4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

நம்மை அறிய வைக்கும் பூமி திரு. பா. இந்திரஜித்

 

நம்மை அறிய வைக்கும் பூமி

திரு. பா. இந்திரஜித்

இளங்கலை பொருளியல் இரண்டாமாண்டு

தரும்முர்த்தி இராவ் பகதூர்கலவலக் கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி

-    602072

 

 

உயர்ந்தோர் வாழ்ந்த பூமி

வள்ளலை தாங்கிய பூமி

பெருங் கருணையைக் கொண்ட பூமி – இவரை

வாழ்த்தாமல் இருத்தலாகுமோ!

 

காற்று மண்டலத்தை கொண்ட பூமி

நீர், வளங்களைக் கொண்ட பூமி

ஐம்பூதம் நம்மை தாங்கும்  பூமி – இவரை

நினைக்காமல் இருத்தலாகுமோ!

 

தமிழ்மொழி வாழ்கின்ற பூமி – அதனால்,

பாமாலை சூட்டப்பட்ட பூமி – இதனால்,

மகிழ்ச்சி பெற்ற பூமி

நீ இவ்வாறே இரு அம்மா!

 

பால்வெளி பிரபஞ்சம் பல – அதில்,

கோள் செவ்வாய் வெள்ளி நடுவே,

இறைவன் வாழத்துர்ந்த பூமியில்

நாம் பிறத்தல் மோகஷமே!

 

வீர்ரும் உண்டு, நல்நடத்தை மங்கையரும் உண்டு,

எம்மைப் போன்றோரும் உண்டு, ஞானத் தமிழும் உண்டு,

எண்பத்துநாலு லட்சவகை உயிரினங்களைத் தாங்கும்

நம் ஞாலம்போல் பிரபஞ்சத்தில் வேருண்டோ?

 

தம்மைப் பற்றி சிந்திக்க நாழி குறைவு

அக்கம் பக்கம் நினைத்தே செல்கிறது காலம்

வழித்து, மதித்து கேட்பது குறைவு – ஆக,

மாயையில் சூழ்ந்து கிடப்பது அறிது.