4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

நிகர் - ப. சின்னச்சாமி

நிகர்

. சின்னச்சாமி

chinnatamil8833@gmail.com

          நீலவண்ணம் பூசப்பட்ட இரண்டடுக் குகளைக் கொண்ட நேர்த்தியா கவடிவமைக்கப்பட்டு ஊரின் நடுவில் ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தது அந்தவீடு. ஊரில் உள்ள எல்லா வீடுகளையும் பார்த்து விடவேண்டு மென்றால் இந்த வீட்டின் மொட்டை மாடி ஏதுவான ஒரு இடம். இந்த வீட்டைக்காணும் ஒவ்வொரு வரும் ஆசையுடனும் கோபத்துடனும் ஆதங்கத்துடனும் கடப்பதும், நோட்டமிடுவதும் இயல் பாகிவிட்டிருந்தது. அதுவருவாய் அதிகாரி (R.I) வீடு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகியிருந்தது.

          “ஏன்டாபழனி மாட்டு கொம்புக்கு பெயிண்ட் அடுச்சுட்டியா?” என்றுதன் அப்பாவயதிருக் கும்பழனிச் சாமியைப் பார்த்து கேட்டான் கணபதி,

இல்லைங்க, இன்னு கொஞ்சம் இருக்குதுங்கஎன்றார் பழனிச்சாமி.

பழனிச்சாமி என்ற முழுபெயரை பழனி என்று சுருக்கிக் கூப்பிடுவது கணபதிக் குப்பழகிப் போயிருந்தது. தன்னுடைய பெயரில் உள்ளசாமியைக்கணபதியின் பெயருக்குப் பதிலாகக் கூறுவது பழனிச்சாமிக் குப்பழக்கப் பட்டிருந்தது.        

கணபதி அந்த ஊரின் பெருந்தலை. இருபத்தைந்து ஏக்கர் தென்னந் தோப்புக் கும்பத்து ஏக்கர்நன் செய்பூமிக்கும் உரிமையுடைய நிலக்கிழார். பிரதானகட்சி ஒன்றில் பேரூராட்சி பொறுப் பாளராக இருப்பதால், ஊரில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இவன் தலையீடு நிச்சயம் இருக்கும். கட்டப் பஞ்சாயத்து செய்வதை கௌரவமான தொழிலாகப் பார்த்து வருகிறான். அம்பேத்கர் நகரில் வசிக்கும் பெரும்பான்மையினர் இவனின் சொற்படி நடக்கும் கிளிப் பிள்ளைகள் தான்.

          விவசாயபூமிக்குள் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப் படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவப்புச் சட்டை விவசாயப் போராட்டத்திற்கு, (அம்மின் கோபுரம் அமைப் பதற்குதனது தென்னந் தோப்பிற்குள் அளவு போடப் பட்டிருந்ததால்) வெள்ளையும் சொள்ளையுமாகக் கலந்து கொண்டு தனது எதிர்ப்பைத் தெரிவிக்கச் சென்றிருந்தான். கொசுறுகளாக அவரின் விசுவாசிகளையும் ஓட்டிச் சென்றிருந்தார்.

அங்கு அவனுக்கு உரையாற்றகிடைத்த சொற்ப நேரம் போதாமலிருந்தது. தானிருக்கும் கட்சி தான் இந்ததிட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதால் எதுவும் பேச முடியாமல்வி சுவாசிகளுக்கு அடிமை போதை யேற்றி விட்டு நழுவிக் கொண்டான். அம்பேத்கர்நகரில் இந்தவருடம் நடத்தப் படுகிற பொங்கல்விழாவை, தனது அரசியல்பலத் திரட்டலுக்கான தாகப்பயன்படுத்திக் கொள்ளதிட்ட மிட்டிருந்தான்.

          “என்ன பழனி இந்த வருஷொ உங்க ஏரியால பொங்கல்ஃபங்சன்  இருக்கா?”

          “இருக்குதுங்க, இந்தவாட்டி நல்லாபண்ணிடனும்னு வேலசெஞ் சுட்டிருக்காங்கசாமி

அம்பேத்கர் நகரில் நடக்கும் பொங்கல்விழா 35ஆவது  ஆண்டாக நடக்கவிருக்கிறது. கரன்தொடங்கிவைத்த இந்த விழாவானது, தைப்பொங்கல் திருவிழா வின்கடைசி நாளானபூப் பறிக்கும் திருநாளில் நடந்தேறுவது வழக்கம். அவரது இறப்பிற்குப் பின்னும் பல முரண்பாடுகளையும் இன்னல்களையும் கடந்து வருந்தோறும் நின்ற பாடில்லாமல் தொடர்ந்து அம்பேத்கர் நகர் இளைஞர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

          காலையில் விழாதொடங்கும் முன்கரனின் சமாதிக்குச் சென்று கொடி யேற்றி விட்டு வந்த பிறகுதான் விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் ஆடல் பாடல், கும்மியடித்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். மாலையில் கரன், அம்பேத்கர், பெரியார், காரல்மார்க்ஸ் படத்திறப்பு, நீலவண்ணக் கொடியேற்றுதல் என நிகழும். பிறகு முன்னிலை வகிப்பவர், சிறப்பு விருந்தினர் உரையுடன் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றவர், கலந்து கொண்டவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். அதுமுடிந்த பிறகுகலை நிகழ்ச்சி நடைபெறும்.  இதுவே வருடந்தோறும் நடக்கும் வழக்க முறையாகும்.

கரன் இவ்விழாவைத் தொடங்கும் போது மேற்குவழவு, கிழக்குவழவு எதிலும் இவ்வாறு நடந்ததில்லை. “அவனுகள விடநாம எதில கொறஞ்சவங்கஎன்று அதன் பிறகு இருவழவுகளிலும் நடத்தத் தொடங்கினர்.

          இந்தப் பொங்கல் விழாவில் எப்படியும் தனது அரசியல் பேச்சுக்கான ஒத்திகையைப் பார்த்து விட வேண்டியது தான் என்ற முடி விலிருந்தான் கணபதி.

யாராவத கூப்பிட்டிருக்கீங்களா?” என்று பழனிச்சாமியைக் கேட்டான்.

          அதுதெரிலீங்க, எல்லா பசங்கபாத்துக்குறேன்னு சொல்லிப்புட்டானுங்க

          “உம்பயஏதோ படிப்பு சொல்லிக்கொடுக்குறேன்னு, பசங்கள காட்டுவேலைக்குபோக வேண்டாமுனு சொல்லீட்டிருக்கானாமா, நீதா எங்கப்பன வாழவெச்ச, இப்ப என்ன வாழவெக்குற, ஆனா உம்பைய... என்று இழுத்தான் கணபதி.

          “என்ன பண்றதுங்க சாமி படிப்பு முக்கியமில்லீங்களாஎன்று சொல்லிவிட்டு மாட்டை விசுக்கென இழுத்து கட்டுத்தரைக்கு நடந்தார் பழனிச்சாமி.

          “உம்பைய அன்னைக்கு எகிறுனதுக்கு கீழபோட்டு மிதுச்சுருப்ப, பாவம்னு விட்டுட்ட.”

          “தனது அப்பாவை வாடா போடானு வயசுல சின்னப்பையன் கூப்பிட்டா பையனுக்கு கோபம் வராம என்ன வரு. அன்னைக்கே கணபதிகிட்ட வேலைக்கு போகாதப்பானு சொல்லி கோவுச்சுகிட்டா. என்னபண்றது நமக்கு பழகிபோச்சுஎன்று மனதிற்குள் முணகிக் கொண்டார் பழனிச்சாமி.

விசுவாசிகளின் மூலம் தன்னை சிறப்பு விருந்தினராக ஏற்பாடு செய்து கொண்ட கணபதி, ‘யாருக்கும் வாய்ப்புதராமல் நாமலே அதிகநேரத்தை எடுத்துக்கணும்என்று மனதிற்குள் திட்டமிட்டுக்கொண்டு வீட்டிற்குள் போனான். மேற்கு, கிழக்கு வழவுகளுக்குச் செல்வதைவிட இங்கு கலந்து கொண்டு உரையாற்றுவதற்குப் பெரும் ஆவல் அவனுக்கு இருந்தது. அங்கு அவன்தான் விழாவை முன்னின்று நடத்துபவன். இங்கு சிறப்பு விருந்தினன். அத்துடன் இங்கு தான் எதுபேசினாலும் நம்பும் ஆட்கள் இருந்தனர்.

விவசாயம் தங்களால் தான் வாழ்கிறதுஎன்று நம்பவைக்கப்பட்ட விசுவாச இளைஞர்கள், “கம்பெனி வேலைக்குப்போனா நாளுக்கு 300, 350தான் கெடைக்கும். அதுவு அவசொல்ற மாதிரியெல்லா வேலசெய்யனு. இந்த வேலனா நம்ம இஷ்டப்படி இருக்கலா, நெனச்சா லீவுபோடலா, சுதந்திரமா இருக்கலா, நாமவேல செய்யுறத பொறுத்து காசுகெடைக்கும், எப்படியுநாளுக்கு 500க்கு மேலதா சம்பளம்என்று கணபதி சொன்னதைக் கேட்டவர்கள், பட்டப்படிப்பு படித்திருந்தாலும் காட்டுவேலைகளுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருவதை தனது வெற்றியாகக் கருதிக் கொண்டிருந்தான்.

பொங்கல் திருநாளின் நான்காம் நாளில் அதிகாலை 6 மணிக்குமண்ணுரண்டபாடல் அதிக ஒலியுடன் ஒலிக்கத்தொடங்கியது. கணபதியின் காடுவரை கேட்ட பாட்டுச் சத்தத்தில் அவனுக்கு வந்த எரிச்சல், மதிய வெயிலில் தகதகக்கும் தார்சாலையின் கானல் நீர்நெளிவது போன்றிருந்தாலும் அவன் முகம் சிவந்து போவதற்கு வாய்ப்பற்றிருந்தது. அவன் அந்த அளவிற்கு கருப்பு. தாரில் குளிப்பாட்டிவைத்திருப்பது போன்ற நிறம். கிட்டதட்ட அவனது சென்ட் வாசனையும் தார்வாசனையை ஒத்திருக்கும். இன்று மாலை உரையாற்றுவதை எண்ணி தொட்டியில் இருந்த தண்ணீரை வாய்க்குள் ஊற்றி கொப்பளித்து துப்பி ஆற்றிக் கொண்டான்.

கரன் சமாதிக்கு சென்று வந்தபிறகு விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருந்தன. கணபதியின் விசுவாசிகளில் ஒருவனான சின்ராசு கணபதியின் மூலம் தானும் கட்சியில் ஒரு பதவிக்கு வந்துவிட வேண்டுமென்று துடியாய்த்துடித்துக் கொண்டிருந்தான். அவன் விழா நடைபெறத்தொடங்கியதிலிருந்து அனைவரையும் அதிகாரம் செய்து கொண்டிருந்ததைத்தவிர துரும்பைக் கூடகிள்ளிப் போடவில்லை. பானை உடைக்கும் விளையாட்டில் எப்படியாவது அவனது மண்டையைப் பதம் பார்த்துவிட வேண்டுமென்று சரியான தருணத்திற்காகக் காத்திருந்தான் வீரன். ஆனால் சின்ராசு பானையை உடைக்க முடியாமல் போனதால் கலோபரத்தைப் பண்ணி அப்போட்டியை நிறுத்திவிட்டான்.

என்னத்த பேசலாஎன்று யோசித்தவாறு தனது வெள்ளைச் சட்டையைத் தேய்த்துக் கொண்டிருந்தவனின் கை தெரியாமல் சலவைப் பெட்டியின் இரும்புக்கு நழுவியதும் மின்சாரம் விர்ரென்று அவனுள் பாய்ந்தது. விசுக்கென்று கையை இழுத்து உதறிக் கொண்டவன் கோபத்தில் மின்சாரத்தைக் கண்டபடி திட்டினான். ‘எதாவத பேசித் தொலைப்போஎன்று சட்டையைப் போட்டுக் கொண்டு கடிகாரத்தைப் பார்க்கும் போது மணி 4.30 ஆகியிருந்தது.

பறை அடிக்கும் சத்தம் ஒலிப்பெருக்கியிலிருந்து அதிகசத்தத்துடன் அவன் காதுகளை ஆக்கிரமித்தது. “நம்மள கூப்பிட வரதாயாராயிட்டானுக போலரெடியா கிருவோம் என்று தார்வாசனை செண்டை நோக்கிப் போனான். பறை அடிக்கும் சத்தம் அலை அலையாய் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது.

          சின்ராசு வேகவேகமாகத் தனது கூட்டாளிகளுடன் கணபதியின் தோப்புக்குள் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்த கணபதிக்கு திக்கென்றிருந்தது,

          “என்றா சின்ராசு என்ன நீங்கதா வந்துறிக்கிறீங்க

          “ஆமாங்க, இந்த வாட்டி ஜமாப் எதுவு ஏற்பாடு இல்லீங்க

          “என்றா பறை அடிச்சுட்டிருந்தீங்க

          “அது பறை இசைக் கலைக்குழுவாமா, நம்ம பழனிபையந்தா ஏற்பாடு பண்ணித்தந்திருக்கானுங்க

          “அவனுக்கு எதுக்கு இந்த பொலப்பு

          “...................” சின்ராசும், கூட்டாளிகளும் ஒருவர் முகத்தை ஒருவர்பார்த்துக் கொண்டனர்.

          “சரி நடங்கபோவோம்என்று காட்டிலிருந்து கிளம்பினார்கள்.

          கணபதியை அழைத்து வரும் வழியில் கணபதியின் உறவுகள் சிலரையும் அழைத்து வந்தனர். இவர்கள் வருவதை உணர்த்தும்விதமாக, சின்ராசுவின் ஏற்பாட்டில் 1000வாலா பட்டாசு வெடிசத்தம் விழா மேடையை ஆக்கிரமித்தது. சில பட்டாசுகள் புஷ் என்று போயின. அதில் ஒன்று கணபதியின் வெள்ளை வேட்டியை உரசிப்போனதில் கறுப்பு படிந்தது.

          மாலை 6 மணிக்கு குறிப்பிட்டவாறு கொடியேற்றம் நடந்தது. கரன் படத்தைத் திறந்துவைத்து அவர் குறித்து பேசுமாறு கணபதியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கணபதி மைக்கை வாங்கி சின்ராசுவை அழைத்துநாவேற, நீங்கவேற இல்ல, அதனால எஞ்சார்பா சின்ராசுதெறந்து வெப்பாஎன்று சொன்னதும் கணபதியின் விசுவாசிகள் ஆரவாரத்துடன் கரவொலிகளை எழுப்பி, விசில் சத்தத்தைப் பறக்க விட்டனர்.

          சின்ராசு கணபதியின் பெருந்தன்மையை நினைத்து பூரிப்படைந்து முதுகைவளைத்து பம்மிக் கொண்டேசரிங்கஎன்று கரன் படத்தைத்திறந்து வைத்து விட்டு, கணபதியைக் கடந்து விலகி நின்ற பின்புதான் முதுகுத்தண்டை நேர்படுத்தினான். பிறகு அம்பேத்கர் நகரின் பெரிசுகள் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் படங்களைத் திறந்துவைத்து கோஷமெழுப்பியதுடன் சிறப்பான இந்நிகழ்வு முடிந்து விட்டது என்று அறிவிக்கப்பட்டது. அனைவரும் கணபதிக்கும் அவன் உடன் வந்தவர்களுக்கும் நன்றிதெரிவித்து அனுப்பிவைத்தனர்.

          கணபதிக்கு ஏற்பட்ட இந்த ஏமாற்றத்தில் அனைத்து விளக்குகளும் அனைந்து விட்ட மாதிரி தோன்றியது. ‘தன்னை சிறப்பு விருந்தினராக அழைக்கவில்லை சடங்குக்காக அழைத்திருக்கின்றனர்என்று மனதிற்குள் குமுறிக் கொண்டே பல்லை, சோடியம் விளக்கு போட்டதுபோல் காட்டி விட்டு நகர்ந்தான்.

          “நிக்கல் நிக்கல் ஜல்தேரேஎன்ற பாடல் ஒலிக்கப்பட்டதைக் கேட்ட கணபதிக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. “எவனோ இந்த பழனி பையங்கூட சேந்துட்டு இந்த வேலையப்பாக்குறா, யாரு என்னனு சின்ராசுகிட்ட கேட்டுட்டு பாத்துக்கலாம்என்று மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டே தோட்டத்திற்கு நடையைக் கட்டினான்.

          இரண்டு பாடல்கள் முடிந்த பிறகு, ‘இந்தாண்டு சிறப்புரையாற்ற நமது தோழர் R.I. ராஜன் மேடைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறதுஎன்று அழைத்தபோது நாற்காலிகளை வரிசைக்கிரமமாகப் போட்டுக் கொண்டிருந்த ராஜனுக்கு திக் கென்றிருந்ததுடன் ஆச்சரியமாக இருந்தது.

          கணபதிக்கு அந்த குரல் பழக்கப்பட்ட குரலாக இருப்பதை உணர்ந்தான். “அது நம்ம சௌந்தர்யா குரல். அவ எப்படி அங்க. எல்லா அவங்க அப்பன சொல்லனு. முற்போக்குனு சொல்லி சொல்லி தராதரமில்லாமபுள்ளய வளத்தீட்டிருக்காஎன்று எண்ணிக்கொண்டு பழனி பையனுக்கு திமிராயி போச்சு. படுச்சு அரசு உத்யோகத்துக்கு போயிட்டா பெரியாளா, மேலிடத்துல சொல்லி அவன ஒரு வழிகட்டியாகனுஎன்று எண்ணியவாறு தொட்டிக்கடியில் கைகால் கழுவ நின்றவனின் பக்கத்தில் தொப்பென்று விழுந்து உருண்டோடியது காய்ந்துபோன தேங்காயொன்று.

          சௌந்தர்யாராஜனிடம் அரசு தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பிற்கு வந்து கொண்டிருக்கிறாள். சமூக சீர்திருத்த சிந்தனையுள்ள பெண். ராஜனிடமிருந்து புத்தகங்களை இரவல் பெற்று வாசித்து வந்து சாதி, மதம், பாலினம் குறித்து அவனுடன் உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள். ராஜனை வற்புறுத்தி தனக்காக பயிற்சி வகுப்புகளை எடுக்க வைத்திருக்கிறாள். இவள் வருகைக்குப் பிறகுதான் அம்பேத்கர் நகரிலுள்ள சிலர் வகுப்பிற்கு வரத்தொடங்கினார்கள். முற்போக்குச் சிந்தனைகளையும் அரசியல் விழிப்புணர்வுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்படுபவள்.

          ராஜன் குறித்த அறிமுகவுரை முடிந்ததும் ராஜன் பேசத் தொடங்கினான். ‘அனைவருக்கும் வணக்கம்! என்று கூறிவிட்டு தான் படித்து வந்த நிலை, கல்வியின் இன்றியமையாமை, அரசு தேர்வு குறித்த விழிப்புணர்வு பற்றி உரையாற்றி முடிப்பதற்கு ¼ மணி நேரம் பிடித்துக்கொண்டது.

          விவசாயப் போராட்டத்திற்கு கணபதியுடன் இங்கிருந்து ஆட்கள் சென்றிருந்த தகவலறிந்து வேதனைக்குள்ளானான். அதுகுறித்து பேசுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைத்தவன் ஒருநிமிட மௌனத்திற்குப் பிறகு மீண்டும் பேசத் தொடங்கினான்.

          “விவசாயம் தான் நமக்கு உணவளிக்குது, அதனால அதபேணிக்காப்பாதுரது ஒவ்வொருத்தரோடகடம,

          “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

          தொழுதுண்டு பின் செல்பவர்

அப்படீன்னு திருவள்ளுவர் சொல்லிருக்காரு. நாமெஉழுறதில்லாம அவங்கள தொழுது வாழ்றோ. நம்ம நாட்டுல சாதி இருக்குறவரைக்கும் விவசாயத்த காப்பாத்துறது கஷ்டம். சாதிங்கறகளைய விட்டுட்டு பயிர அறுவட பண்ணி என்ன பயனிருக்கப் போகுது. விவசாயத்த காப்பாத்த நாமதுணை நிற்போம். சாதியை அவங்கதுடச் செறிஞ்சுட்டுவரட்டுஎன்று கூறி முடிப்பதற்கும், சின்ராசு கூட்டத்தை விலக்கி வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

          “நீ சோறுதான திங்குற, படிச்சு அரசு உத்யோகத்துக்கு போயிட்டா விவசாயம் உங்களுக்கு எளக்களாட்டமா போச்சாஎன்று கத்தி சலசலப்பை உண்டாக்கினான்.

          “நல்லா கேட்ட சின்ராசு, விவசாயத்த காப்பாத்தியே ஆகணும், அந்த எண்ணம் நம்ம மனசுல ஆழமா பதிஞ்சிருக்கோணும். ஆனா நம்ம கிட்ட நிலமிருக்கா? நாமவெயில் மழைனு பாராம, அவங்க நிலத்துல உழைக்குறோ! பண்ணையத்துல கெடக்குறோ! பயிர் வந்த பிறகு அதெ அறுவட செஞ்சு கொடுக்குறோ! அதுக்கான மரியாதைய அவங்க நமக்கு கொடுக்குறாங்களா? நிலத்த உழுது வெளைய வெக்குற நாமதா உழவனுங்க, வெறும் நிலத்த வெச்சிருக்குற அவங்க நிலக்கிழாருங்க. நம்மள வெறுதினக் கூலியா வெச்சுக்குறததாபாக்குறாங்க. 100 நாள் வேலவர் லீன்ன கூலிய கூட ஏத்தி குடுத்துருக்க மாட்டாங்க. இதே போன வருஷம் பெரியகம் பெனி நம்ம ஊருக்கு வந்தபோது தரிசு நிலத்த நாங்குடுக்குறனு எத்தன பேரு போட்டி போட்டாங்க. அப்பெல்லா தரிசி நிலத்த விளைய வெச்சு விவசாயத்த காப்பத்தனது எத்தனபேரு. சரி அந்த கம்பனியில நம்மப சங்க எத்தனபேரு வேலைக்கு போறீங்க. விவசாயத்த காப்பாத்தோனுனு உண்மையா அக்கறையிருக்குற ஆளுக கூட சேர்ந்து போராடுங்க, அப்பதா அதகுறித்த அறிவு உங்களுக்கு வரும்.”

          “இதா இந்த படுச்சவனுங்க பெரிய மேதையோட்ட பேசுறது, இப்படியே எல்லா சொல்லீட்டு வேற வேலைக்குப் போனா விவசாயம்னு ஒன்னுமில்லாம போயிராதாஎன்று மேடையேறி கேட்டான் வேலு.

          “இதா நா பேசாம இருக்குறது. நா பெரிய மேதையெல்லா கெடையாது சாமி. ஆனாநீ உம்புள்ளைய மேதையாக்கத்தான இப்படி பாடு பட்டுகிடக்குற. நாளைக்கு உம்புள்ளையு இப்படி நின்னு பேசும் போது எவனு இந்த மாதிரி பேசக் கூடாதுனுதாநா இப்ப உங்களுக்கு சொல்லீட்டிருக்குற

சற்று நிதானித்தவன், மீண்டும் பேச ஆராம்பித்தான். “இங்க பாருங்கசும் மாகெடக்குற நிலத்தை யெல்லாபிரிச் சுகொடுக்கச் சொல்லுங்க, அதுல நீங்கவிவசாயம் பண்ணி காப்பாத்துங்க. அதெல்லா கெடக்கட்டு நமக்கு பஞ்சமி பூமினு அரசாங்கத்தால கொடுத்தாங்களே அது எங்கிருக்குதுனு பஞ்சாயத்து லகேட்டுருக்கீங்களா? எவ்வளவு ஏக்கரானு தெரிஞ்சிருக்கீங்களா?” என்று கேள்விகளை அடுக்கியதில் கூட்டம் மௌனித்து நின்றது.

          இது பொது மேடையில் பேசக் கூடாதவிசயம் என்றாலும் பின்வரும் பிரச்சனைகளைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தனது உரையின் இறுதியில்சாதியைக் களையறுப் போம் விவசாயத்தைக் காப்போம்என்று கூறி முடித்ததும் கூட்டம் கரவொலியை எழுப்பி ஆர்ப்பரித்தது.

          தனக்கு இன்று நடந்த அவமானத்தில் உறக் கமற்றுக்கிடந்த கணபதியின் காதில், ஒலிப்பெருக்கி கொண்டு சேர்த்தகரவொலியை, தடுத்துநிறுத் திடகாதிற்குள் விரல்களை நுழைத்தான். குறிப்பிட்ட நேரத்தில் உரையை ராஜன்முடித்துக் கொண்டதால் ஊரில்உள்ள பெருந்தலைகள், படித்தவர்களை அழைத்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அது முடிந்ததும் ஆடல் பாடல்கலை நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா இனிதே நிறைவு பெற்றது.

          அடுத்த நாள் காலை 11மணிக் கெல்லாம் கணபதி R.I. அலுவலகத் திற்குவந்து விட்டான். நேற்று நடந்த நிகழ்வுகள் அவனைரண மாக்கியருந்தாலும் அதிகாரத் தொனியை உடல் முழுக்கபரவவிட்டு ராஜனைபார்க்க அறைக்குள் நுழைந்தான். தான்வந் திருப்பதைக் கண்டும் எழுந்திருக்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் ராஜனைபார்க்கும் போது கோபத்துடன் அவமானமும் தொத்திக் கொண்டது.

          “வாங்க! உட்காருங்க!”

          “நிலமொன்னு விக்கோனு அந்த விஷயமாக உன்னபாத்துட்டு போலா முன்னுவந்தஎன்று அதிகாரத் தோரணையில் பேசினான்.

          “இதபாருங்க! இது உங்க காடோ, வீடோ இல்ல. அரசு அலுவலகம்! இங்கநா அதிகாரி. மரியா தயா பேசுங்கஎன்று ராஜன் சொன்னதும் ஏதொன்றும் செய்ய முடியா தவனாய் தனது அதிகாரத் தோரணையைக் கலைத்தான்.

          “சரிங்கசார்! என்று குரலை நிகர் படுத்தினான். தனக்குக்கும் புடு போட்டுக் கொண்டிருக்கும் பண்ணையாளின் மகனுக்கு வணக்கம் போட்டான் கணபதி.