4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

புதுவையின் புதுஞாயிறு - இரா. விஜயலெட்சுமி

 

புதுவையின் புதுஞாயிறு

புதுவையில் பூத்த பூக்காடு ,

பாரதியின் தாசனான பாவேந்தருக்கு

சமூக முன்னேற்றமே நாதம் !

தமிழினப்பற்றோ தாகம் !

புதுமைக்கும் புரட்சிக்கும் இவர்

முழங்கியதோ சங்க நாதம் !

 

பெண்களுக்குக் கல்வி வேண்டுமென

முழங்கிய புதுவை முரசு !

இயற்கையே சக்தி !

சக்தியே இயற்கை !

எனவியம்பிய இயற்கைக் கவிஞன் !

 

புதுவையின் புதிய ஞாயிறு ,

மூடப்பழக்கத்திற்குப்

போட்டதோ முட்டுக்கட்டை !

விதவா விவாகம் விதந்தோதிய

விந்தை மனிதர் !

தந்தைப் பெரியாரின் வழித்தோன்றல் !

ஆட்டுமந்தையாய்த் திரிந்தவர்களைப்

படிப்படியாய்ப் படிக்கச் சொல்லிப்

பாட்டுத் திறத்தால் பாதை

மாற்றிய பாமரக் கவிஞன் !

கண்டதையும் கிறுக்கும் கவிஞனல்லன் ,

கண்டெழுதும் கவிஞன் !

 

பொருளுக்காகப் பாடாது புகழுக்காகப் பாடாது

பொருளுடன் பாடிய கொள்கை

முழக்கக் குயில் !

 

புதுவைக் குயிலின்

புரட்சியைக் கொண்டுசேர்ப்போம்

புதியதோர் உலகம்

செய்யப் பூத்திருக்கும் புதிய

தலைமுறையினர்க்கு !

 

இரா. விஜயலெட்சுமி,

பட்டதாரி தமிழாசிரியை,

தி.சுக்காம்பட்டி 621 310.

மணப்பாறை கல்வி மாவட்டம்.

திருச்சி மாவட்டம்.

63829 93075.