4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 மார்ச், 2022

மிதிவண்டி - முனைவர் அர. கண்ணன்

 

மிதிவண்டி


முனைவர் அர. கண்ணன்

இரத்னவேல் சுப்ரமணியம் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

சூலூர், கோவை - 641 402

9865402527

vaanavilkannan@gmail.com

 

 

இரண்டு நாட்களுக்கு முன்புதான் சைக்கிளைப் பஞ்சர் பார்த்தேன். இன்னைக்கும் பஞ்சர் ஆயிடுச்சே புலம்பிக் கொண்டே மிதி வண்டியை மெதுவாகத் தள்ளிச் சென்றான் ராமன். மெல்லிய காற்று பிசுபிசுக்க ..மேலே அணிந்த துண்டு மெதுவாக அசைந்தாட கிராமிய மணம் கமழ மெதுவாக வீடு நோக்கிப் புறப்பட்டார்

காடுகள் புடை சூழ ..அழகிய ஓட்டு வீடுகள் வரிசையாக நிற்க தெருக்களில் கோழிகளும் நாய்களும் விளையாட சுற்றிலும் சிறுவர்கள் பம்பரம் ஆட கண்களால் பார்த்துக் கொண்டே நகர்ந்தார்

டேய் இங்க வாடா மெதுவாக அழைத்தார் ஆனந்தனை

இருப்பா வர்ற..’

சொல்லிக் கொண்டே வந்தான் ஆனந்தன்  நா வேற இன்னைக்கு கபடி விளையாடப் போகனும் பாநீ கூப்பிட்டுட்டே இருக்கற..

ஆனந்தன அரைக்கால் சட்டை மின்ன சிறுவயது முதலே பிடித்த விளையாட்டாகிய கபடி மீது அதிக கவனம் செலுத்தி வந்தான் காட்டம்பட்டி பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிப்பவன் எப்போதும் படிப்பிலும் விளையாட்டிலும் குறைவில்லாமல் கற்பவன்.

அப்பா அப்பா.. இன்னைக்குக் கபடி போட்டி நடக்குதப்பா நா நம்மூர் டிமுல ர்ந்திருக்கறம்பாவாங்கப்பா போலாம்

தன்னுடைய தந்தையை அழைத்தான்அன்றுதான் அவருக்கு சைக்கிள் பஞ்சர் ஆனது நினைவுக்கு வந்தது. யப்பா சைக்கிள் பஞ்சர் ஆயிடுச்சுபோய்பஞ்சர் ஒட்டிட்டுப் போலாம்பா என்றார்

ஆதுக்குல போட்டி ஆரம்பிச்சுடுவாங்கப்பா

                ஏங்க இங்க வாங்க

உள்ளிருந்து மென்மையான குரல் ஒலிக்க திரும்பிப்பார்த்தார் இராமன்அடுப்படியில் கண்களில் கண்ணீர் புடை சூழ வடசட்டியில் ஏதோ தாளித்துக்; கொண்டிருந்தவள் திரும்பி வந்தாள்

கமலா என்ன வேணும்

தன் அதட்டலான பார்வையில் நேராகப் பாhத்தார்.

ஒன்னும் இல்லீங்க

அலமாரிக்கு மேலே இருக்கற அந்தப் பானையைக் கொஞ்சம் இறக்குங்க

ஏண்டி எப்பப் பார்த்தாலும பானையைக் கீழே இறக்கவும் மேலே ஏத்தவுமா இருக்கற

இல்லைங்க

அதுல அதுலதான்..’

எங்கம்மா கொடுத்த நூறுருவா வெச்சிருக்கறஇன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைபுள்ளைக்குக் கறிச்சோறு ஆக்கிப்போடலாம்னு இருக்கற..ரொம்ப நாளாச்சுசொல்லிக் கொண்டே அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள்கமலா.

ராமன் புன்னகைத்தபடியேஏது கறிச்சோறு.

                ஏம்புள்ள கறி என்னடான்னா நானூறு ரூயாவாய்க்கி விக்குது

நீ என்னடான்னா நூறு ருவாய்க்கு கறி வாங்கலாங்கறஎன்று புலம்பிக் கொண்டே மேல் முகட்டைப் பார்த்தான்

ஆனந்தா..ஆனந்தா வாடா.. கபடி போட்டிக்கு நேரமாச்சு..என்று தன் நண்பனை அழைத்தான் மகேந்திரன்

கால்சட்டையை மேலே ஏற்றியவாறு அப்பாவிடம் ஓடினான்.. அப்பா மகேந்திரன் வந்துட்டான்பா நா கபடி போட்டிக்குப் போறம்பாஅனுமதிக்காக காத்திருந்தான்.டேய் இருடா.. உங்கம்மா இன்னைக்குக் கறிச்சோறு ஆக்குற தின்னுட்டுப் போடா

போப்பா எனக்குக் கறிச்சோறு வேணாம்

                சரி..சரி போ.. கவனமா வெளையாடுறா அப்பாவின் குரலில் அவன் மீதான அன்பு கண்களில் தெரிந்தது

போப்பா … .போட்டி ஆரம்பிச்சுடுவாங்க என்று சொல்லிக்கொண்டே நிலநிறக் கால்சட்டை  அணிந்து கொண்டு விர்ரென்று வீட்டைவிட்டுக் கிளம்பினான்

கமலா மெதுவாக தூக்குப்;போசியை எடுத்துக்கொண்டு பார்வதியுடன் கறிவாங்க கடைக்குச் சென்றாள்ஏண்டி பார்வதி நேத்து என்னமோ உம்புளள்ய  பொன்னுப்பார்க்க வந்தததா பக்கத்து வீட்டு கெழவி சொன்னா மாப்பிள்ளை எந்த ஊரு.. என்ன பன்றாரு

இல்லைங்க்கா.. திடிர்னு எங்க அப்பாவீட்டு சொந்தன்னு சொன்னாங்க அதான் மறுக்காம சரி வாங்கன்னு சொல்லிட்ட .. எங்க வூட்டு மனுச எப்பப் பார்ர்த்தாலும் வேலைக்குப் போகாம வூட்டுலய உட்காந்திட்டு இருக்காரு புள்ளைக்கு காலா காலத்தல நல்ல எடத்துல கலியாணம் பண்ணோன்னு கொஞ்சங் கூட யோசனை இல்லாம இருக்காருக்கா

சரி.. சரி.. மாப்பள என்ன பன்றாரு..

மாப்பிள்ள சைக்கிள் ரி;ப்பெரு கடை வச்சிருக்காருக்கா..

அதுல வருமானமிருக்கா ..

ஏதோ தொழில் ஒன்னு கையில் வச்சிக்ககுறாரன்னுதா சரின்னு சொல்லிட்டேன் இருவரும் மெதுவாக கறிக்கடையை நோக்கிப் பாhத்தனர்

கறி குறைவாகவே இருந்தது கமலாக்கா எத்தன கிலோக்கா எடுக்கற

இல்லடி வூட்டுக்காரருக்கு இந்தவார வருமானமில்ல.. ஏதோ அலமாரில் நூறுருருவா வச்சிருந்த அதத்தா எடுத்துட்டு வந்த ..

சரிக்கா நா வேணா இன்னு கால் கிலோக்குக் காசுகொடுத்தர நீ பெறகுகூட குடு சொல்லிக் கொண்டே நகர்ந்தாள்

                கடைக்காரறே நல்ல எளங்கறியா போடு .. முத்துனதா போட்றாத.. ஏனா வேகவைக்க முடியாதுஎன்று சொல்லிக் கொண்டே இருவரும் வீட்டிற்கு வந்தனர்!

என்னங்க கடைக்காரறே இந்த வண்டி என்னன்h எப்பப் பார்த்தாலும் பஞ்சர் ஆயிடுது என்னன்னு பாருங்க ? சரிங்க  அதோ அங்க உட்காருங்க ? சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் வெங்கட்ராமன் ஐயா உங்க வண்டி டயர்ல ஆணி ஏத்தீருக்கு அதா அடிக்கடி பஞ்சர் ஆகுது .... அப்படியா சேதி ..நீங்க வேணா டயர மாத்தீடுங்க என்றார் கடைக்காரர்!

எல்லா இந்த அதிகாரிங்கள சொல்லனும்.. ஒரு வேலையைக் கூட ஒழுங்காப் பாக்கமாட்டங்கறாங்க..

அரசியல்வாதிகள்.. ஓட்டுக் கேட்க மட்டும் வர்றாங்க தொண்டர்களுக்குப் பிரியாணியும் கோழிக்கறியும் போட்டு ஓட்டு வாங்கிடறாங்க மக்களோட பிரச்சனை என்னன்னு தெரியாமா பதவிக்கு வந்தறாங்க.. என்று புலம்பிக்கோண்டே தன் வேதனையை மனதுக்குள் சொல்லிக் கொண்டே டயர் மாற்றாமல் வீடு திரும்பினார்

கமலா குருமிளகு, சீரகம் வரமிளகாய் மல்லி என வறுத்து குழம்பு வைத்தாள் தெரு முழுதும் கறிக்குழம்பு வாடை மெல்ல காற்Nறூடு உறவாடியது

கமலா கமலா ஏம்புள்ள குழம்பு ஆயிடு;ச்சா

ஆயிடுதுங்கஉள்ளிருந்து மசாலா வாசனையுடன் குரலும் ஒலித்தது

சரிசரி வா சாப்பிடலாம் எங்க ஆனந்த வந்துட்டானா

அவனெங்க வந்தா என்னு பன்றோனோ..தெரியல என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்

கபடி.. கபடி .. என்ற சத்தம் ஆடுகளம் முழுதும் ஒலிக்க சிறுவர்களும், இளைஞர்களும், பெரியொர்களும் கபடிப் போட்டியைக் கண்டு ரசிக்க கூடியிரநதனர்.. ஒவ்வொரு அணியினரும் தங்கள் அணி வெல்ல வேண்டும் என்ற முனைப்பொடு பயிற்சி எடுத்துக் கொண்டனர்

ஆடுகளம் முழுதும் வண்ணத்தோரணங்கள் கட்டி அலங்கரித்திருந்தனர் ஆடுகளம் சுற்றிலுமு; தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.. போட்டி தொடங்கும் நேரத்தைப் போட்டியாளாகள் அறிவித்தனர்.. சிறுவர்கள் ஆடுகளத்தின் முன்னர் குவிந்திருந்நதனர் ஆனந்தனும் மகேந்திரனும் தங்கள் அணிக்காக விளையாடினர் 

ஆடுகளத்தில் ஆனந்தன் கபடி கபடி.. என்று மூச்சவிடாமல் சொல்லிக் கொண்டே தன் ஆட்டத்தை எதிர் அணிமீது செலுத்தினான்.. பள்ளியில் பயிற்சி எடுத்த காரணத்தால் அவனது ஆட்டம் வேகமாக இருந்தது. .. அவனது ஆட்டத்தில் தமிழனின் வீரம் செழித்திருந்நது

விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தின் நடுவே எதிரணியினர் மீது தன் காலைத் தூக்கி ஆடும்போது எதிர்பாராத விதமாக அவனது கால் செயலிழக்க அங்கேயே விழுந்தான போட்டி நடுவர் விசிலடிக்க எதிரணியினர் ஆனந்தனை விடுத்தனர் போட்டி நடுவரும் போட்டியாளர்களும்  ஆடுகளத்தில் நுழைந்து ஆனந்தனைத் தூக்கினர் கால் தரையில் ஊன்றவில்லை காரை வரச்சொல்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்

நேரம் நாலு மணியைக் கடந்திருந்தது.. மகன் மீதான அன்பு தெருப்பார்வையில் நங்கூரமிட்டிருந்தது கமலா தன் பார்வையால் ஏதோ ஒன்றை எதிர் நோக்கியிருப்பதும் தெரிந்தது

மாலையில் வீட்டு முற்றத்தில் கார் வருவதைக் கண்ட ராமன் மனதில் கவலை நிழலாடியது கார் வந்து நின்றதும் உள்ளே பார்த்தான் காலில கட்டுப்போட்டிருந்ததைக்கண்டு  மனம் வெதும்பி; கமலா என்று உரக்கக் கத்தினான்

கமலா தலைதெறிக்க ஓடி வந்தாள்

இங்கப்பாருடி நம்ம மகன..

கறிச்சோறு செஞ்சு சாப்பிடக் கூட வராம வெளையாட்டு வெளையாட்டு ன்னு போனியே நெலமையப் பாத்தியா சொல்லிக் கொண்டே காரிலிருந்து ஆனந்தனைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்

போட்டியாளர்களிடம் எப்படி நடந்தது என்று கேட்க வேண்டி கேட்டுக் கொண்டே தன் இயலாமையைப புரிந்து கொண்டு அவர்களுக்கு நன்றி கூறினான். இராமன்.

அப்பா எனக்கு நல்லாயிருமாப்பா நா மறுபடி வெளையாட முடியுமா என்று கம்மிய குரலில் முனுமுனுத்தான் ஆனந்தன்.. அவனது நிலையைக் கண்டு பெற்றோர் வருந்தினர்..

நாட்கள் நகர்ந்தன.. வாரங்கள் ஓடின.. மாதங்கள் கழிந்தன ஆனால் ஆனந்தன் கால்மட்டும் சரியாகவில்லைமருத்துவர் அவனுக்கு கால்நரம்பின் செல்கள் அழிஞ்சு போச்சு அதனால அவனால இனி நடக்க முடியாது என்றார்

யக்கா யக்கா இங்க வாக்க எம்புள்ளைக்கு அடுத்த வாரம் கலியாணங்ங்கா.. என்று சொல்லிக;கொண்டே பத்திரிக்கையை நீட்டினாள் பார்வதி

இங்கப்பாரிடீ என் நெலமைய. ஒன்னுக்கு ஒன்னு கணணுக்குக் கண்ணுனு பெத்து வளத்தி இப்ப படுத்த படுக்கையா கெடக்குறா.. என்று  தன் மன பாரத்தை இறக்கி வைத்தாள் கமலா

மகனின் நிலைமையைக் கண்டு தன்னுள்ளே மனம் வெதும்பிய ராமன் அரசால் வழங்கப்படும் இருசக்கர தள்ளு வண்டியை தனது மகனுக்குக் கிடைக்க வேண்டி மாதக்கணக்கில் அன்னூர்; தாசில்தார் அலுவலகத்திற்கு மிதிவண்டி சகிதமாக மாதக்கணக்கில் அலைந்து தன் விண்ணப்பததை தாசில்தாரிடம் நேரிலே வழங்கினான்

இராமனின் நிலையைக் கண்ட தாசில்தாரும் தன் வாய்வாhத்தையாக உங்களுக்கு எப்படியாவது வண்டி கிடைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி தன் கடமையை ஆற்றச் சென்றார்

ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்த மக்களின் அமைச்சர் ஒருவாரத்தில் காட்டம்பட்டி கிராமத்திற்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்குவார் என்ற செய்தி ஊர் முழுதும் பரவியது

அந்த நாளும் வந்தது முந்தினநாள் இரவில் அப்பாவிடம்

அப்பா.. அப்பா நலத்திட்ட உதவினா என்னப்பா ஏதாவது காசு கொடுப்பாங்களா இல்லை டிவி கொடுப்பாங்களா எதுவுமு; தெரியாமல் கேட்டான்

இல்லைப்பா நாளைக்குத் தருவாங்க.. நீயே பாரு என்று அவனுக்குக் கிடைக்கும் பொருளை மனதில் நினைத்துக் கொண்டு எதுவுமு; தெரியாதவராய் கண்அயர்ந்தார்

விடியற்காலை பறவைகள் மகிழ்ச்சியாகக் கூவிடஇளங்கதிர்கள் மெதுவாக தன் ஒளிக்கற்றைகளைக் காட்டிட மெல்ல மெல்ல இருள் விலகி ஒளி வருவுதைக்கண்டு சற்றெ கண் விழித்தான் ஆனந்தன்இன்று நடக்கப் போகும் நிகழ்வைக் கண்டிராத அவன் மனதில் ஆயிரம் கற்பனைகள் வந்து வந்து Nபுhயின

தோரணங்களும் பந்தல்களும் கட்டப்பட்டு ஒலிபெருக்கிகள் வாயைப்பிளந்து கொண்டு பாடலை ஒலிக்க பக்கத்து கிராமங்களில் இருந்து ஊர்ந்து வரும் எறும்புகளாய் நலத்திட்ட உதவிகள் வாங்குவதற்காக மக்கள் வந்து கொண்டிருந்தனர்கமலாவும் தன் மகனுக்கு புத்தாடை அணிவித்து அழைத்து வந்தாள்

ராமன்..மிதிவண்டியை ஏக்கத்துடன் பார்த்து என்மகனை அழைத்து செல்கிறேன்.. எங்காவது பஞ்சர் ஆயித் தொலைச்சிடாதே என்றான்வீட்டு வாசலில் இருவரும் நின்று கொண்டு போவோரை பார்த்;துக் கொண்டே மகனைத் தூக்கி சைக்கிளில் உட்கார வைத்தனர்

விழா மேடை நெருங்க நெருங்க ஆனந்தன் கண்களில் ஆனந்தம் பொங்கியது உரத்த குரலில் மக்கள் பேசும் ஒலிகள் காற்றோடு கலந்து ஒலிபெருக்கியில் ஒலித்தனஒவ்வொருவரின்; பெயihயும் அழைக்கும் சத்தம் கேட்க கேட்க அமைச்சர் நலத்திட்டங்களை வழங்கினார்

ராமன்..ராமன்...ஒலிபெருக்கி அழைக்க மேடைக்கு தன் அன்பு மகனைத் தோளில் தூக்கிக்; கொண்டு ஏறினான் மேடையில் அமைச்சரைக் கண்டதும் கண்களில் நீர்பெருக.. வார்;தைகள் வரவில்லை

                மாறாக ஆனந்தன் பேசினான்

வணக்கம் ஐயா..! எனக்கு என்னங்க ஐயா கொடுக்கப் பொறீங்க என்றவுடன் மேடையில் இருப்போரின் கண்களில் சற்றே கருணை வழிந்தொடியது கருப்பு நிறத்தில் மெத்தென்ற இருக்கiயில் ஆனந்தனை உட்காரவைக்க அவனால் எதுவும் பேசமுடியவில்லை

ராமன் கைகளைக் குவித்து ஏதோ நன்றிகளை காணிக்ககையாக்கி கொண்டு..மேடையிலிருந்து கீழே இறங்கினான

கமலாவும் பின்னால் சக்கர நாற்காலியைத் தள்ளிக் கொண்டு மெதுவாக வந்தாள் இராமன் மிதிவண்டியைத் ஓட்ட முற்பட பஞ்சர் ஆகியிருந்தது!