4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

கீழடி எங்கள் தாய்மடி - முனைவர் கோ. வ. பரத்வாஜ்

 

கீழடி எங்கள் தாய்மடி

கீழடி எங்கள் தாய்மடி

பாண்டிய தமிழர்களை வளர்த்த அடி

 

புவியின் அடுக்கிலே அம்மடியின்

ஈரம் உலரவில்லை

 

நாகரிகத்தைப் பெத்து

நாற்திசைக்கும் சுத்து

 

எத்தனைக் குழிகள் தோன்றினாலும்

அம்மடியில் பழந்தான்

பல்லாங்குழி ஆடிப்பார்

 

புலக்கத்திற்கான விதை பானை

அலங்கரிப்புக்கான விதை பல அணிகலன்கள்

கட்டடகலைக்கான விதை செங்கல் மாளிகை

பட்டறிவுக்கான விதை வரைந்த தமிழ்மொழி

உழவுக்கான விதை காளை

 

இன்னம் எத்தனை விதைகளோ!

அவள் முந்தானையில்.

 

அருஞ்சுவை கொண்ட மடியில்

உப்பு இருந்தால்

தமிழர்களின் வரலாறு

குப்பையில் இல்லை.

 

தமிழை உருட்டி விளையாடினாலும்

தாயம் ஒன்றே தான் .

 

முந்தைய மடிக்கணினியின் கூகுள்

இக்கீழடியில் அறிவார்ந்த விளையாட்டுகள்

எத்தனையோ!

 

அநேக மொழிகளுக்கும்  நாடுகளுக்கும்

துப்பு இருக்குமா? அல்ல

அன்னை மடியில்

இக்கீழடிக் குழந்தையின்

நட்போடு வாணிப உறவானார்கள்.

 

தமிழ், சங்கம், அரசர்கள்

இவை மூன்றும்

பல நூற்றாண்டுகளை

நூற்த்துக்கொண்டே செல்லும்.

கிழியாத கீழடிஎங்கள்

தாய் மடி ஓங்குக!

 

 

                                                        முனைவர் கோ. . பரத்வாஜ்

                                                        மதிப்புறு உதவிப்பேராசிரியர்

                                                        தமிழ்த்துறை,

                                                        டாக்டர் அம்பேத்கார் அரசு கலை

                                                        மற்றும் அறிவியல் கல்லூரி,

                                                        வியாசர்பாடி, சென்னை-39.