4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

சங்கச் செய்யுள் மரபும் தொல்காப்பியச் செய்யுள் மரபும் - பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்

 

சங்கச் செய்யுள் மரபும் தொல்காப்பியச் செய்யுள் மரபும்

பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை.

 

Abstract                         

Poetical tradition of Cangam literature and Tholkappiyam

Cangam poetry is the earliest evidence of tamil literature tradition. It consists anthologies of   Ettu thokai and Patthuppattu The period of this literature is now considered from 200 BC to 300 AD. Tholkappiyam is a Grmmatical work of this poetry This book contains Eluttathkaram (on Letters) Collathikaram (on words) and Porlathikaram (on subject of the poetry /literature) Each part of the book divided in to 9 chapters. If we compare the poetry and tholkappiyam we can understand the unity and the differences between these writings Tholkappiyam says some other traditions also. This article is exploring these aspects 

Key words- Cangam poetry. Tholkappiyam, Grammatical tradition Sutras. linguistics, nature of poetry, Eight Anthologies



சங்கச் செய்யுள் மரபும் தொல்காப்பியச் செய்யுள் மரபும்

                       

 சங்கச்செய்யுள்கள் தமிழ் இலக்கியத்தின் மிகப்பழைய இலக்கியச் சான்றுகளாகும். எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் இதில் அடங்கும். இவற்றின் காலம் இன்றைய நிலையில் கி. மு 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 3ஆம் நூற்றாண்டு வரையினதாகும் எனக் கருதப்படுகிறது

தொல்காப்பியம் இந்தப் பழந்தமிழ் இலக்கியத்தின் செய்யுள் மரபை விளங்கிக் கொள்வதற்குப் பயன்படும் இலக்கண நூலாகும். இத்தொல்காப்பியம் அதன் இன்றுள்ள வடிவத்தில் எழுத்ததிகாரம, சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1600 நூற்பாக்கள் உள்ளன எனினும் உரையாசியர்களுக்கிடையே நூற்றாண்டுகளின் எண்ணிக்கையில் வேறுபாடுண்டு.

     இத்தொல்காப்பியத்தின் காலம் பற்றி முன்னுக்குப்பின் முரணான கருத்துகள் உள்ளனதென்னிந்தியாவின் மொழியியல் நிலைமைகளை அவதானிக்கும்போதும் சாசனவியல் சான்றுகளுடன் தொல்காப்பியத்துக்கும் ஆதி சமஸ்கிருத நூல்களுக்குமிடையே உள்ள தொடர்புகளைப் பார்க்கும்போதும் இதன் காலம் கிமு 3ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி.6 ஆம் நூற்றாண்டு வரையிலானதாகலாம் என்பர். (தகனோபு தகசாகி 1988) தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் களவியல் கற்பியல் பொருளியலில் வரும் நூற்பாக்களில் காமசூத்திரத்தினதும் மெய்ப்பாட்டியலில் நாட்டிய சாத்திரத்தினதும் செல்வாக்கு உண்டென்பர் ஜே. மார்

இத்தொல்காப்பியம் பல கைகளால் ஆக்கப்பட்டிருக்கலாம் என்பது ஜே. ஆர் மாரின் கருத்து ஆகும். எனினும் தொல்காப்பியம் இறுதி வடிவம் பெற்ற காலம் கி.பி.5ஆம் நூற்றாண்டினது என்பது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

 

தொல்காப்பியம் கூறும் செய்யுள்மரபு

 சங்க இலக்கியங்கள் அவற்றின் பொருளமைதியின படி அகப்பாடல்கள் புறப்பாடல்கள் என வகுக்கப்படுகின்றனஉருவம் உள்ளடக்கம் இரண்டும் இணைந்ததே செய்யுள். உருவம் தனியாகவோ அல்லது உள்ளடக்கம் தனியாகவோ செய்யுளாக முடியாது. சங்கச் செய்யுள்களம் அவ்வாறே.

 தொல்காப்பியம் முதலில் பாடல்களின் உள்ளடக்கத்தையும் (அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல்) அதன் அழகியலையும் (உவமவியல, மெய்ப்பாட்டியல்) கூறி பின்னர் உருவத்தின் பண்புகளையும் (செய்யுளியல்)மொழி மரபுகளையும்   எடுத்துக்கூறி பழந்தமிழ்ச் செய்யுளமைப்பைத் தெளிவாக்குகிறது.

          தொல்காப்பியப் பொருளதிகாரம் செய்யுளின் பொருளை அகம், புறம் என இருபிரிவாக்குகிறது. அப்பிரிவுகள் திணை (அகத்திணையியல் - என அழைக்கப்படுகின்றன. பொருளதிகாரத்தில வரும் அகத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் என்பன அகத்திணைக்குள் அடங்குகின்றன. புறத்திணையியல் புறம் சார்ந்த விடயங்களை எடுத்துக் கூறும்மெய்ப்பாட்டியல் செய்யுள்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மற்றும் சுவைகளை எடுத்துக் கூறுவது. உவமவியல் செய்யுளின் அழகியல் சார்ந்தது. செய்யுளியல் செய்யுள்களின் உருவம் பற்றி விளங்கப்படுத்துவது. மரபியல் பண்பாட்டு விடயங்களையும் மொழிசார்ந்த வழக்குகளையும் எடுத்துக்கூறுவது.

தொல்காப்பியம் பொருளதிகாரத்தை நுணுகி ஆராய்ந்தால் அது கூறும் அகப்பாடல் புறப்பாடல்களுக்கான யாப்பு அகவப்பாவாக இருந்தாலும் அவற்றினைச் சொல்லும் முறையில் அகப்பாடல்களுக்கிடையே வேறுபாடு இருப்பதை அவதானிக்கமுடியும். திணைக்கோட்பாடென்பது அழுத்தமாகப் பதியப்பட்டது அகப்பாடல்களிலேயே. தொல்காப்பியரும் அகத்திணையியலிலேயே திணைக்கோட்பாடு பற்றிக் குறிப்பிடுகிறார். புறத்திணைகள் அகத்தின் புறத்திணைகளேயாம்

 

வெட்சிதானே குறிஞ்சியது புறனே.

வஞ்சிதானே முல்லையது புறனே  

உழிஞை மருதத்துப்புறனே 

தும்பைதானே நெய்தலது புறனே

என்று கூறப்படுவதை உதாரணமாகக் காட்டலாம். தொல்காப்பியத்தில் அகத்திணையியலுக்கே முதல் கரு உரிப்பெருள்கள் கூறப்படுகின்றன. புறப்பாடல்களில் முதல் கருப் பொருள்களை வலிந்து கண்டு கொள்ள முடிந்தாலும் உரிப்பொருள் அவற்றில் இல்லை.

  திணைக்கோட்பாடு

திணை என்பது பல்வேறு கருத்துகளில் வழங்கப்படுகிறது. திணை என்ற சொல் ஆரம்பத்தில் நிலங்களைக் குறிக்கப் பயன்பட்டது என்பதனை தொல்காப்பியம் பொருளதிகாரம் இரண்டாவது நூற்பாவில் காணலாமெனினும் சங்க இலக்கியங்களில அது இலக்கியக் கோட்பாடாகவே செயற்படுகிறது. நானிலம், நாற்றிணை, ஐந்திணை, எழுதிணை என்ற சொற்கள் இலக்கியக்கோட்பாட்டோடு தொடர்புபட்டவை. மேலும் திணைஎன்பது பாடல்களில் அக ஒழுக்கத்தையும் குறித்தது.          

பொருனராற்றுப்படை குறிஞ்சி பரதவர் பாட 

               நெய்த னறும்பூங் கண்ணி குறவர் சூட 

               கானவர் மருதம் பாட 

               அகவர் நீனிற முல்லைப் பல்திணை நுவல 

               கானக்கோழி கதிர் குத்த  

               மனைக் கோழி தினைக் கவர  

               வரை மந்தி கழி மூழ்க  

               கழி நாரை வரை யிறுப்ப 

               தண்வைப்பி நானாடு குழீஇ என நானாடு பற்றிக் குறிப்பிடும்

மதுரைக்காஞ்சி ஐம்பாற்றிணையும் கவினி அமைவர என ஐம்பாற்றிணை பற்றிக் கூறும்.

          தொல்காப்பியமோ கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவா முற்படக்கிளந்த எழுதிணை என்று குறிப்பிடும.; எனவே திணைகள் கால வோட்டத்தில் நான்கிலிருந்து ஐந்தாகி ஏழாக இந்தத் திணை அமைப்பு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை இவை காட்டும்.

திணைகளின் பெயர்கள் பற்றிய கருத்துகள் 

          அகத்திணை - புறத்திணை: - சங்க இலக்கியங்கள் இப்பெரும் பாகுபாட்டின் அடிப்படையிலேயே முதலில் வகுக்கப்பட்டன. இதில் குறிப்பிடப்படும் திணை என்பது ஒழுக்கம் என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அகத்திணை மற்றும் புறத்திணையில் வரும் உபபிரிவுகளும் திணை என்ற பெயரால் அழைக்கப்பட்டன.      

          தொல்காப்பிய சங்கப் பாடல்களிற் கூறப்பட்ட பொருள்களை அகப்பொருள் புறப்பொருள் என இரண்டாக வகுத்தது. அந்த அகப்பொருளும், புறப்போருளும் ஏழேழு உப பிரிவுகளாக வகுக்கப்பட்டன. அகத்திணை கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம் நெய்தல், பெருந்திணை எனவும் புறத்திணை பாடாண், வெட்சி, வஞ்சி, வாகை, உழிஞை, தும்பை காஞ்சி எனவும் வகுக்கப்பட்டுள்ளன

அகத்திணைக்குரியதெனக் குறிப்பிடப்பட்ட பெயர்களில் நடுவில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம, நெய்தல் எனவரும் ஐந்திணைப் பெயர்கள் நிலத்தைக் குறித்தனவா ஒழுக்கத்தைக் குறித்தனவா என்பதில் உரையாசிரியரிடையே கருத்து வேறுபாடு உண்டு. தொல்காப்பிய உரையாசியரான இளம்பூரணர் நிலத்தினாற் பெற்ற பெயர் எனக்கொள்கிறார் நச்சினார்க்கினியரோ ஒழுக்கத்தைக் குறித்ததென்பார்.

         இக்கருத்துகளை ஆராய்ந்த ஜே. ஆர். மார் திணைக் கோட்பாட்டின் தோற்றம் பற்ற்pப் பின்வரும் கருத்தைத் தெரிவிக்க்pறார்.

..........மேலும் புவியியற் பிரதேசங்களுக்குரிய பெயர்களான முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம, நெய்தல் என்பன உண்மையில் முறையே காடு, மலை, பாலை நிலம், பண்படுத்தப்பட்ட நிலம், கடற்கரை ஆகியவற்றில் வளரும் தாவரங்களாகும். முதலில் இப்பெயர்கள் தாவரங்களையே குறித்தன என எண்ணுதல் நியாயமானது. அதன் பிறகு அவை வளரும் பிரதேசங்களைக் குறிக்கத் தொடங்கின. உதாரணமாக குறிஞ்சி மலைப்பிரதேசங்களைக் குறிக்கப் பயன்படுவதன் காரணம் நீலகிரி, மற்றும் பழனி; மலைப்பிரதேசங்களில் கவனத்தைக் கவரும் தாவரமாக இது உள்ளது. அடிக்கடி இல்லாமல் அருமையாகவும் அதேசமயம் அருமையாகவும் பூக்கும் தன்மையது. அதன்பின் காதல் விடயங்களைக் குறிப்பதற்கான சொற்களாக இவை மாறின. அது போலவே போருக்குச் சூடிச்சென்ற பூக்களின் பெயரால் புறவிடயங்கள் அழைக்கப்பட்டன.

இன்னொரு வகையில் இத்திணைப்பெயர்கள் மற்றத் திராவிடமொழிகளிலும் பூவையோ மரத்தையோ குறிக்கப் பயன்படுகின்றமையை என எடுத்துக்காட்டியுள்ளார்.     (ஜே. ஆர். மார்.1985: பக் 17)

 

அகமும் புறமும்

        தொல்காப்பியர் திணை என்றால் என்ன எனக் குறிப்பிடாதது போலவே அகம் புறம் பற்றியும் குறிப்பிடவில்லை. அகத்திணையியலிலும் புறத்திணையிலும் கூறப்பட்ட விடயங்களை வைத்தே அகம் என்றால் என்ன புறம் என்றால் என்ன என புரிந்து கொள்ள வேண்டியுள்ளது

இளம்பூரணர் அகம் மற்றும் புறம் பற்றி விளக்கம் கூறுகையில,  

அகம், புறம் என்பன காரணப்பெயர்அகப்பொருளாவது போக நுகர்ச்சியாகலான் அதனான் ஆன பயன் தானே அறிதலின் அகம் என்றார். புறப்பொருளாவது மறஞ் செய்தலும் அறஞ் செய்தலும் ஆகலான் அவற்றான் ஆன பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் எனக் காரணம் கூறினார்.

நச்சினார்க்கினியர் அதனை இன்னும் சற்று விளக்கிக் கூறுவார்.

     உள்ளே என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட அகம் என்ற சொல் பின்னர் அகத்தினுள்ளே நடைபெற்ற காதல் விடயங்களைக் குறிக்கப் பயன்பட்டது. இந்த அகத்திணையை பாடலுட் கூறும்போது சில விதிமுறைகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டன என்பதை தொல்காப்பியம் காட்டும்.

      முதல் கரு உரிப்பொருளென்ற மூன்றே 

      நினையுங் காலை முறை சிறந்தனவே 

      பாடலுட் பயின்றவை நாடுங் காலை என 

அதிற் கையாளப்படும் விடயங்களை அது எடுத்துக்கூறும். இந்த முதல் கரு உரிப்பொருள்கள் குறிப்பிட்ட பாடல்களை இன்ன திணைக்குரியன என அடையாளங்காண உதவுவதுடன் அவற்றின் அழகியலையும் உணர்ந்து கொள்ள உதவும்.

மேலும் ஒருபாடலின் திணையை எவ்வாறு வகுப்பது எனக் கூறுமிடத்து இளம்பூரணர் முதற்பொருளும் உரிப்பொருளும் வரின் முதற்பொருளால் திணையாகும் என்பதூஉம் முதற்பொருள் ஒழிய ஏனை இரண்டும் வரின் உரிப்பொருளால் திணையாகும் என்பதூஉம் உரிப்பொருள் தானேவரின் அதனால் திணையாகும் என்பதூஉம் ஆம் என்கிறார்.

முதற்பொருள்

தொல்காப்பியத்தின்படி நிலமும் பொழுதும் முதற் பொருள் எனப்பட்டன.

நிலம்- குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்பன. பாலை முல்லையும் குறிஞ்சியும் வேனிற்காலத்தில் பெறும் காலநிலை மாற்றத்தினால் தோன்றுவது  

பொழுதுகள்

குறிப்பிட்ட நிலங்களுக்கெனக் குறிப்பிட்ட (சிறப்பான) பொழுதுகள் தொல்காப்பியத்திற் சுட்டப்பட்டுள்ளன

1.            முல்லை -காரும் மாலையும்

 

2.            குறிஞ்சி- கூதிர் யாமம்  பனிஎதிர் பருவம் 

 

3.            மருதம்-வைகறை விடியல் 

 

4.            நெய்தல் -எற்பாடு

 

5.            பாலை-நண்பகல் வேனில், பின்பனி 

கருப்பொருள் முதற்பொருள் இல்லாமல் கருப்பொருள் இல்லை. அகத்திணைகளுக்குரிய உரிப்பொருளை விளக்க கருப்பொருள்கள் கையாளப்பட்டன

கருப்பொருள்கள்; பின்வருமாறு 

தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ் அதுபோன்ற பிற. என்கிறார். தொல்காப்பியர் 

இக்கருப்பொருள்களை அடிப்படையாக வைத்தே உரிப்பொருள்கள் முன்வைக்கப்பட்டன. உரையாசிரியர்களே கருப்பொருள்களை இன்ன நிலத்துக்கு இன்னது என விளக்குகின்றனர். உரையாசிரியர் கூறும் கருப்பொருள்கள் பின் வருமாறு.

இளம்பூரணர்

fUg;nghUs;

FwpQ;rp

Ky;iy 

ghiy 

kUjk;

nea;jy;

nja;tk;

KUfNts;

fz;zd;

nfhw;wit

,e;jpud;

tUzd;

czh

jpid Itdney;

tuF. Kjpiu

Mwiyj;jyhy; tUk;

nghUs;

ney;

cg;G tpiyg; nghUs;

kPd;tpiyg;nghUs;

kh

ahid Gyp gd;wp fub

khd; Kay;

typaope;j ahid

typaope;j Gyp

vUik

fuh> RwT

kuk;

Ntq;if Nfhq;F

nfhd;iw FUe;J Gjy;

ghiy ,Ug;ig

fs;sp #iu

kUJ

fhQ;rp

Gd;id ifij

Gs;

kapy; fpsp

fhdq;Nfhop

vUit gUe;J

md;dk; md;wpy;

flw;fhf;if

giw

ntwpahl;Lg;giw

VWNfhl;

giw

njz;lfg;

giw

Mwiyg;giw

#iwNfhl;giw

ney;yup

giw

ehtha;g;giw

nra;jp

Njdopj;jy;

epiu

Nka;j;jy;

Mwiyj;jy;

coT

kPd;gLj;jy;

cg;G tpistpj;jy;

aho;

FwpQ;rpg;giw

rhjhupg;gz;

ghiy

kUjk;

nrt;top

G+

Ntq;if fhe;js; FwpQ;rp

Ky;iy gplT jsT

kuhk;g+

fOePu;

jhkiu

nea;jy;

ePu;

RidePu; mUtpePu

fhd;ahW

mWePu;f;$ty;

mWePu;r;Rid

Mw;W ePu;

ngha;if ePu;

NfzpePu;

fly; ePu;

 

நச்சினார்க்கினியர்

fUg;nghUs;

FwpQ;rp

Ky;iy 

ghiy 

kUjk;

nea;jy;

nja;tk;

NrNahd; 

khNahd;

-

,e;jpud;

tUzd;

czh

jpid Itdney;

%q;fpyuprp

tuF. Kjpiu

rhik

Mwiyj;jd

#iw nfhz;ld

nre;ney;

ntz;nzy;

cg;Gtpiy;

kPd;tpiy

kh

ahid Gyp gd;wp fub

cio 

Gy;tha;; Kay;

typaope;j ahid

typaope;j Gyp nre;eha;

vUik

ePu;eha;

ckz;gfL

kuk;

mfpy; Muk; Njf;F jpkpR

Ntq;if

nfhd;iw FUe;J 

tw;wpd Xik

copiQ

nQik

tQ;rp kUJ

fhQ;rp

Gd;id Qhoy; fz;ly;

Gs;

kapy; fpsp

fhdq;Nfhop

rpty;

fOF gUe;J 

Gwh

jhuh ePu;f;Nfhop;

md;dk; md;wpy;

giw

KUfpak; njhz;lfk; 

VWNfhl;

giw

Mwiyg;giw

#iwNfhl;giw

kzKoT

ney;yup fpiz

kPd;Nfhl;giw 

nra;jp

Njdopj;jy; fpspfbjy;

jpidtpistpj;jy;

epiu

Nka;j;jy;

tuF Kjypad fisfl;ly ;flhtpLjy;

Mwiyj;jy;

#iw Nfhly;

eLjy;

fisfl;ly;;

mupjy;

flhtpLjy;

kPd;Fw;wy;

 

cg;G tpw;wy;

aho;

FwpQ;rpaho;

Ky;iy

aho;;

ghiyaho;

kUjaho;

nea;jy;aho;

G+

Ntq;if fhe;js; 

Ky;iy gplT 

kuhk;g+ Fuh ghjpup

fOePu;

jhkiug;g+

jsT Njhd;wp

nea;jy;

ifij

;ePu;

RidePu; mUtpePu

fhd;ahW

mWePu;f;$ty;

mWePu;r;Rid

Mw;W ePu;

ngha;if ePu;

kidf;fpzW

kzw;fpzW>

ctu;f;fop

Cu;

rpWFb

Fwpr;rp

ghb> Nrup

gs;sp

gwe;jiy

Cu;

gl;bdk;> ghf;fk;

 

தொல்காப்பியத்தின படி உரிப்பொருள்

உரிப்பொருள்: உரிப்பொருள் சங்க. இலக்கிய அகப்பாடல்களின் முக்கியமான விடயமாகும்; அதாவது அகப்பாடலைப் பாடும்போது அல்லது இயற்றும்போது உரிப்பொருளை (குறிப்பிட்ட நிலங்களுக்குரிய காதல் உணர்வுகள). நேரடியாகச் சொல்ல முடியாதவிடத்து கருப்பொருளின்மேல் ஏற்றிச் சொல்லுதலும் கருப்பொருளின் பின்புலத்தில் உரிப்பொருளைச் சிறப்பித்துப் பாடுதலும் மரபாக இருந்தது.

உரிப்பொருள் தொல்காப்பியத்தில் பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது. இவை ஒழுக்கங்கள் எனப்படுகின்றன

    குறிஞ்சி- புணர்தல், புணர்தல் நிமித்தம் 

    பாலை- பிரிதல், பிரிதல் நிமித்தம்

    இருத்தல்-    இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

    இரங்கல்-. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

    ஊடல்- ஊடலும் ஊடல் நிமித்தமும்

உரிப்பொருள் பற்றிய விளக்கத்தில் பாலை பற்றிய விளக்கமே தொல்காப்பியத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அவையாவன

     1.    கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவணிரங்கலும்

          உண்டென மொழிப ஓரிடத்தான

     2.    ஓதல் தூது பகை இவை பிரிவே

     3.    ஓதலும் உயர்ந்தோர் மேன

ஆனால் சங்க இலக்கியப் பாலைப்பாடல்களில் பொருள்வயிற் பிரிவே அதிகம் பேசப்படுகிறதுபகைவயிற்பிரிவு முல்லைக்குரியதாகவே கூறப்படுகின்றது. ஓதல் மற்றும் தூதிற் பிரிவுகள் இல்லை.

கூற்றாக அமைதல் 

சங்கப்பாடல்கள் அனைத்தும் கூற்றாக அமைந்தவையாகும். செவிலித்தாய் கூற்று, நற்றாய் கூற்று தோழி கூற்று, தலைவி கூற்று, தலைவன் கூற்று, பாங்கன் கூற்று, கண்டோர் கூற்று எனக்கூற்றுகளில் அமைந்ததாகப் பாடல்கள் அமையும எனத் தொல்காப்பியம் கூறும் அவ்வாறே சங்கப்பாடல்களும் கூற்றாக அமைந்துள்ளன குறிப்பாக அகப்பாடல்களே தலைவி தோழி செவிலி நற்றாய் ஆகியோரின் கூற்றுகளாக அமைந்துள்ளன. கண்டோர் கூற்று பாங்கன் கூற்று என அமைந்த பாடல்கள் மிகக் குறைந்ந எண்ணிக்கையினவே. தோழி கூற்றுப்பாடல்களே இவற்றில் அதிகம். புறப்பாடல்கள் பெரும்பாலானவை புலவர் கூறற்றுகளாக அமைந்தவை. ஆயினும் மனைவி அல்லது தலைவி கூற்றுப்பாடல்களும்; தாயினது கூற்றுப்பாடல்களும் புறப்பாடல்களில் உள்ளன.

சங்கப்பாடல்களின் அழகியலைப் பற்றி கூறும்போது உவமமும் உள்ளுறை உவமமும் பயன்படுத்தப்பட்டுள்ளமையை தொல்காப்பியம் கூறும் 

உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம் 

எனக்கொள்ளும் என்ப குறி அறிந்தோரே 

உள்ளுறைக்கு தெய்வம் ஒழிந்த ஏனைய கருப்பொருள்களே பாடல்களில் பயன்படுத்தப்படும் 

உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகென 

உள்ளுறுத்து உரைப்பதை உள்ளுறை உவமம் 

என உள்ளுறை அமையும் முறை பற்றிக் கூறப்படுகின்றது

  அகப்பொருள் விடயங்களை நேரடியாக வெளிப்படுத்தும் பண்பாடு தமிழில் இல்லாத நிலையில் உள்ளுறை உவமங்களைப் பயன்படுத்தி தலைவனின் செயல்களை அல்லது தலைவியின் நிலையைக் கூறும் மரபு காணப்பட்டது. பேச்சு வழக்கில் இது சுட்டிப்பாகச் சொல்லுதல் எனப்படும் இம்மரபு நாட்டுப்புறப் பாடல்களிலும் காணப்படுவதை சிவத்தம்பி எடுத்துக்காட்டியுள்ளார்

       கடப்படியில் நின்று காளை கனைக்குமென்றால்

       எங்கிருந்த போதும் நாகு எழுந்து வரமாட்டாதோ

இதில் வரும் காளை காதல் கொண்ட ஆணையும் நாகு அவன் காதலித்த பெண்ணையும் சுட்டி நின்றன. காளையாகிய காதலன் கடப்படியில் நின்று செருமினானென்றால்; உள்ளேயிருக்கும் பெண் அவளின் குரலை அறிந்து வெளியே வருவாள் என்பது பொருள்.

       இறைச்சிப்பொருள் இறைச்சிப்பொருள் என்பது பாடலின் நேரடிப் பொருளுக்கு அப்பால் பாடலினூடாக உணர்த்தப்பட்டிருக்கும்; விடயம் ஆகும். எனவேதான்         தொல்காப்பியம் இறைச்சிதானே பொருட் புறத்ததுவே என்கிறது.

உதாரணத்திற்கு பின்வரும் பாடலைக் காட்டலாம்

           இருள் திணிந்தன்ன புன்னை நீழல்

           நிலவு குவித்தன்ன வெண்மணல் ஒருசிறை

           கருங்கோட்டுப் புன்னைப் பூம்பொழில் சிலம்ப

           இன்னும் வாரார் வரூஉம் 

           பன்மீன் வேட்டத் தென்னையர் திமிலே (குறுந்தொகை)

தமையன்மாரின் திமில்கள் திரும்பி வருவதால் தலைவனைச் சந்திக்க முடியாது பாட்டினால் ஊகித்துக்கொள்ள வேண்டியதாகும் என்பது இப்பாடலில் வரும் இறைச்சிப்பொருளாகும்.          

புறத்திணைப்பாடல்களும் தொல்காப்பியமும்

புறம் என்பது வெளியே சொல்லப்படக்கூடிய விடயங்களைக் குறித்தது. அது வேந்தர்களின் போர்கள் கொடைகள்   சாதனைகள் மற்றும் போரினால் ஏற்பட்ட அழிவுகள் அவலங்கள் போன்றவற்றையும் குறித்தது. இத்திணைகளிற் பேசப்படும் சிறுநிகழ்ச்சிகள் துறைகளாக வகுக்கப்படடுள்ளன. புறத்திணைகளில் ஏழுதிணைகள் கூறப்பட்டுள்ளன.       

      1.வெட்சிதானே குறிஞ்சியது புறனே

       உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே

       மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த

       கொற்றவை நிலையும் அத்திணைப்புறனே

 

     2.  வஞ்சிதானே முல்லையது புறனே

     3.  உழிஞைதானே மருதத்துப்புறனே

     4.  வாகை தானே பாலையது புறனே

     5.  தும்பை தானே நெய்தலது புறனே

     6.   பாடாண் பகுதி கைக்கிளைப்புறனே

7.   காஞ்சி தானே   பெருந்திணைப்புறனே எனத்தொல்காப்பியம் குறிப்பிடும்

 

இதற்கு மாறாக புறப்பொருள் வெண்பாமாலையில் 12 திணைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. என்பது முக்கியமானது. வெட்சி வாகை வஞ்சி உழிஞை வாகை தும்பை காஞ்சி பாடாண்   நொச்சி கரந்தை கைக்கிளை பெருந்திணை  பொதுவியல்  என்பன புறப்பொருள்வெண்பா மாலையிற் கூறப்பட்டவை.அவை. இவற்றில் வெட்சியோடு கரந்தையும் உழிஞையோடு நொச்சியும் சேர்த்து தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளன. கைக்கிளை பெருந்திணை என்பன தொல்காப்பியத்தில் அகத்திணைக்குள்ளேயே அடக்கப்பட்டுள்ளன.

வெட்சி

தொல்காப்பியத்தின்படி குறிஞ்சி நிலத்துப் போர்முறை இது. இந்நிலத்தவர் போருக்குச்சென்ற போது சூடிச்சென்ற பூவின் பெயரால் இது அழைக்கப்பட்டது. வெட்சிப்போர் என்பது ஆனிரை கவர்தலினால் உண்டாகும் போரைக் குறித்தது.

     வேந்து விடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்

     ஆதந்தோம்பல் மேவற்றாகும் 

வெட்சித்திணை   14 துறைகளையுடையது

வஞ்சி

முல்லைக்குப் புறத்திணையாகும்

     எஞ்சாமண்ணசை வேந்தனை வேந்தன் 

     அஞ்சு தகச்சென்று அடல் குறித்தன்றே

என்று வஞ்சித்திணையின் பண்பு பற்றி தொல்காப்பியம் குறிப்பிடும்

வஞ்சித்திணையில் 13 துறைகள் குறிப்பிடப்படுகின்றன. இத்துறைகளும் போர்முறை ஒன்றின் தொடர்புற்ற அலகுகளாகவே காணப்படுகின்றன.

உழிஞை

மருதத்தின் புறத்திணை இதுவாகும்.

       முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் மருதத்துப் போர் ஆகும்.

உழிஞைத்திணைத் துறைகளாக பின்வருவன குறிப்பிடப்படுகின்றன.

 

தும்பை 

இது நெய்தலது புறனாகும் அதன் போர்முறை மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்றுதலையளிக்கும் சிறப்பிற்றென்ப என்பது தொல்காப்பியம்

வாகை

வாகை தொடர்பான அறுவகைப்பட்ட பார்ப்பனப்பாக்கமும் எனவரும் சூத்திரம் போர்பற்றிப் பேசவில்லை. அடுத்துவரும் சூத்திரமே போர்களைப்பற்றிக் குறிப்பிடுகிறது.

காஞ்சித்திணை

தொல்காப்பியத்தின்படி காஞ்சித்திணை பெருந்திணைக்குப் புறனானதாகும்காஞ்சிதானே பெருந்திணைப்புறனே என்பது தொல்காப்பியச் சூத்திரம். காஞ்சித்திணை நில்லா உலகம் பற் றியது. இந்த நில்லா உலகம் பற்றிக் கூறப்புகுந்த இளம்பூரணர் இளமை நிலையாமை யாக்கை நிலையாமை செல்வ நிலையாமை ஆகிய நிலையாமைகளைப் பற்றிக் கூறுகிறார்

முதுகாஞ்சி பெருங்காஞ்சி மறக்காஞ்சி மன்னைக்காஞ்சி எனத்தொடங்கி வரும் திணைகள் காஞ்சித்திணைக்குரியனவாகும் 

உண்மையில் தொல்காப்பியம் குறிக்கும் காஞ்சித்திணைக்கும் சங்க இலக்கியம் குறிக்கும் காஞ்சித்திணைக்குமிடையே வேறுபாடுண்டு தொல்காப்பியத்தில் காஞ்சித்திணை இரங்கலுக்குரிய நிலையாமையைக் குறிக்க சங்க இலக்கியத்தில் அது வீரத்தின் ஒருபகுதியாகப் போற்றப்படுகிறது.

பாடாண்திணை

தொல்காப்பியத்தின்படி இது கைக்கிளைக்குப் புறனானது. இளம்பூரணர் பாடாண்திணைக்குரிய எட்டுவகையான துறைகளைக் கூறுகிறர்ர் 1. கடவள்வாழ்த்து (கொடிநிலை கந்தழி வள்ளி) 2.  வாழ்த்தியல் 3.  மங்கலம் 4. செவியறிவுறூஉ. 5.  கைக்கிளைவகை 6. ஆற்றுப்படைவகை 7. பரிசிற்றுறைவகை 8. வசைவகை என்பன அவை. இவற்றைவிட கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல, இயன்மொழிவாழ்த்து கடைநிலை, கண்படைநிலை, கேள்விநிலை, விளக்குநிலை, வாயுறைவாழ்த்து, செவியறிவுறுஉ புறநிலைவாழ்த்து, கைக்கிளைவகை என்பன பாடாணுக்குள் வருகின்றன. சில துறைகள் வேறுபெயர்களில் அழைக்கப்படுகின்றன

செய்யுளாக்கம் 

சங்க இலக்கியத்தின் செய்யுள்களின் ஆக்கம் பற்றிக் குறிப்பிடுவோர் (பார்க்க கைலாசபதி இலக்கியமும் திறனாய்வும்) அவயவிக்கொள்கையை முன்வைப்பர். இதாவது உறுப்புகளால் ஆக்கப்படுவது தொல்காப்பியம் செய்யுளியல் செய்யுளின் ஆக்கம் பற்றிக் கூறும் விடயங்கள். செய்யுளின் உறுப்புகளையும் செய்யுளின் அழகியலையும் பற்றிக் கூறுகின்றன.  

செய்யுளுறுப்புகளாக மாத்திரை, எழுத்தியல், அசைவகை, சீர,; அடி, யாப்பு, மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல், திணை கைகோள் கூற்றுவகை கேட்போர் களன் காலம் பயன் மெய்ப்பாடு எச்சவகை எனத்தொடரும் 36 உறுப்புகளைக் கூளூறுகிறது

மாத்திரை-கைநொடிப்பெழுது அல்லது கண்ணிமைப்பொழுது (ஓசையின் அளவு)

எழுத்தியல், -எழுத்தின் தன்மை (ஒலிக்கும் தன்மை)

மேலும் அக்காலத்து வழங்கிய அகவற்பா, வஞ்சிப்பா, கலிப்பா, வெண்பா, மருட்பா ஆகிய பாக்கள் பற்றியும் தொல்காப்பியத்துட் கூறப்படுகிறது. மரபியலில் அக்கால மொழிவழக்குகள் பற்றியும் வாழ்க்கை முறைகள் பற்றியும் பேசப்படுகின்றன.

சங்க இலக்கியங்களின் பொருளை விளங்கிக் கொள்ள இவை அவசியமானவை.

சங்க இலக்கியங்களின் ஆக்கமுறையில் தொல்காப்பியம் கூறிய விடயங்களைத் தாண்டி   அவதானிக்கவேண்டிய விடயங்கள் 

1 பாடல்கள் நீள நீள கருப்பொருள் விவரணங்கள் அதிகரிப்பதைக் காண முடிகிறது .ம் குறுந்தொகையிலிருந்து நற்றிணை அகநானூறு நெடுநல்வாடை ஆகியவற்றைப்பார்த்தால் இது புலனாகும்.

2.அகப்பாடல்களில் புறச்செய்திகளின் தாக்கம் உள்ளது. .புறச்செய்திகளைக் கூறுவதற்காக அகப்பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

3.. தனித்தனித்திணைகளுக்கான தொடர்ச்சியாக அமைந்த பாடல்களை ஐங்குறுநூற்றில காணலாம்.

6.பாத்திரக் கூற்றுகளாக அமைந்துள்ளன. இவற்றுட் சில பெயரறிந்த சில புலவர்களின் வாழ்க்கை அனுபவமாகவும் அமைந்துள்ளன.

7.பெண்பாற் புலவர்களின் பாடல்களில் அவர்களது அனுபவங்கள் வெளிப்படுவதைக் காணமுடியும்

8. பாடியோர் சார்ந்திருந்த சமூகங்கள் பற்றிய செய்திகளையும் அவதானிக்கலாம்.

 தொகைகளிலே காணப்படக்கூடிய வளர்ச்சிகள்

1.சிறிய பாடல்களிலிருந்து நீண்டபாடல்கள்   வரை காணப்படுகின்றன. (குறுந்தொகைப் பாடல்கள் தொடக்கம் ஆற்றுப்படை வரையானவை)

2. நீண்ட ஆற்றுப்படைப் பாடல்கள் பெரும்பாலும் எல்லாநிலங்களையும் பற்றிப் (அதாவது ஐந்து திணைகளையும் பற்றி) பாடுகின்றன.

3. பண்பாட்டு மாற்றம் தென்படுகிறது (திருமுருகாற்றுப்படை, கலித்தொகை பரிபாடல்

4. இலக்கியத் தொகைகள் தோன்றுகின்றன. (பதிற்றுப்பத்துப் பாடல்கள், ஐங்குறுநூறு)

5. ஒருவர் கூற்றாக அமைந்த பாடல்மரபு; பலர் உரையாடும் பாங்கிலமைந்த பாடல்மரபாக வளர்ச்சியுறுகின்றது (கலித்தொகை).

 

உசாத்துணைநூல்கள்

1.            அம்மன்கிளி முருகதாஸ், சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் 2016 (இரண்டாம் பதிப்பு) குமரன்புத்தக இல்லம் கொழும்பு சென்னை.

2.            சிவத்தம்பி கா. பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம், குமரன்பத்தக இல்லம் கொழும்பு சென்னை 2005.

3. Sivathamby.K, Studies in Ancient Tamil society, N.C.B.H. Madras 1998.

4. Thaninayagam X.S, Landscape and Poetry, London 1966.

5. Kailasapathy K., Tamil Heroic Poetry, Clarinthon press, Oxford 1968.

6. Zvelabil Kamil, Smile of murugan in Tamil literature, Leiden 1973.