4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஏப்ரல், 2022

தகவல் தொடர்பு - முனைவர் க.பாலசங்கர்

 

தகவல் தொடர்பு

முனைவர் க.பாலசங்கர்

உதவிப்பேராசிரியர் & துறைத்தலைவர் 

கோகிலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்.

முன்னுரை

உலக மொழிகளில் செம்மொழியாகத் திகழ்கின்ற பெருமைமிக்க  மொழி நம் தமிழ் என்றால் அது மிகையில்லை. இதில் இல்லாத செய்திகளே இல்லை என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி பல அயல்நாட்டு அறிஞர்கள் அதிகமாகப் பேசிய மொழியும் தமிழ் மொழிதான். இவ்வளவு பெருமை பெற்ற மொழியில் எவ்வாறு தகவல் தொடர்புக்கு உறுதுணை புரிகின்றது என்பதைக் காட்டுவதே கட்டுரையின் நோக்கம். மக்களுக்குக் குறைந்த சொற்களால் எளிதில் சிந்திக்கத் தூண்டும் வகையில் இலக்கியங்களை எடுத்துக் காட்ட இலக்கணம் எவ்வாறு தகவல் தொடர்பியலுக்குக் கருவியாகப் பயன்படுகின்றது என்பதைப் பற்றியதான ஒரு கட்டுரைதான் இது

தகவல்

தகவல் என்பது செய்திகருத்துநமக்கு ஏதோ ஒரு வகையில் பயன்படக்கூடிய ஒரு செயல் என்ற வரையறையை வைத்துக்கொள்ளலாம். “தகவல் என்பது புறத்தூண்டுதலின் விளைவாக ஓர் உயிரினம் காட்டுகின்ற எதிருணர்ச்சிக் குறிப்பே தகவல் எனப்படுகிறது என்கிறார் 1பக்-2.கி.இராசா “மக்கள் தகவல் தொடர்பியல்” இத்துடன் தொடர்பு என்ற வார்த்தையைச் சேர்க்கும் போது ஒரு தொடக்கம் ஒரு முடிவு என்று கட்டமைப்பைக் கொள்கிறது. தொடக்கம் -முடிவு இவற்றுக்கு இடையில் நிகழும் உறவுதான் தொடர்பு. இந்தத் தொடர்பில் தகவலைத் தொடர்புப் படுத்துதல் தகவல் தொடர்பு எனலாகிறது.  தகவல் தொடர்பு என்பது ஒருவர் மற்றொருவருக்கு தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பது. அதற்கு அவர் பதில் கூறலாம்கூறாமலும் இருக்கலாம். மனிதர்கள் தாங்கள் விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சுமார் 90மூ சதவிகிதத்திற்கு மேல்  தகவல் தொடர்பில் செலவழிக்கின்றார்கள். இதில் பிறர் சொல்வதைக் கேட்பது பிறருக்குப் பதில் சொல்வது போன்ற செயல்கள் அவர்களின் நேரத்தை ஆக்கிரமிக்கின்றன.

தகவல் தெரிவிக்கும் முறை

தகவல் தொடர்பு என்பது மனிதன் தன்னுடைய எண்ணங்களையும்நோக்கங்களையும் மற்றொருவருக்குத் தெரிவிப்பதாகும். எந்தவிதக் கருவிகளின் குறுக்கீடுமின்றி  மக்கள் இயல்பாகச் சொற்களாலோகுறியீடுகளாலோ மெய்ப்பாட்டினாலோ தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களையே அவர் தகவல்கள் (Communication) என்று அழைத்துஇது தகவல் தொடர்பின் முதல்நிலை என்று குறிப்பிட்டார் எட்வர்ட் சாபிர் என்கிறார்கி.இராசா-மக்கள் தகவல் தொடர்பியல்- கி.இராசா.பக்-

சொல்லுபவர்- மொழி(சொற்கள்) - கேட்பவர்

கணினியில் - input- Processer Chennel -output  என்பார்கள்.

1.சொல்லால் தகவலைப் பரிமாறிக் கொள்ளலாம்(மொழி)

2.சைகைகளால் தகவலைப் பரிமாறிக் கொள்ளலாம்

3.மௌனமாகக் தகவலைப் பரிமாறிக் கொள்ளலாம்

4.ஊடகங்களால் தகவலைப் பரிமாறிக் கொள்ளலாம்

1.சொல்லால் தகவலைப் பரிமாறிக் கொள்ளுதல்:(மொழி)

வெளிப்படையாக கருத்தைத் தெரிவிப்பதும்தாங்களாகவே மனதிற்குள்ளே சொல்லிக்கொள்ளுவதும் உண்டு. இதைத்தான் மனிதன் தகவல்களை அகத்தூண்டுதல் மூலமும் தகவலைப் பரிமாறிக் கொள்கின்றனர் என்கிறார்ஈஸ்வரன். பக்-3.சொல்லால் தகவல் பரிமாற்றத்தை இருண்டு வகையில் சொல்லலாம்.

1.அகநிலையில் பரிமாற்றம்:

அகநிலையில் பரிமாற்றம் என்பது காதல் போன்ற செய்திகளை எவ்வாறு சொல்ல வேண்டும் எப்படிச் சொல்லவேண்டும்எதைக்கொண்டு உணர்த்த வேண்டும் போன்றவை அடங்கியவை. எ-டு: அக இலக்கியம் -சங்க இலக்கியம்

ஒரு தலைவனோதலைவியோ தன்னுடைய எண்ணத்தை  விருப்பத்தைக்  கவிஞர்ஆசிரியரே  பாத்திரப்படைப்பாக  இருப்பதுபோன்று நினைத்துக்கொண்டு கவிதையைப் படைத்திருக்கிறார். “தமக்கு ஏற்படும் அனுபவம்ஞானம்உள்ளுணர்வு ஆற்றல்பிறரது நடடிவக்கைகள் ஏற்படுத்திய தாக்கத்தின் வாயிலாகத் தம்மைத் தாமே மாற்றிக் கொள்ளும் தன்மை போன்றவற்றின் மூலமாகத் தகவல்களை உணர்ந்து கொள்வது  அகவழி  எனப்படும் என்கிறார்4- கி.இராசா-பக்-4

2.புறநிலையில் பரிமாற்றம்:

புறநிலையில் தகவல் பரிமாற்றம் என்பது நேரடியாகத் தகவல்களை நேருக்கு நேராகப் பரிமாற்றம் செய்துகொள்வதாகும். மக்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடுவதன் மூலமாகவும்பிற தகவல் வாயில்கள் மூலமாகவும் தகவல்களைத் தெரிந்து கொள்வது புறவழி எனப்படும் என்கிறார்5 (பக்-4)கி.இராசா 

அகநிலையில் படைப்பாளர் நினைப்பதைசிந்திப்பதைஎண்ணுவதைக் கொண்டது. புறநிலையில் ஆசிரியர் படைக்கும்போது உரையாடல் தன்மையில் படைத்தால் அது புறநிலையில் அமைவது எனலாம்.எ.கா-கலித்தொகை பாடல்-குறிஞ்சி-51(சுடர்தொடீஇ ) 

மேற்கண்ட இரண்டு வகைகளின் மூலம் தகவல் தொடர்பின் அடிப்படைகளாகப் பின்வருமாறு கருதுகிறார்ஹெரால்ட் லாஸ்வெல்.பக்-4

1சொல்வது யார்? (who says?)

2.எதன் மூலம் சொல்கிறார்? (in what channel?)

3.எப்படிச் சொல்கிறார்? (how?)

4.யாருக்குச் சொல்கிறார்? (to whom?)

5.அதன் விளைவு என்ன? (with what effect?)

சொல்வது யார்? - புலவர் - ஆசிரியர் -படைப்பாளர்

எதன் மூலம் சொல்கிறார்?  சொல் - வார்த்தை அடங்கிய தொடர்

எப்படிச் சொல்கிறார்? –  இலக்கிய நயம் - எழுத்து- சொல்- பொருள் - யாப்பு – அணி

யாருக்குச் சொல்கிறார்?- மக்களுக்கு – வாசகருக்கு- படிப்பவருக்கு

அதன் விளைவு என்ன? – நம் நாட்டின் நீதிகாதல்வீரம்பண்பாடுகலாச்சாரம் இலக்கியத்தை உணர்ந்து கொள்ள  இத்துடன் நம் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை நாமும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் இலக்கியம் படைக்கின்றனர். இதை சார்லஸ் கூலியின் கூற்றுப்படி “ மனித உறவுகள் ஏற்படுவதும்நிலைத்து நிற்பதும்மேம்படுத்துவதும் தகவல் தொடர்பு. பரிமாற்றத்தின் வாயிலாகவே நிகழ்கின்றது என்கிறார். 

இதை இறையனார் களவியல் உரையின் பொதுப்பாயிரம்

“ ஈவோன் தன்மை ஈதல் இயற்கை

கொள்வோன் தன்மை கோடல் மரபென

ஈரிரண் டென்ப பொதுவின் இயற்கை” என்பது குறித்த இலக்கணம் 

இதில் ’ஈவோன் தன்மை’ என்பது ஆசிரியரது தன்மையைக் (Addresser/sender) குறிக்கும்

ஈதலிய்ற்கை’ என்பது ஆசிரியன் உரைக்கும்முறையைக் (message)குறிக்கும்

கொள்வோன் தன்மை என்பது மாணாக்கனது தன்மையைக் (Receiver/addresee) குறிக்கும்

இவற்றை ’ஈவோன் தன்மை’  படைப்பாளர் என்றும்,  ‘ஈதலியற்கைஇலக்கணம் என்றும்கொள்வோன் தன்மை’  படிப்பவர்கள் என்றும்(வாசகன்-கேட்போன்) என்றும் வகைப்படுத்தலாம்.

ஒலியும் எழுத்தும்:

மனிதன் முதலில் தன்னுடைய கருத்தை ஒலிகள் மூலமேவெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றான்.  அதைப்போன்று ஒலிகள் மூலமே கருத்தையும் பெற்றான். குறிப்பாக விலங்குகளை  வேட்டையாடப் போகும்போது ஒலிகள் எழுப்பித்தான் அதற்கு எச்சரிக்கை விடுவதும்விலங்குகள் எழுப்பும் சத்தத்தால் எந்த விலங்கு எங்கு வந்துள்ளது என்று உணர்ந்துள்ளான் என்று நம் பழங்கால வழக்கில் காணலாம். தொல்காப்பியர் மரபியல் என்ற இயலில் விலங்குகளின் குட்டிகளுக்கு என்று பிரித்து ஆண்- பெண் இனம் என்று எவ்வாறு பாகுபாடு படுத்தியுள்ளார் என்று காணலாம்.

எடுத்துக்காட்டு: இளமைப் பெயர்கள்-              ஆண்பாற்பெயர்கள் -ஏறு

பெண்பாற் பெயர்கள் - சேவல்

சேவலைக் குறிப்பிடும் போது மயில் இனம் தவிர்த்து என்று கூறுகின்றார்ஏன் என்றால் மயில் இனத்தில் ஆண் மயில் தான் தோகையை விரித்து பெண்கள் போல் அழகாக இருக்கின்றது பெண் மயில் அவ்வாறு இல்லை. ஆதலால் சேவல் என்ற ஆண்பாற் பெயரை மயில் இனம் தவிர்த்து என்று கூறியிருக்கலாம்.பெண் யானை என்றால்    பிடி என்று இலக்கியங்களில் காணலாம்.

எடுத்துக்காட்டு: நாயை “ச்சீ” என்று சொல்கின்றோம். இதற்கு இந்த சொல்லுக்கு அர்த்தம் இல்லை ஆனாலும் அதன் ஒலியைக் கேட்டவுடனே நமக்குத் தெரியவருவது நாயைத்தான் நினைக்கிறோம்.இதேபோல் ஒரு ஒலி உடைய எழுத்தே பொருளையும் குறிக்கும் இதுபோன்று நமக்கு ஓரெழுத்து ஒருமொழி என்று அதன் பொருளை வரையறுப்பர். என்பது அவலத்தினாலும், “ஐயோ” என்பது அச்சத்தினாலும்தோன்றியவை  என்கிறார்பக்-101கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள்-தி.வை.சதாசிவபண்டாரத்தார்-மணிவாசகர் பதிப்பகம்பாரிமுனைசென்னை.600108

எடுத்துக்காட்டு: வாபோ.இதுபோன்ற வேர்சொற்களாகவுமவினை அடியாகவும்அமையும்.உயிர் எழுத்து ஏழுக்கும் பொருள் உண்டு என்பது நமக்குத் தெரியும். ஓர் உயிரினத்தைக் குறிப்பிடுவதற்கு அஃது எழுப்புகின்ற ஒலியின் வாயிலாகச் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிடுகிறது  இதைத்தான் ஈஸ்வரன் அவர்கள் போ- வோ கோட்பாடு என்கிறார்8 (The Bow –wow theory) எடுத்துக்காட்டு: நாயைப் பிராணிகளிடமிருந்து வேறுபடுத்த அது குரைக்கும் ஒலியைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் இனத்தில் ஆண்கள் என்றும்பெரியவர் என்றும்சிறுவன் என்றும்சிறுமியர் என்றும்அத்தான் என்றும்மாமியார் என்றும்மாமனார் என்றும்கொழுந்தன் என்றும்அண்ணியார் என்றும் அண்ணன் என்றும்தங்கை என்றும்தம்பி என்றும்கொழுந்தியாள் என்றும் இப்படி பல்வேறு பட்ட உறவுமுறைகளை வைத்துத் தான் பேச வேண்டி இருக்கின்றது. இவ்வாறு உறவுமுறைப் பெயர் இல்லாமல் இருந்தால் பேசும்போது எவ்வாறு குழப்பங்கள் வரும்.

எடுத்துக்காட்டு: கல்லூரி மாணவர்களுக்கு கணினிப்பாடம் எடுக்கும் ஒருவர் வீட்டில் மூன்றாம் வகுப்பில் படிக்கும் தன் மகனுக்குக் கணக்குச் சொல்லித்தரும் போதும் தாம் மூன்றாம் வகுப்புக்குரிய ஆசிரியராக மாறிச்செயல்பட வேண்டும்.இல்லையேல் மகனுக்குத் தந்தை சொல்லித்தருவது புரியாதுமகனுக்கு ஏன் புரியவில்லை என்பது மகனுக்கு விளங்காது” என்கிறார்கி.இராசா.பக்-13. யார்யாரிடம்என்ன பேச வேண்டும்எப்படிப் பேசவேண்டும் என்று நம் முன்னோhகள்  தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார்கள் என்று இதன்மூலம் அறியலாம்.     

ஓசை நயம்:

மேற்கண்டவற்றில் கூறப்பட்டது போல் சத்தத்தால் அடையாளம் கண்டு கொள்வது போல் இசை என்ற சந்தத்தாலும் கருத்தைப் பரிமாறிக்கொள்ளலாம்.

சந்தம்(rhythm) –வழியாக மொழி பிறந்தது என்பது இந்தக்கோட்பாடு உணர்த்துகின்றது என்கிறார்10 ஈஸ்வரன். பக்-2.சந்தம்- சத்தம்ஓசை என்றும் எடுத்துக்கொள்ளலாம். நம் இலக்கியங்களில் காணப்படும் இலக்கணங்கள் தான். ஏன் என்றால்எந்தக் கருத்தைஎப்படிச் சொல்ல வேண்டும் என்று உணர்ந்து இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

ஆசிரியப்பா:

ஆசிரியப்பா என்றால் அகவல் ஓசை உடையது. இது காதல் , வீரம் போன்ற கருத்தை இதில் வெளிப்படுத்தலாம். செம்மொழி என்று கூறுவதற்கு அடிப்படை காரணமாக இருக்கின்ற சங்க இலக்கிய-. எட்டுத்தொகையும்(கலித்தொகை தவிர)பத்துப்பாட்டும்.(வஞ்சிப்பா கலந்த பட்டினப்பாலை உள்பட)  

வெண்பா:

வெண்பா என்றால் வெள்ளை என்ற வண்ணம் போன்றுஎந்த ஓசை நயமும்வராமல் இருக்க வேண்டும் என்ற இலக்கணம் உடையது. எ-கா: பதினெண்கீழ்க்கணக்கு என்று சொல்லப்படுகிற நூல்கள் அனைத்திலும் வெண்பா யாப்பு அமைந்துள்ளன. இதில் நீதி கருத்துக்களை உணர்த்துவதற்காகவே  பயன்படுத்திய யாப்பு முறை.   

வெண்பா யாப்பில் மட்டும்தான் நீதி கருத்தைச் சொல்லவேண்டுமாஎன்ற கேள்விக்கு விடையாக நீதியைஅறிவுரையை அளவோடு சொல்லவேண்டும். ஏனென்றால் எதிரே உள்ளவர்களுடைய அல்லது கேட்பவர்களுடைய ஆளுமைத் தன்மையை அளவிடும் கருவி. எனவே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும். நீண்ட நேரம் கருத்தைக் கூறினால் கேட்கமாட்டார். மனதில் எரிச்சலை உண்டாக்கி விடும்  சுருக்கமாகச்  சொல்லிவிட்டுக்  கேட்பவரைச் சிந்திக்கும் படி செய்துவிட்டுச் செல்லவேண்டும் அதுதான் ஒரு நல்ல படைப்பாளியின் வெற்றி.

கலிப்பா:

கலிப்பா என்றால் துள்ளல் ஓசை நயம் உடையது. இதில் எல்லா ஓசை நயமும் வரலாம் அதிலும் குறிப்பாக வெண்பா அமைப்பும் அதிகமாக இருக்கும் தன்மையுடையது.

தொல்காப்பியர் செய்யுளியலில்

ஆசிரிய நடைத்தே வஞ்சிஏனை

வெண்பா நடைத்தே கலி என மொழிப” (நூற்பா-1365) என்கிறார்.

வெண்பா சீர்கள் அதிகமாக இருந்தாலும் ஓசை துள்ளல் தன்மையோடு இருக்கவேண்டும் என்பது இலக்கண விதி.  இதற்கு எ-கா கலித்தொகை

இதில் வரக்கூடிய ஓசைநயம் உணர்த்தும் கருத்து காதல் கருத்தைக் கொண்டாலும் காளையை அடக்கும் அதிலும் துள்ளி வரும் காளையை அடக்கும் காளையர்களைப் பற்றிக் கூறும் இலக்கிய வகை. ஆதலால் தான் நம் முன்னோர்கள் பாடல்கள்   அமைப்பில் கூட கருத்துக்கு தகுந்தாற்போல் ஓசை நயத்தையும் பயன்படுத்தியுள்ளனர் என்று உணர்ந்து கொள்ளலாம். ஓசையோடு இலக்கியங்களை நம் முன்னோர்கள் படித்து வந்துள்ளனர். பாடும்போதே இந்த ஓசையில் (யாப்பு)இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது என்று கணித்துவிடுவார்கள். இதனை ஈஸ்வரன் டிங்- டாங் கோட்பாடு என்கிறார்11 (The Ding –Dong Theory)

3.பூ - கோட்பாடு (The poohb –pooh theory)

மனிதனின் உணர்ச்சி வெளிப்பாட்டை நம் தொல்காப்பியர் மெய்ப்பாடு என்ற இயலில் கூறுகின்றார்.

நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப” என்கிறார்.

 இதை உணர்ச்சிகளின்  வெளிப்பாடு என்று கூறலாம். வலிஆச்சரியம்மகிழ்ச்சிஏமாற்றம் போன்ற மனிதனின் இன்ப- துன்பங்களின் பங்களிப்பாக வெளிவரும் ஒரு கோட்பாடு என்கிறார் ஈஸ்வரன்