4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

அமிழ்தத் தமிழே ! - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

 விண்ணுக்கு ஏழு வண்ணத் துகள்களான வில்அமுதே

தீ திணறும் போது அணையா விளக்குக்கு தூண்டிய அமுதே

தென்றல் தொன்னையில் கிண்டிய மெல்லின குளிர்ச்சி அமுதே

கடல் அலை கடைந்த சங்கின் அமுதே

இம்மண்ணில் மதுரை மல்லி நுகர்ந்த வாசம் அமுதே

ஐம்பூதங்களை உயிராகிய தாய் தமிழே நீயே

 

உயரத்தில் பூக்கும் , அழியாத நீலநிறம் ,7072 துளிகள் சுமந்த குறிஞ்சித்தேனே

தலைவியோடு காதல் உய்ப்பதற்கு பொழுது காட்டாத கடிகாரமான முல்லைத்தேனே

மருத நிலத்தைக் கொத்தி விளைச்சலின் உத்தியை தந்த வேளாண்த்தேனே

நீர் உப்பை ஒற்றைத் தன்மையில் மாத்திய நெய்தல்தேனே

பாலையில் மான்கள்  உடல் நிழலில் மாறிமாறி தணிக்கும் பிரியாத காதல்தேனே

ஐந்திணையில் கூடலும் ஊடலும் முறைமை படைத்த தெய்வத்தமிழே

 

எச்சில் ஊறும் ஆறு ரேகைகள் கொண்ட  நெல்லிக்கனி சுவையே

கருநீல நாவள் பழமே செந்நிற நாவில் எழுந்த மொழி சுவையே

மாங்கனியே உன்னை பறித்தபோது பால் பொங்கியதால் ஞான தமிழுக்குள் புதுமண புகுவிழா தந்த வாழ்க்கை சுவையே

வாழைக் குலையே எம் பாதையை செம்மையாக்கவே  நோக்கி பழுத்த சுவையே

பலாச் சுலையின் சொற்களை எமக்கு தந்து தேவர்களை கொஞ்ச வைத்த தெய்வீக சுவையே

முக்கனியோடு இரு கனியை சேர்த்து ஆயுள் நீட்டிய சுவை அமிழ்தத் தமிழே

 

                                        முனைவர் கோ..பரத்வாஜ்

                                         (G.L )தமிழ்துறை ,

                                 டாக்டர் அம்பேத்கர் அரசினர்  கலைக்   

                                           கல்லூரி வியசார்படி ,சென்னை-39