4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

இப்படி இருந்தால் எப்படி? - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 


இப்படி இருந்தால் எப்படி?

ஏழையின் வீட்டில்

பட்டிமன்றம்

ஒத்தக் கைப்பேசி

யாருக்கு?

பள்ளிக் கல்லூரி அலுவலகம்

நூறு ரூபாய்க்கு ஒரு ஜிபி

எதனை முக்கியப்படுத்தும்?

சிறுவாட்டைக் கேட்கிறதே

இணையதளத்தின் வாய்

 

இப்படி இருந்தால் எப்படி?

 

விதைகளில்

பச்சைக் குழந்தை தோன்ற

எவ்வளவோ மூலக்கூறுகள் மேல்

4, 8, 100 சாலைகள்

 

இப்படி இருந்தால் எப்படி?

 

வேங்கட இமையில்

கண்ணீர்

அநேக ஊர்களில்அதன்

அங்கத்தின் கனிமத்தை

அறுத்து ருசிக்கின்றனர்.

திருத்தலத்தின் சிலைகளே

இப்படி இருந்தால் எப்படி?

 

இருமல் தும்மல் 2020

விக்கல் கொட்டாவி 2021

கண் தசைத் துடிப்பு 2022

இவ்வாறு மாறினால்

 

இப்படி இருந்தால் எப்படி?

 

கொரோனாவிற்கு வேர்க்கிறதென

கற்ற நூலின் அட்டையில்

வீசுகிறார்கள்

பயந்து ஓடும் எமனிடம்

பேரம் பேசுவதாய் மாறிவிட்டது

 

இப்படி இருந்தால் எப்படி?

                                                                                                     முனைவர் கோ..பரத்வாஜ்,

மதிப்புறு உதவிப் பேராசிரியர்,

தமிழ்த்துறை,

டாக்டர் அம்பேத்கர் அரசு  கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

வியாசர்பாடிசென்னை – 39.

அலைபேசி: 9444878212.

மின்னஞ்சல்barathwajv32@gmail.com