தல் போன்ற வேலையைப்  பார்க்கின்றாள்.

             வீட்டிற்குள் குழந்தைகள் இருவரையும் பூட்டி விட்டு வேலைக்கு சென்று வருவாள்.

வைஷ்ணவிக்கு  ஓரளவு பக்குவ வயது வந்தது .அம்மாவுக்கு துணையாக இருந்தாள்.வீட்டு வேலை அனைத்தையும் பார்த்துவிட்டு ..தம்பியை குளிப்பாட்டி உடை அணிவித்து ..பிறகு  அவள் பள்ளிக்குச்  செல்வாள் .

             மிகவும் புத்திசாலியான பெண் .பொறுப்புடன் நடந்து கொள்வாள் .மிகவும் அருமையாக படிக்கக் கூடிய பெண் ....அழகானவள்.

             சஞ்சய் அடங்காதவன் .படிக்க மாட்டான் தினமும் வீட்டுப் பாடம் செய்யாமல் ஆசிரியரிடம் திட்டும் ,அடியும்  வாங்கி கொண்டிருப்பான் ..ஆனால் அக்கா மீது மிகவும் பாசம் கொண்டவன் .குடும்பத்தில் செல்வம் இல்லை என்றாலும் அன்பு மட்டும் நிறைந்த குடும்பமாக இருந்தது.பள்ளி இறுதி வகுப்பில்அதிகம் மதிப்பெண் பெற்றாள்.

அனைவரும் பாராட்டினர் .மேல் படிப்பிற்கு நல்ல ஒரு கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று அவளது தந்தை ஆசைப்பட்டார்....அதனால் பெரிய கல்லூரியில் விண்ணப்பம் போட்டார் ....பிறகு கடன் வாங்கி மகளை கல்லூரியிலே சேர்த்து படிக்க வைத்தார் .....தனது மகன் படிப்பை பாதிலேயே நிறுத்தி வேலைக்கு அனுப்பினார்.

வைஷ்ணவி தனது படிப்பைத் தொடங்கினாள்.இவளோ மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள்.அங்கு வரும் மாணவர்கள் மிகவும்உயர்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் ..அழகாகவும் அழகிய உடைகளையும் அணிந்து வந்தார்கள் ..ஒரு வருடம் கழிந்தது ...இவளிடம் யாரும் நட்புகொள்ளவில்லை...அனைவரும் இவளை கேலி செய்தனர் ..மிகவும் வருத்தமுடன் இருந்தாள்.....இவளும் தன்னை அழகாகவும் ,அழகான புதிய  உடைகள் அணிந்தும்...ஆபரணங்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள் .....

தந்தையிடம் சென்று எனக்கும் இது போன்ற ஆடைகள் வேண்டும் என்று கேட்டாள் .....அவரும் கடன் வாங்கி  அனைத்தையும் வாங்கிக்கொடுத்தார் ...

             புதிய ஆடைகள் அணிந்து கொண்டு கல்லூரிக்குச் சென்றாள்....வகுப்பறையில்உள்ள மாணவர்கள் அனைவரும் வைஷ்ணவியை ஆச்சரியமாகப் பார்த்தனர் ......அவள் அழகில் மயங்கி மாதேஷ் காதல் வசப்பட்டான் ...அவளும் காதல் வசப்பட ...இருவரும் காதலித்தனர் .படிப்பில் வைஷ்ணவிக்கு கவனம் குறைந்தது ...இருவரும் கல்லூரிக்கு செல்லாமல் வெளியிலே சுற்றி திரிந்தனர் ..

      ஒரு நாள் அவள் தம்பி வேலைக்கு செல்லும்வழியில் இருவரையும் பார்க்கிறான் ...அவளை அழைத்து கண்டித்தான் ..பிறகு தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்து செல்கிறான் .அவர் அங்குபடும் கஷ்டத்தை பார்க்கிறாள் ..பிறகு அம்மா வேலை பார்க்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு அவள்படும் அவமானத்தையும் ,கஷ்டத்தையும் பார்க்கிறாள் ......பிறகு மனதார உணர்கிறாள் .. அவள் தம்பி அவளை கட்டி கொண்டு உன் படிப்பில் கவனம் செலுத்து உன்னை நம்பி தான் நம் குடும்பம் உள்ளது என்று கண்களில் நீர் வடியக்  கூறினான்.

இரவு முழுவதும் அழுதுகொண்டே இருக்கிறாள்..சாப்பிடாமல் படுத்து விட்டாள் ..அவள் தந்தை அவளை அழைத்து சாப்பாடு ஊட்டி விட்டார் ..இரு கண்கள் கலங்கி மனம் நொந்து உடைந்து போனாள் ....

பிறகு காலை எழுந்து வீட்டில் உள்ள அனைத்து வேலையையும் பார்த்து விட்டு தனது பழைய உடை அணிந்து கொண்டு கல்லூரிக்கு சென்றாள் .....மாதேஷ் இவளைப் பார்க்க வந்தான் ...இவளோ பார்க்க மறுத்து விட்டாள் ...பிறகு அவனை அழைத்து எனது குடும்பமானது மிகவும் கஷ்டப்படும் ஓர் நடுத்தர குடும்பமே,  நான் படித்து ஒரு நல்ல வேலைக்கு சென்றால் தான் எனது வீட்டு கஷ்டத்தை போக்க முடியும் ...எனது தாய் தந்தை தான் எனக்கு முக்கியம் என்று கூறி என்னை  மன்னித்து விடு என்று கூறி மனம் உடைந்து சென்று விட்டாள்....

              கல்லூரியில்  நன்றாக படித்து முதலிடம் பிடித்தாள்...அனைவரும் பாராட்டினர் ..கல்லூரியில் வேலைக்கான நேர்முகத்தேர்வில்தேர்வு செய்யப்பட்டாள்.. மூன்று ஆண்டுகள் வெளியூர் சென்று வேலை பார்த்தாள்..அதிக சம்பளம் வந்தது ...அனைத்துக் கடனையும் அடைத்தாள் ..மாடி வீடு கட்டி ..தனது தம்பிக்குசொந்தத்  தொழில் தொடங்கித் தந்தாள் ... குடும்பமே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ...

             மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்கு திரும்பினாள் ..வீட்டில் திருமண ஏற்பாடு செய்திருந்தனர் .... அவளும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்...மாப்பிள்ளை யார் என்று கூட அவள் கேட்கவில்லை ...... .திருமணத்தன்று மண மேடையில் தான்  முகத்தைப் பார்த்தாள்..மணமகன் அவளது கல்லூரி காதலன் மாதேஷ் .அவள் கண்ணில் நீர் நிரம்ப தம்பியைப் பார்த்தாள்...அவன் சிறு புன்னகையுடன் ..”உனக்கானது உன்னிடம் வந்து சேரும்.”.என்று கூறி நலமாக வாழ்க என்றான் .......