4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

நிமிர்ந்து நில் - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

நிமிர்ந்து நில்

நிமிர்ந்து நில்

ஐம்பொன் சிலையாகிவிடாதே!

காணாமல் போனால்

மறைபொருள் ஆகிவிடுவாய்

 

காற்றுக்கும் வானுக்கும்

வடிவம் இல்லை.

வகுத்த கோள்களில்

பூதத்தை இழுத்து

வாழ நில்.

 

கசடில் இரண்ட்டி வைக்க முயன்றவன்

உழவன், கற்றவன், ஒழுக்கமானவன்

இம்முத்தரணியில் நிற்க

அதற்குத் தகையானவன்.

 

பாதிப்பான பெண்

முதல் வழக்காடி

கண்ணகி

 

செந்நீராடி குழல் முடிப்பேன்

அத்தண்டனையை உரைத்தாள்

நீதிபதி பாஞ்சாலி

 

இராவணனின் சிறையில்

கண்கண்ட தெய்வ மின்னல்

வருவார் என இல்லத்தரசி சீதா

 

உயிர் போகட்டும்

வெள்ளைத்தோட்டாக்களை

தியாகிகளின் இரத்தம்

சிவப்பாக்கிய மண்ணை

இட்டு நில்.

 

சான்றோன் எனக்கேட்ட தாய்

இந்நாட்டு வீரர்களே!

பச்சை குத்திக்கொண்டு

நில்லுங்கள்.

 

பத்தொன்பது வயசே!

உலக சூட்சமத்தை

எதிர்த்து நில்.

 

பதிமூன்று எண் பயம்

பத்தொன்பதைக் கண்டால்

வராதே!

 

தமிழில் எமனை அழைத்தே!

மிதிக்கிறேன் என

காலைத் தூக்கியவனைப் போல்

துணிந்து நில்.

 

வாழை, மூங்கில்

அறுபட்டாலும்

தன் சுவற்றில்

சரித்திரம் நிற்கும்.

 

உடலில் ஒன்றை

இழந்தாலும்

மாற்றுத்திறனாளியாய் நில்.

 

பிறர் உரைப்பதை நின்று கேள்

அறிவின் கோபுரத்தில்

இருப்பைப் பிடி.

 

உடலின் வெற்றிடத்தை

நிரப்பியே நிமிர்ந்து நில்.

 

பிறர் மொழியில்

குறுந்தகவலைத் தட்டிவிடு.

நிமிர்ந்து நில்என்ற நூலை

நேர்கொண்ட பார்வைக்கு

முனைவர் கோ..பரத்வாஜ்,

மதிப்புறு கவுரவ விரிவுரையாளர்,

தமிழ்த்துறை,

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக் கல்லூரி,

வியாசர்பாடி, சென்னை – 39,

புலனம் மற்றும் தொடர்பு எண்: 94448 78212,

மின்னஞ்சல்: barathwajgv32@gmail.com