4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

தெய்வமாடல் சடங்கு பற்றிய முன்னைய ஆய்வுகள்; ஒரு சமூக மானிடவியல் பரீசீலனை - சந்திரசேகரன் சசிதரன்

 

தெய்வமாடல் சடங்கு பற்றிய முன்னைய ஆய்வுகள்; ஒரு சமூக மானிடவியல் பரீசீலனை

சந்திரசேகரன் சசிதரன்,

முதுநிலை விரிவுரையாளர்,

சமூக விஞ்ஞானங்கள் துறை,

கிழக்கு பல்கலைக் கழகம்,

வந்தாறுமூலை,

செங்கலடி,

இலங்கை

 

ஆய்வுச் சுருக்கம்

மானுடவியலாளர்கள் தெய்வமாடல் சடங்கை வரையறுக்கும் போது 'தெய்வமாடல் சடங்கு என்பது அதிபௌதீக வாத அம்சங்களும் குணப்படுத்தல் தொடர்பான தராதரங்களும் இணைந்த ஒரு சடங்கு வடிவம் ' என்று வரையறுப்பர். இச் சடங்கின் தொடக்க நிலையானது. சைபீரியா தேசத்தின் பழங்குடி சமுதாயத்தினர் மத்தியில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்ததாகவே மானுடவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த அடிப்படையில் போலந்து நாட்டு மாறுடவியலாளரான மலிணோவ்ஸளி இந்த சடங்கினை சைபீரியாவில் 1894 ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட கள ,ஆய்வின் போது நேரில் அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமன்றி இச் சடங்கானது பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியதாக ஆய்வாளர்கள்  குறிப்பிடுவர். 'பயபக்தி, புனிதத்தன்மை பற்றிய உணர்வு , அதீபௌதீகவாத நம்பிக்கைகள், ஆவி உலகத்துடன் தொடர்புகொள்ள முயற்சித்தல்,தெய்வ உருவேற்றம் என்பன ஆய்வுப்பிரதேசத்தைப் பொருத்த வரையிலும் உலளாவிய நிலையிலும் தெய்வமாடுபவர் சமூகத்தலைவர் ஆகவும் கிராமிய நிலைப்பட்ட மருத்துவ நிபுணராகவும் சாதரண மனிதருக்கு மேம்பட்ட அதீத சக்தி வாய்ந்தவராகவும் வழிபடுவோரால் மதிப்பிடப்படுகின்றார் எனவே சடங்கு பற்றி வெளிவந்த இலக்கியங்களை வகுத்தும் தொகுத்தும் ஆய்வு செய்யும் முயற்சியானது இத்துறைசார் எதிர்கால ஆய்வாளர்களுக்கு திசைகாட்டும் கருவியாக அமையும் என நம்பப்படுகின்றது.

இதர புவியியல் பிரதேசங்களை போல் அல்லாமல் இலங்கையிலே மட்டக்களப்பு பிராந்தியமானது தனக்கென்று தனித்துவமான சமூக பண்பாட்டுக் கோலங்களை புலப்படுத்தி நிற்பதாகும் இதன் வழி,ஆகமம் சாராத,பத்தாசி முறையை அடித்தளமாகக் கொண்ட சமய வழிபாட்டு முறைகள் இங்கு பன்னெடுங் காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இத்தகைய ஒரு வழிபாட்டு வடிவமாகவே நாம் 'தெய்வமாடற் சடங்கினை' இனங்கான முடிகின்றது. அதீத தெய்வ உருவேறல்,தெய்வம் மனித உடலினுள் தற்காலிகமாக நுழைந்து வாக்குரைத்தல்,அடியார்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகளுக்கு தீர்வு உரைத்தல் என்பவற்றோடு அதீ பௌதீக வாத பண்பு, சடங்கும் புனைவும் கலந்த தன்மை,தனித்துவமான நாட்டாரியல் இலட்சனங்களை தழுவி நிற்கும் பக்தி சார் ஆட்டமுறை,இசைப்பாடல் (தருக்கள்), ஒப்பனைமுறை,நாடகத்தன்மை , குறியீட்டுப்பாடங்கிலான மொழியியல் புலப்பாடு , அருள் உணர்வுக்கு ஆட்படுத்தும் நிலை என்றவாறாக இச்சடங்கானது புலப்படுத்தி நிற்கும் பண்புக் கோலங்களும்,அவற்றின் நடைமுறைகளும் அவற்றின் பின்னால் உள்ள கருத்தியல்புகளும் மானிடவியல் ரீதியில் ஆய்வுக்குரித்தான கேள்வகளை கோரி நிற்கின்றன எனலாம்.

இதே சடங்கானது தமிழகத்தில் 'சாமியாடல்' எனவும் , இலங்கையின் வடபுலத்தில் 'கலையாடுதல்' எனவும், கிழக்கிழங்கையில் 'பேயாடுதல்' அல்லது 'தெய்வமாடுதல'; எனவும் அழைக்கப்படுகின்றது.பிராந்தியத்திற்கு பிராந்தியம் சடங்கு முறைகளிலும்,மரபுகளிலும் நியமங்களிலும் சிற்சில மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. தொன்மைக்காலம் தொடக்கம் தொல்சீர் மானிடவியலில் சமயத்தின் தோற்றம் வளர்ச்சி,சடங்குகள்,விஞ்ஞானத்திற்கும் புனைவிற்குமான வித்தியாசம் , சடங்குகளின் சமூக பண்பாட்டு உளவியல் நுட்பங்கள் பற்றி 'ஈவிடைலர்' தொடக்கம் பிரேசர் , மலி மேலும் நவீன கால மாணிடவியல் ஆய்வாளர்கள் ஈறாக விரிவாக ஆய்வு செய்துள்ளனர் எனவே இலக்கிய மீளாய்வு என்ற எண்ணக்கருவின் முதன்மைபாட்டினை கருத்தில் கொண்டு இந்த ஆய்வானது வகைப்படுத்தல் , வரலாற்று விபரணம், உள்ளடக்கப் பகுப்பாய்வு ஆகிய முறைமை இயலின் அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.தெய்வமாடற் சடங்கு பற்றி ஏலவே வெளிவந்த புலமைத்துவம் சார்ந்த ஆய்வுகள்,உலகளாவிய மட்டம்,தென்கிழக்காசிய மட்டம்;,தமிழக மட்டம் இலங்கை மட்டம் என்ற அடிப்படையில் விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

தரவுச் சொற்கள்:

ஆவியுலகவாதம், தெய்வமாடல், சடங்கு, அதிபௌதீகவாதம், குணப்படுத்தல், தொல்சீர் மானிடவியல்

அறிமுகம்

உண்மையில், தெய்வமாடல் சடங்கினை முடிந்த முடிபாக வரையறுப்பதில் இடர்ப்பாடு உள்ளது. மானிடவியலாளர் சிலரே அதனை ஒரு வகையான போலி வித்தையாகவும், அதிபௌதீக மனநிலையின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும் கருதுவதுண்டு. எனினும், சாதாரண அடியார்கள் ஆய்வுப் பிரதேசத்தில், தெய்வம் ஆடுவோரை தெய்வத்தின் வடிவமாகவே கருதும் போக்கு உள்ளது.இந்த நம்பிக்கை மரபு சமூக மானிடவியல் தளத்தில் ஆய்வு செய்வதற்கான நியாயப்பாட்டை வலியுறுத்துகிறது.

  தெய்வமாடல் சடங்கு என்னும் எண்ணக்கருவுக்கு ஓர் ஆரம்ப வரைவிலக்கணம் தேட முற்பட்டால் 'சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவில் பல்வேறு சமூக, பண்பாட்டுக் காரணங்களால் தோன்றி நிலைபெற்றவரலாற்றுக்கு முற்பட்ட ஒரு சமயச் சடங்கியலின் தோற்றப்பாடு' என்று வரையறுக்கலாம். எனினும்,பண்டைத்தமிழகத்திலும் இதற்கு நிகரான சடங்கு வடிவங்கள் நிலவியமைக்கான இலக்கியச்சான்றுகள் உள. (பக்தவத்சல பாரதி, பரமசிவன்.தொ.மு). வேறு ஒரு வகையில் கூறுவதாயின், இச்சடங்கினை சமூகக்கட்டமைப்பில் சாதாரண மாந்தரையும் தெய்வீக நிலைக்கு உட்படுத்தும் ஒரு வகையான சமயத் தொழில்வாண்மையாக்கம் எனவும் விபரிக்கலாம்.

               இங்கு தெய்வமாடுபவர் 'சாதரண நபர்' என்ற வகிபாகத்துக்கும் அப்பால், தலைமை தாங்குபவர், இயல் கடந்த ஆற்றல் மிக்கவர், நோய்களை குணப்படுத்துபவர் தீர்க்கதரிசனம் உடையவர் முதலான வேறு வகிபாகங்களையும் உள்ளூர் அடியார்கள் அவர்களுக்கு வழங்குகின்றமை அவதானத்துக்குரியது.

'உருவேறல்' , கட்டுரைத்தல் , ஆடல் , ஆசைவு நுட்பங்கள்,மந்திரப்பயில்வு , மந்திரக்கட்டு அவிழ்த்தல் , அடியார்களின் பயபக்தி என்பவையும் இங்கு மானுடவியல் தளத்தில் ஆய்வுக்குரியதாகிறது.

ஆய்வுப் பிரச்சினை

              பல்வேறு சமூக பண்பாட்டு மாற்றங்களுக்கிடையிலும், இச் சடங்கானது சமூக மாந்தரின் உணர்வுபூர்வமான நம்பிக்கையோடு நீடித்த தொடர்ச்சித்தன்மையை பேணி வந்துள்ளது.                 எனவே, இச் சடங்கின் பண்பாட்டுத் தனித்துவத்தையும் சமய ரீதியிலான மானிடவியல் கோலங்களையும்  நன்கு அவதானித்த நிலையில் இப் பண்பாட்டுத் தனித்துவம் சமூக சார்புடைமைக்கான அடிப்படைக் காரணங்களால் பகுத்து ஆராய்வதே இங்கு ஆய்வுப் பிரச்சினையாக அமைகிறது.

ஆய்வின் வரையறை

    இச் சடங்கின் சமய சமூக பண்பாட்டுத் தனித்துவங்கள். முதலாம் நிலைத் தரவுகள் ஊடாக, நேரடி அவதானிப்பின் ஊடாக மானிடவியல் தளத்தில் முன்னெடுக்கப் படுவதற்காக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. எனினும், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கோவிட் 19 பெருந்தொற்று முடக்க நிலைமை காரணமாக கோயில் திருவிழாக்கள். சடங்குககள் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டன. எனவே, ஆய்வின் கருப்பொருளில் சற்று மாற்றம் புகுத்தப்பட்டு இச் சடங்கு பற்றிய முன்னோடி ஆய்வுகளின் பகுப்பாக இந்த ஆய்வு வரையறுக்கப்பட்டது.

ஆய்வின் நோக்கம்

      மிக நீண்ட நெடும் பாரம்பரியம் மிக்க தெய்வமாடற் சடங்கு பற்றி ஏலவே வெளிவந்த இலக்கியங்களை அவதானமாக மறுவாசிப்புச் செய்தலும், அதனூடாக பிராந்திய நிலைப்பட்ட புலமைத்துவ  இடைவெளியை இனங்காணலும் , விஷேடமாக உலகளாவிய நிலை, தென்னாசிய நிலை , தமிழக நிலை , இலங்கையின் பௌத்த மரபு நிலை, இறுதியாக மட்டக்களப்பு பிராந்தியத்தின் தெய்வமாடல் சடங்குநிலை என்றவாறு பகுப்பாய்வின் வகைப்பாடு இடம்பெற்றுள்ளது.

ஆய்வின் முறைமையியல்

            இந்த ஆய்வு அடிப்படையில் இரண்டாம் நிலைத்தரவு மூலங்களையம் முதன்மையாக கொண்டுள்ளது. மானிடவியலாளரின் பார்வையில் சடங்கு என்பது                   சமய நம்பிக்கையின் செயல் வடிவமே ஆகும். சடங்கின் மானிடவியல் நிலைப்பட்ட பண்புகள் பல்தரப்பட்டவை. அவை விளக்கினால் பெருகும். (பக்தவத்சலபாரதி, 2005). தெய்வமாடல் சடங்கென்பது இங்கு ஆய்வுப்பொருண்மையாக இருப்பினும், இதன் அடித்தளமானது சமயத்தின் மானிடவியலாகும.; ஆதலினால் சமயத்தின் தொல்சீர் மானிடவியல் இலக்கியங்கள,; மந்திரங்கள் பற்றிய ஆய்வியல் நோக்கு. இறுதியாக தெய்வமாடற் சடங்கு பற்றிய முன்னைய ஆய்வுகள் என்பன கருத்தில் கொள்ளப்பட்டன. நூலின் தலைப்பு, நூலாசிரியர், நூல் அல்லது ஆய்வின் சாராம்சம் என்ற அடிப்படையில்தான் முறையியல் பேணப்பட்டது. எனவே, இங்கு பனுவலை                 அடிப்படையாகக் கொண்ட வியாக்கியானிப்பு முறை (iவெநசலனஎவைiஎளைi) உள்ளடக்க ரீதியான பகுப்பாய்வு முறை (உழவெநவெ யுயெடலளளை) முதலான பிரதான முறைமையியல் நுட்பங்கள் கைக்கொள்ளப் பட்டுள்ளன.

இலக்கிய மீளாய்வு

      மிக பயனுறுதி வாய்ந்த ஆய்வின் கண்டறிதலுக்கு இலக்கிய மீளாய்வானது அவசியமானதொரு முன்நிபந்தனையாக அமையும். நடைமுறையில் இருக்கும் கோட்பாடுகள,; கருத்தியல்கள், ஆய்வு முடிவுகள் மற்றும் தரவுகளை ஆழமாகவும். விமர்சன நோக்கிலும் மதிப்பீடு செய்வதே இலக்கிய மீளாய்வு எனப்படுகிது. குறித்ததொரு ஆய்வுக் கருப்பொருள் தொடர்பில் ஏலவே முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளை மிகக்கவனமாக மீளாய்வு செய்வதன் ஊடாக நிலவும் அறிவுசார் இடைவெளியை (மழெறடநனபந புயடி) இனங்காணலாம்.

இங்கு உத்தேச ஆய்வானது, தெய்வமாடற் சடங்கு பற்றியதாக அமைந்த போதிலும் மானிடவியல் தளத்திலான சமயச் சடங்கு என்ற விடயம்தான் அடிப்படையாக அமைகிறது. இத்தகு ஆய்வுகள் 18ஆம் நூற்றாண்டில்தான் ஆரம்பமாகின .இதற்கு தொல்சீர் மானிடவியலாளரான நு.டீ.டைலரின் (நு.டீ. வுலடழச) 'புராதன பண்பாடு' (வுh piஅவைiஎந உரடவரசந) எனும் நூலையும், அந் நூலில் சமய நம்பிக்கைகளின் படிமலர்ச்சி பற்றியும் மிக விரிவாக அவர் விவாதிப்பதனை இங்கு எடுத்துக்காட்டலாம்

பெறுபேறும் கலந்துரையாடலும்

சமயம், சமய நம்பிக்கைகள் பற்றிய முன்னோடி ஆய்வுகள்

  அனைத்து வகையான சமயச் சிந்தனைகளும் புராதன மாந்தரின் மனவெளியில் தோற்றம் பெற்றன என்பது E.B. டைலரின் வாதம். குறைந்தளவான உயிரினங்கள் மீது கொண்ட அச்ச உணர்வும், அவை பற்றிய மானிட கற்பிதங்களும், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான மனிதரின் விஞ்ஞானப்பூர்வமற்ற வியாக்கியானிப்புத் தன்மையுமே ஆரம்ப காலத்தில் சமயச் சிந்தனைக்கு வழிவகுத்துள்ளன. இத்தகைய சிந்தனையையே நு.டீ டைலர் 'ஆவி உலகவாதம'; என்று அழைக்கின்றார்.

           இது மட்டுமன்றி, E.B. டைலர் 'ஆதி மனித குலம் மத்தியிலான சமயத்தின் மெய்யியல்' (1866) என்னும் தனது நூலில், தொல்பழங்குடி சமூகங்களின் மத்தியில் நிலவிய சமய நம்பிக்கைகளின் மெய்யியல் பணபுகளை மதிப்பீடு செய்துள்ளார். அவரே 'காட்டு மிராண்டிகளின் சமயம்' என்ற நூலில் (1870) வரலாற்றிற்கு முற்பட்ட மனித குலத்தின் சமய நம்பிக்கை மரபுகள் , சடங்குகள் பற்றி.எடுத்துரைக்கும் முறையில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

இவரை அடுத்து, A.லாங் என்பார் 'புனைவு சடங்கு மற்றும் சமயம்' (1887) என்ற தனது நூலில் சமயப்புனைவுகள் செயற்படும் பாங்கு, அவற்றின் சமூகத் தொழிற்பாடு, அவை கொண்டுள்ள பௌதீக அதீத பண்புகள் பற்றியும் பகுப்பாய்வு செய்துள்ளமை அவதானத்திற்குரியது.

டீ.மலினோவஸ்கி என்னும் மானிடவியலாளர,; 'ஐரோப்பிய ரஸ்யாவிலும் , சைபீரியாவிலும் தெய்வமாடல் சடங்கு' என்கிற தலைப்பில் தான் வெளியிட்ட ஆய்வு நூலில் (1894) , சைபீரியா மற்றும் ஷ்யாவில் வாழ்ந்த பழங்குடி சமூகங்களின் தெய்வமாடல் மரபு பற்றிய விரிவான விளக்கப் பார்வையினை முன்வைத்துள்ளார.; அடிப்படையில் மனிதர்களின் பதற்ற உணர்வுகளுக்கான உளச்சீர்மியப் பிரதிபலிப்பே சமயம் என்பதாக அவர் வரையறுக்கின்றார.; பிறப்பு, பராயமடைதல், மரணம் இவை போன்ற மனித வாழ்கையின் உணர்ச்சிக் கொந்தளிப்பான தருணங்களை ஆற்றுப்படுத்துவதற்கும், கடந்து செல்வதற்கும் சமயம் பெருமளவிற்கு துணைபுரிவதாக அவர் கூறுகின்றார்.

சமயத்தின் சமூகவியல் சார்பான தத்துவார்த்த விபரிப்பையும், சமயத்தின் தோற்றுவாயையும் பற்றிய சிந்தனை ஓட்டத்தில் நாம் எமில் டேர்க்கிம்மை தவிர்த்து விட்டு நோக்க முடியாது. டேர்க்கிம் தனிநபர்களை விடவும், சமூக கட்டொருமைப்பாட்டிற்குத் துணைபுரியும் ஒரு கருவியாகவே சமயத்தை தோக்குகிறார். அவர் புனித பொருள்கள், தினசரி உலகியல் வாழ்வின் நியமங்கள்,மாசு என்பவற்றின் கூட்டுக்கலவையாக மதத்தை அவர் நோக்குவதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனிநபர் சார்ந்த பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு மதக்கட்டமைப்பு நிறுவப்படவில்லை. மாறாக சமூகத்தின் மகோன்னதமான இலக்குகள் , இலட்சியங்கள் என்பவற்றை நோக்கி மனிதனை அழைத்துச் செல்லும் கலங்கரை விளக்காகவே சமயக்கட்டமைப்பை பார்க்கின்றார். சமய நடவடிக்கைகள் சமுதாய வலுக்களை கூட்டிணைக்க உதவும் என்கிறார். அதனால்தான் அவரால் 'மதம் சமூகத்திற்கு வெளியே இல்லை உண்மையில் மனிதன் தன்னைத்தானே வழிபட முற்பட்டதன் விளைவுதான் மதம்' என்று துணிந்து கூறப்பட்டது. .

கீர்ட்ஸ்- எடுத்துக் கொண்டால், சமயம் என்பது கூட்டான சமூக நடவடிக்கையே ஆகும். மனித மனங்களில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் உணர்வுகளை தாண்டி, மனித வாழ்வின் இருப்புக்கான பொதுவிதிகளை நியமப்படுத்தி வலுவான சமூகத்திற்கு வித்திடும் குறியீட்டு முறைமைதான் மதம் என்று கீர்ட்ஸ் நீண்ட வியாக்கியானம் அளித்துள்ளமை அவரை ஒரு குறியீடு சார் செயற்பாட்டுவாதியாக இனங்காட்டுகிறது.

கவின் பிளட் மதத்தை விழுமியங்களுக்கான அடித்தளமான பெருங்கதையாடல்களின் தொகுப்பாகவும், மனிதர்களை குறிப்பிட்ட இலக்குகள் சார்ந்து நடத்தை ரீதியில் பிணைத்து வைக்கத் தூண்டும் சாதனமாகவும் கருதுகின்றார்.  

மேரி டக்ளஸ்(ஆயசல னுரபடரள)  இவர்களிலும் வேறுபட்ட விதமாக மத நம்பிக்கைகளை குறிப்பிட்ட சமூகக் கோலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் 'சமூகப்பிரபஞ்சமாக' சித்திரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு முன்னோடியான, தொல்சீர் மானுடவியலாளரான ஹேபர்ட் .பென்சர் ஆதி மனிதன் தனது கனவுகள் பற்றி  எழுந்த அச்சம், விசாரம் என்பவற்றின் ஊடாகத்தான் சமயம் தோற்றம் பெற்றது என்பார். மனிதன் ஒரு புறம் துயரை ஏற்படுத்தும் ஆவிக்கு அஞ்சினான்; மறுபுறம் வீரதீர செயல்கள் , தியாகம் புரிந்து வரலாற்றில் நிலைபெற்ற இறந்தவர்களை தெய்வீக அந்தஸ்திற்கு உயர்த்தினான். இவ் விதமாக முன்னோர் வழிபாட்டிலிருந்து மத நம்பிக்கைகள் பல்கி பெருகியதன் பின்புலம் பற்றி ஸ்பென்சர் விரிவாக பகுப்பாய்வு செய்தார். ஆனால், ஜேம்ஸ் பிறேசர மந்திரம்தான் சமய வாழ்விற்கு வழி வகுத்திருக்க வேண்டும் என நம்பினார். மக்கள் சில தாங்க இயலாத துரதிஸ்டம், துன்பியல் நிகழ்வுகளை அனுபவித்த பொழுதில் அவர்களுக்கு உளவியல் சார்ந்த தார்மீக ஆதரவு தேவைப்பட்டது. இதுவே சமய நம்பிக்கையை தூண்டியது. எனினும், பின்பு மக்கள் விஞ்ஞானத்தின் துணையைத்தான் நாட நேரிட்டது. எவ்வாறாயினும் , விஞ்ஞானம் , மந்திரம் என்பன கூட  பல அறிஞர்களாலும் பொருள் மயக்கத்திற்குள்ளாகிறது என்று இவர் விமர்சிக்கிறார்.

 

கட்டமைப்பு வாதியான  லெவிஸ்ராஸ்  சமூகக்கட்டமைப்பு, உறவுமுறை,பண்பாட்டியம் , புனைவுகள் ஊடாக சமய வாழ்வினன புரிந்து கொள்ள முற்பட்டார். இவரைப் பின்பற்றி பஸ்கால்  எனும் அறிஞர் உளவியல் சார் அறிதிறன் அடிப்படையில் பண்பாட்டு பரிமாற்ற முயற்;சியாக சமய நடத்தை இடம் பெறுவதை விளக்குகின்றார.;

இறுதியாக டலால் என்னும் புலமையாளரின் சிந்தனையை நோக்குவோம். இவர் சமயமானது,குறியீட்டுப் பாங்கிலே சமூக , வரலாற்றியல் ,அரசியல் பரிமாணம் உடையது என்கிறார். பண்பாட்டிடை நிலையில்  சமயத்தை ஆய்வு செய்வது பயன்மிக்கது எனக் கூறும் இவர் எவராலும் சமயத்திற்கு முடிந்த முடிபான உலகப் பொதுமையானதொரு வரைவிலக்கணம் ஒன்றை முன்வைப்பது சிரமசாத்தியம் என்று கூறுவதும் சிந்தனைக்குரியது.

ஹோமன்ஸ் என்பவர் சமயச்சடங்குகள் மனிதர்களின் மனப் பதகளிப்பை தணிக்க துணை புரிகின்றன எனக் கூறுவது சமகலாத்திற்கும் பொருந்துவதாக உள்ளது. ஹோவல் டாய் சமயச்சடங்குகளின் தன்மையினை விளக்கி, அவற்றுக்கு அடிப்படையாக பிணி நீக்கம், பொருளாதார நலன், சமூக அங்கிகாரம் முதலிய காரணங்களை கற்பிக்கின்றார் 

மந்திரப் பயில்வு தொடர்பான முன்னோடி ஆய்வுகள:;

மந்திரங்கள் பற்றி மானிடவியல் புலத்தில் ஆய்வு செய்த எச்.வெப்ஸ்டர் 'ஒரு குறிப்பிட்ட விஷேட நோக்கத்தை எய்தும் பொருட்டு விஷேட நிலையில் அதற்குரிய பயிற்சியோடு மேற்கொள்ளப்படுவதே மந்திரம் என்று வரையரை செய்துள்ளமை மட்டக்களப்பின் சமயச்சூழலுக்கும் பொருந்திப்போவதாகவே உள்ளது

எவான்ஸ் பிரிட்சரின்மந்திரம் தொடர்பான ஆய்வுகள் மானுடவியல் புலத்தில் மிகவும் பிரபல்யமானது. அவர் 'Azanda'  எனும் பழங்குடியினர் மத்தியில் நிலவிய சூனியம் மற்றும் சமய மந்திரங்கள் பற்றி களப்பணியை மேற்கொண்டு, விரிவான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளார்.வான் கேன்னப் மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டம் சார்ந்தும் மனிதர்களை வேறுபடுத்தவும், நிலைமாற்றவும், மீள இணைக்கவும் இச் சடங்குகள் உதவுமாற்றினை மானிடவியல் ரீதியில் மிக ஆழமாக ஆய்வு செய்துள்ளார.; கெனப்பின் ஆய்வணுகுமுறையானது, பின்வந்த மானிடவியலாளர்களின் ஆய்வுப்பார்வையிலும் கணிசமான செல்வாக்கு செலுத்தியுள்ளது. இவரை அடுத்து குளுக்மன் சடங்குகளின் அடிப்படையில் சமூக உறவுகள் திடமாக வடிவமைக்கப்படுவதனை தெளிவுபடுத்தியுள்ளார் (1962). ஹோப்மன் சடங்குகள் மனிதரோடு ஒரு தனித்துவமான வகையில் விஷேட ஊடகமாகத் தொழிற்பட்டு அவர்களோடு இடைவினை புரியும் தன்மை பற்றி பகுப்பாய்வு செய்கிறார்.

இவர்களிலிருந்தும் சற்று வித்தியாசமாக அர்ந்தனிகுட் என்பவர் தெய்வங்கள் உறையுமிடம் வெறும் பௌதீக வெளியாக மட்டுமன்றி, அவை இயல் கடந்த சக்திகளின் சாந்தம், அகோரம் ஆகிய இரு துருவ நிலைப்பட்ட குணப்பண்புகளை வெளிப்படுத்துகின்றன. அத்துடன் அடியார்களின் மனநிலையில் அவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என கூறுகின்றார் (1988).

இதற்கொப்பாக ரொனால்ட் கிரீம் என்பவர் ஆக்க நிலைச்சடங்கு எதிர்நிலைச்சடங்கு  என்ற வகையில் பகுத்து சடங்குகளின் இயங்கியல் தன்மையை புலப்படுத்துகின்றார்.

கீட்ஸின் பார்வை ஆழமானது. அது சமயப்பண்பாட்டியலின் தன்மையை புலப்படுத்துகின்றது. அடிப்படையில் சமயமும் ஒரு சமூக நிறுவனமே என்று இவர் வலியுருத்துகின்றார்.சடங்குகள் மற்றும் மந்திரம் பற்றிய மானிடவியல் ஆய்வுகளில் விக்டர் டேனரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. அவர் சடங்குகளை குறீயீடுகளின் வடிவமாகவே காண்பார் (1967 , 1969).

இவ்வாறு சமயத்தின் தோற்றம்,மந்திரங்களின் செயற்பாடுகள்,இவற்றின் சமூக இடைவினை பற்றிய  ஆய்வுகள் மானிடவியல் தளத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. மோரிஸ்(1987) சிமித்(1997) , பெல்(1999) , கொக்ஸ்(2006) பிராங்(2010) , மியா(2020) என்பதாக அவற்றை நாம்; தொகுத்துக் கூறலாம்.

 

தெய்வமாடற் சடங்கு பற்றிய முன்னைய ஆய்வுகள் பற்றிய பார்வை

ஆய்வின் கருப்பொருள் இதுவாகவே உள்ளது.ஆனால், தொல்சீர் மானிடவியல் ஆய்வுகள், களப்பணி நிலையில் முன்னெடுக்கப்பட்ட காலம் தொடக்கம், சமகாலம் வரை இப்பொருளில் மானிடவியல் ஆய்வுகள் பல்கிப்பெருகி உள்ளன. அவை பௌதீகம், பண்பாடு, தொல்பொருளியல், மொழியியல் முதலான மானுடவியலின் பிரதான பகுப்புகளின்  அடிப்படையிலும், மருத்துவவியல், நடத்தைவியல், சமூகஉளவியல், ஆற்றுகைக்கலை குறியீட்டு இடைவினைவாதம், பெண்ணியம், கட்டமைப்பு வாதம், பின்நவீனத்துவம் புனைவியல் வாதம், பண்பாட்டுச்சூழலியல் வாதம் என்ற வகையிலான வெவ்வேறு மானிடவியல் புலங்களின் பார்வையிலும் இச்சடங்கு பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டடு வருகின்றமை பதிவுசெய்வதற்கு உரியதாகிறது.

ஏலவே குறிப்பிட்டவாறு, தெய்வமாடற் சடங்கு பற்றிய முதலாவது மாணிடவியல் பதிவை ஆவணப்படுத்தியவர் B.மலினாவ்ஸ்கி ஆவர். இதன் பின்னால், இத் துறைசார் ஆய்வில் மிங்கில்மனின் ஆய்வுகளும் அவதானங்களும் குறிப்பிடத்தக்கன. அவர்தான் தெய்வமாடற் சடங்கின் உள்ளார்ந்த மானிடவியற் கோலங்களையும். அது சமூகப்பண்பாட்டு அசை வியக்கங்களோடு கொண்டிருந்த தக்க தர்க்க ரீதியான தொடர்புகளையும் தானும் தரிசித்து பிறரையும் தரிசிக்கச் செய்துள்ளார். அவரை விட uandleman(1967), La Barre(1970), Eliade(1975), Kandall (1985), Roges(1982), uolmberg(1983), Lebra(1960), Kewis(1971), wateh(1982), Noel(1997), wallis(2003), Mictechell(2003), Levin(2010)  முதலானோரின் ஆய்வுகளையும் இங்கு நாம் கோடிட்டுக் காட்டலாம்.

தொல்சீர் நிலையில் முன்னைய ஆய்வுகளில் தனித்துவத்தை பகுத்து நோக்கினால், மடோக்கஸ் என்பவர் (1923) தெய்வமாடற் சடங்கின் பரிணாம வளர்ச்சியையும் , அதன் பண்புநிலைகளையம் சமூக மானிடவியல் பார்வையில் வைத்து ஆராய்ந்துள்ளார். இவரை அடுத்து, று.பார்க் என்பவர் வடக்கு அமெரிக்க பிராந்தியத்திலுள்ள பழங்குடிச் சமுதாயங்களிடையே வாழ்ந்து, உடனுறைந்து உள்ளூர்த் தெய்வமாடலின் மரபுநிலைக் கோலங்களை பகுப்பாய்வு செய்துள்ளார்.

R.U.லொவி (R.U.Lowie) என்பவரின் ஆய்வும் குறிப்பிடத்தக்கது. இவர்தான் 'Washo' எனப்படும் பழங்குடியினரின் தெய்வமாடல் சடங்கியல் அம்சங்களை முதன்முதலாக ஓரளவுக்கு இனக்குழு வரைபியலாக (Ethnogrphy) ஆவணப்படுத்தியுள்ளார்.

S.P. நடேல் என்னும் மானிடவியலாளர் (1946) 'ரேடிய' மலைத்தொடர் பிரதேசப் பழங்குடி சமுதாயத்தினர் மத்தியில் நிலவிய தெய்வமாடல் சடங்கில் மதநிலைப்படுத்தப்பட்ட வன்மம் புலப்படுத்தப்பட்டமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

எட்வேர்ட் ஹார்ப்பர் என்பவர் (1957) தென்னிந்தியாவிற்கு களப்பணி மேற்கொண்டு, குறிப்பிட்ட காலம் அங்கேயே தங்கிருந்து கிராமியக் கோயில்களில் தெய்வமாடற் சடங்கு நுட்பங்களை நன்கு அவதானித்து தமது முடிவுகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில், இச்சடங்கு பற்றி முன்னெடுக்கப்பட்ட ஒட்டுமொத்த மானிடவியல் ஆய்வூகள் தொடர்பிலும் விரிவானதும் ஆழமானதும் அதே வேளை நடுநிலைத்தன்மையான பார்வையை வழங்கியவராக .நுடனைந எனும் அறிஞர் விளங்குகிறார.N.குயசைநானை என்னும் புலமையாளர் சற்று வித்தியாசமாக. ஆசிய நாடான யப்பானில் நிலவும் இச் சடங்கின் சில தனித்துவமான பண்புக்கூறுகள் பற்றிய தகவல்களை திரட்டி தருகிறார்.

மேற்குறிப்பிட்டவர்கள் சமய மானிடவியல் பண்பாட்டியல் முதலான தளத்தில்தான் அதிகம் தம்மை ஆழ்தியுள்ளனர. ஆனால் சில்வர்மேன் என்னும் ஆய்வாளரோ தெய்வமாடுவோர் தமது சுய பண்பாட்டினுள் திடகேசனப் பெற்றுக்கொள்வதாக நம்புகிற தெய்வீக ஆற்றல் என்பது அடிப்படையில் உளவியல் காரணிகளோடுதான் தொடர்பு பட்டது என்று நிரூபணம் செய்ய முற்படுகிறார்.(1967)

வெறும் சடங்காட்டம் என்பதற்கப்பால் உணர்வை இழத்தல் உணர்வு கடத்தப்படுதல் இயல் கடந்த சக்திகளின் உணர்வின் ஊடகமாக ஒரு புனிதமானவரின் உடல் தொழிற்படுதல் மனோபாவங்களில் மாறுதல் எற்படுதல் முதலபுதிய விடயங்களையம்  று.று.ளுயசபயவெ என்னம் அறிஞர் பேசியுள்ளமை இக்குறிப்பிட்ட ஆய்வுப்பாதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.(1973)

தெய்வமாடற் சடங்கியல் ஒரு வகையான சமய உலகம் சார்ந்த உளநிலைப்பட்ட 'ஆழ்ச்சி' இடம் பெறுவதாகவும் குறித்து உள்ளூர்ச் சமுதாய அங்கத்தவர் இதனை ஏற்றுக்கொள்ளவதாக அன்றேல் எற்றக்கொள்ளத் தூண்டப்படுவதாக றுயசநெச (1986) கூறுகிறார்.இக் கருத்தியல் ஆய்வுப் பிரதேசச் சூழலுக்கம் சில சமயம் பொருந்திப் போவதாக அமைகிறது.

துயநெ யுவமiளெழn - இத்தகைய சடங்குசார் ஆற்றுகைச் செயற்பாடுகள் ஊடாக, நோய்கள் தீர்க்கப்படும் நுட்பமான அம்சங்களை தனது களப்பணி ஊடாக Lewis (1989) எடுத்துக்காட்டினார். எனினும் இப்பிணி தீர்த்தல் விவகாரம் பற்றி மானிடவியலாளர்களிடையில் ஒருமித்த கருத்து இல்லை.

தெய்வம் ஆடும் சடங்கை முதன்மைபடுத்தாமல் அதனை நிகழ்த்தி வைக்கும் தெய்வம் ஆடுபவர் யார், அவரின் சமூக வகிபாவங்கள் யாவை என்பன பற்றியெல்லாம் றோஜர் (Roger ) விரிவாகப் பகுப்பாய்வு செய்துள்ளார்(1989).

Peter Garder என்பவர் நாடோடி இனக்குழுக்களின் ( Nomadic people) தெய்வமாடற் சடங்கின் தனிச்சிறப்பு பற்றிய தகவல்களை விளக்கமாகத் தொகுத்துள்ளார்.உலகின் இந்து தேசமாக கருதப்படும் நேபாளப்பிராந்தியத்தில் இடம்பெறும் இச்சடங்கின் முழுமையான அவதானக் குறிப்புரைகள் இனக்குழுவரைபியல்; ஊடாக Grogory Maskariene என்றும் ஆய்வறிவாளர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மீளவும் Winkelman இச் சடங்கின் நுட்பங்களையும்,மரபுகளையும் இயற்கைச் சுற்றாடலுடன் இணைந்தவாறு பகுப்பாய்வு செய்துள்ளார். (2000) கிறிஸ்தவ உலகுக்கும் அப்பால் யூத இன மரபில் இச் சடங்கானது மந்திரங்களோடும் தொடர் பட்டிருப்பது பற்றி Glein kller என்பவர் விரிவாக விளக்கின்றார்.(2003) .

Clerk peter முதலானோர் தொகுத்த 'Shamanism in india' என்னும் நூலில் ஆசியப் பிரதேசத்தில் நிலவும் தெய்வமாடற் சடங்கின் தண்மை பற்றிய மிக விரிவான ஆய்வுத்தொகுப்பாக அமைகிறது இதில் சைபீயா,சீனா,கொரியா உள்ளிட்ட தேசங்களின் பழங்கடி சமுதாயங்களில் இடம்பெறும் இச்சடங்கின் பண்பாட்டுக் கோலங்களின் ஒருமைத்தண்மையும் வேறுபாடுகளும் ஒரு சேர  ஆராயப்பட்டுள்ளன.

விமர்சனப்பாங்கில் பழங்குடிச்சமுதாய பண்பாடு பற்றியும் இச்சடங்கு பற்றி மாறி வரும் மேலையத்தேயத்தவரின் கருத்துருவாக்கம் பற்றியுமான விமர்சனப்பார்வையை A.Znamenski முன்வைத்தமையை நாம் எமது கவனத்தில் குறிக்க வேண்டும்(2007). Dobois என்பாரின் ஆய்வோ தெய்வமாடல் பற்றிய சமகால ஆய்வுகளில் இடம்பெறம் புலமைத்துவ அரசியல் பற்றிய விவாதம் இடம்பெறுகிறது (2017).

 

இலங்கை மட்டத்திலான ஆய்வுகள்

இலங்கையில் கிராமிய நிலைப்பட்ட சைவ மரபினுள் ஆண்டுக்கொரு தடவை கதவு திறந்து, தெய்வமாடி , கட்டுக்கூறும் இச் சடங்கின் வரலாறு மிக நீண்டது: ஆனால், துரதிஷ் வசமாக இதற்கு நிகரான பௌத்த மரபு நிலைப்பட்ட சடங்குகள் பற்றிய விரிவான புலமைத்துவ (மானிடவியல்,சமூகவியல்,சமூக-உளவியல்தளம் ) ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இதன்படி சில்வா என்பார் சிங்கள பாரம்பரியத்தில் முதன்மை பெறும் பாலி சடங்குகள் பற்றிய ஆய்விற்கு ஓர் அறிமுகம் வழங்குகிறார்.

பேராசிரியர் கணராத் ஒபேசேகரா பத்தினித் தெய்வ வழிபாடு பற்றிய தன் ஆய்வினை (1964) கிழக்கிழங்கையில் விரிவாக முன்னெடுத்த நிலையில் கண்ணகி அம்மன் கோயிலில் இடம் பெறும் தெய்வமாடற் சடங்கினை பற்றி விபரிக்க தவறில்லை.

இலங்கையர் அல்லாத சில ஆய்வாளரின் புலமைத்துவப் பணியும் இங்கு கணீப்பீட்டிற்குரியது.       Nur yalman இலங்கையின் சிங்கள பௌத்த சடங்குகளின் குணப்படுத்தல் நடத்தை  பற்றி பகுப்பாய்வு செய்துள்ளார்(1964).

இதற்கு மாற்றமாக B.Kaprefer  என்னும் மானிடவியலாளர் , சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இடம் பெறும் ஆவியோடு தொடர்பு பட்ட சடங்குகளின் சமூக இடைவினையின் தன்மை பற்றி ஆராய்ந்துள்ளார்(1975). இதனை விட, ஒபேசேகரவின் கதிர்காமத் தலத்தின் தீ மிதிப்புச் சடங்கு பற்றிய ஆய்வு(1978), தலைமுடி மழிக்கும் சடங்கு பற்றிய ஆய்வு (1988) , சமயக்குறியீடுகள் பற்றிய உளப்பகுப்பாய்வு(1990), நரமாமிசம் உண்ணுதல் பற்றிய புனைவின் காட்சிப்புலம்சார்         மானிடவியல் நிலைப்பட்ட ஆய்வு(2005), பௌத்தமரபில் முதன்மை பெறும் கர்மம் , மறுபிறப்பு தத்துவ விசாரணை பற்றிய விவாதம்(2008) முதலான ஆய்வுகளையும் சுட்டிக் காட்டலாம்.

சிங்களபாரம்பரியத்தில் இன்று வரை முதன்மை பெறும் 'தொவில்' சடங்கின் மானிடவியல் பின்புலத்தை ஆனந்த அபேசேகர ஆய்வு செய்துள்ளார்(1999). சிங்கள பௌத்த பாரம்பரியத்தில் , இந்து மத மரபின் செல்வாக்கினால் உள்ளீர்க்கபட்ட , நவக்கிரக வழிபாட்டு சடங்கில் உலகமயமாக்கல் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய விரிவான மானிடவியல் மதிப்பீட்டை               பிறேமகுமார டீ சில்வாவின் ஆய்வேடு தருகிறது(2000).

தமிழகத்தை எடுத்துக்கொண்டால் , மானிடவியல் நிலைப்பட்ட முதலாவது இனவரைபியலை நமக்கு தொகுத்து வழங்கியவர் தேஸ்டன்.எட்கர் ஆவார்.

பின்பு நவீன ஆய்வுகள் என்று எடுத்துக்கொண்டால்,ஆறு.இராமநாதன என்பவரால்; முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் தமிழக நிலைப்பட்ட சிறுதெய்வ வழிபாட்டுமுறை பற்றிய தரவுகள் கிடைக்கின்றன(1991). தமிழக நாட்டுபுறச்சடங்குகள், சாதரண மனித உறவுகளை ஒருங்கினைக்கும் பாங்கினை .முத்தயையாவின் ஆய்வு வெளிப்படுத்துகிறது(1996).

இவர்களை விட,தமிழ்நிலைப்பட்ட சடங்கியல் மானிடவியல் கோலங்களை கோட்பாட்டு வெளிச்சம் பாய்ச்சி,பிரயோக நிலையோடும் தொடர்புபடுத்தி ஆழமான பல ஆய்வுகளை பக்தவத்சல பாரதி ஆய்வு செய்துள்ளார்.நாட்டார் திருவிழாவின் அமைப்பியல்(1993),தமிழர் மானிடவியல்(2002) என்பன குறிப்பிடத்தக்கன.தெய்வமாடற் சடங்கின் மூலவேர்களை நாம்  வழமைபோல ஐரோப்பிய நிலை நின்று ஏன் சைபீரியாவில் தேடவேண்டும். உண்மையில் அதற்கான அடிச்சுவடுகள் சங்க இலக்கிய வெளியில் 'வேலன் வெறியாட்டாக' புலப்படுவதையும் , தமிழரின் நாட்டுப்பற வாழ்வியலில் இச்சடங்கு ஒரு வகையான சமய வன்ம உணர்வின் மடைமாற்றமாக தொழிற்படுதல் பற்றியும் அவர் முன்வைக்கும் புலமைத்துவ விவாதங்கள் ஆழ அகலமானது.

ஆய்வுப்பிரதேச நிலைப்பட்ட முன்னோடி ஆய்வுகள்:

ஆய்வுப்பிரதேசமாக அமைவது மட்டக்களப்புப் பிராந்தியமே ஆகும். இப் பிரதேசத்தின் தொல்வரலாறு,நிர்வாக முறைமை , பண்பாட்டு அம்சங்கள் , சமயவாழ்வு பற்றிய ஓரளவு பருமட்டான ஆரம்ப ஆய்வாக S.O. கனகரெத்தினத்தின்  'Monograph of Batticaloa'(1923) அமைகிறது என்பது ஆய்வாளரின் அபிப்பிராயமாகும்.

இதற்கும் அப்பால், F.C.X. நடராஜாவின் 'மட்டக்களப்பு மான்மியம்' , வீ.சீ.கந்தையாவின் 'மட்டக்களப்புத் தமிழகம்'|. ஏன்பன ஒரு சில அடிப்படைத் தகவல்களையே தருகின்றன. 'மட்டக்களப்பு பூர்வ சரித்திரமும்' இங்கு குறிப்பிடத்தக்கது. இதனை சா..கமலநாதன் கமலாகமலநாதன் இருவரும் மீள்பதிப்பு செய்துள்ளனர்.மட்டக்களப்பின் சில கோயில் வரலாறுகள் .தங்கேஸ்வரியினால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. .மகேஸ்வரலிங்கம் மட்டக்களப்பின் சிறுதெய்வ வழிபாடு பற்றிய பருமட்டான தகவல்களை தொகுத்துள்ளார்.(1996).

.இன்பமோகன் கிழக்கிலங்கைச் சடங்குகளை அழகியல் தளத்தில் வைத்தே நோக்கியுள்ளார்.இவர்களை விட சி.மௌனகுரு மிக அண்மையில்(2020) கிரானில் அமைந்துள்ள குமார தெய்வத் தலத்தின் தனித்துவமான சமய பண்பாட்டு அம்சங்களை சிறு கட்டுரையாக வரைந்துள்ளார். இதனோடு மண்டூர் முருகன் கோயில் , ஆரையம்பதி கந்தசாமிகோயில், புன்னைச்சோலை காளியம்மன் கோயில் முதலானவை பற்றியும் வெளிநாட்டு,உள்நாட்டு,ஆய்வாளர்களால் சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேராசிசியர் என்.சண்முகலிங்கன் புன்னைச்சோலை காளி கோயில் சடங்கினை காட்சிப்புல மானுடவியல் நுட்பத்தின் ஊடாக ஆவணப்படுத்தியுள்ளார் தொகுத்த நிலையில்  சி.சீவரத்தினம், து.கௌரீஸ்வரன், சொ.பிரசாத், .சந்திரசேகரம், .தில்லைநாதன் .சண்முகலிங்கம், சிவகணேசன், அருளம்பளம், .கோபாலரத்தினம் கு.சண்முகம் முதலானோர் மட்டக்களப்பின் சமய வாழ்வியல் பற்றிய ஆய்வுகளை தமது புலப்பதிவுகளாக ஆங்காங்கே பதிவு செய்து வருகின்றனர். எவ்வாறாயினும், ஏலவே குறிப்பிட்டவாறு, தெய்வமாடல் சடங்கின் சமூகக் கோலங்கள், உளவியல் தன்மைகள், புனைவியல் வாதம், அதிபௌதீக வாதம், இச்சடங்கின் இருப்பு, தொடர்ச்சித்தன்மை இவற்றை மானிடவியல் தளத்தில் புலமைத்துவ அறத்துடன் ஆழமாவும் விரிவாகவும் நெறிமுறையாக இற்றை வரை ஆய்வுக்குட்படுத்தப்படாமை 'அறிவுசார் இடைவெளியாகவே' உணரப்படுகிறது.

முடிவுரை

இக்குறிப்பிட்ட ஆய்வானது, தெய்வமாடல் சடங்கு பற்றிய முன்னோடி ஆய்வுகளின் முறைமைப்பட்டதொரு தொடக்க நிலைப்பகுப்பாய்வே ஆகும். திட்டமிட்ட வகையில்,நேரடியான பங்குபற்றல் அவதானம், பிரதான தகவலாளிகளுடனான நேர்காணல், எடுத்துரைப்பு முறை,குழுமக்     கலந்துரையாடல், காட்சிப்புல ஆவணப்படுத்தல் முதலிய ஆய்வு நுட்பங்களின் ஊடாக முதன்நிலைத்தரவுகள் திரட்டப்பட்டு , இச்சடங்கின் பண்பாட்டு அசைவியக்க தன்மைகள் தொடர்பான மானிடவியல் சார் கண்டறிதல் எய்தப்பட்டிருக்கலாம். அந்த வாய்ப்பினை உலகையே பாதித்து நிற்கும் கொவிட் 19 பெருந்தொற்று அச்சுறுத்தல் நிலைமையானது தடுத்துவிட்டது. இதனால் இக் கருப்பொருள் தொடர்பாக விரிவாகவும் ஆழமாகவுமு; திரட்டப்பட்; இலக்கியங்கள் , முன்னோடி ஆய்வுகள், கள அறிக்கைகள் ஆய்வுநோக்கோடு இங்கு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இதுவரை பகுப்பாய்வு செய்யப்பட்ட முன்னோடி ஆய்வுகளின் வழியே சிந்திக்கும் இடத்து,இச்சடங்கின் உலகளாவிய தொன்மை நிலை , அதன் பரவல் தன்மை பண்பாட்டுக் கோலங்கள், சமூகஉளவியல் பண்புகள் இச் சடங்கின் இயல் கடந்த தன்மை என்பன பற்றிய  புலமைத்துவ மதீப்பீட்டை ஏற்படுத்திக்கொள்ள எதுவாக  அமைகிறது. அத்துடன் தெய்வமாடற் சடங்குகளின் தொல்சீரத்; தன்மை பற்றியும் அறிய முடிகின்றது. காலகட்டம், பிராந்தியம்,பொருள் வகுப்பு என்பன சார்ந்து முன்னோடி ஆய்வுகளினை பண்பு அடிப்படையில் இனங்காணவும் முடிந்துள்ளது.இதற்கும் அப்பால், ஆய்வுப் பிரதேசத்தில் சமஸ்கிருத மயமாக்கம்,உலகமயமாக்கம் வேறுபல சமூக பண்பாட்டு மாற்றங்களினையும் எதிர்கொண்டு ஒரு 'வாழும் மரபாக' இச்சடங்கு தெடர்ந்தும் முன்னெடுக்கபடுவது ஏன் என்ற சிந்தனையையும் இப் பகுப்பாய்பு தூண்டுகிறது. எனவே, இச்சடங்கியலில் உள்ளுறைத்தன்மையான குறியீட்டுத்தன்மைகள், அதன் அர்த்தங்கள், இச் சடங்கின் சமூக மானிடவியல் அம்சங்கள்,பண்பாட்டுக் கோலங்கள், சமூகஇடைவினை , இசை , ஆற்றுகை முறை , இச் சடங்கானது சிகிச்சை முறையாக நம்பப்படுதல் என்பவை பற்றியும,; உள்ளூர் மயப்பபட்ட இச் சமயப்பண்பாட்டு முறைமையை அல்லது சடங்கியலை உள்ளிருந்தே அவதானிக்கும்(     ) அவசியப்பாட்டையும் , முறைமையியலுடன் கூடிய எதிர்கால ஆய்வுத் தேவையினையும் இந்த ஆரம்பநிலை ஆய்வு வலியுறுத்தி நிற்கிறது எனலாம்.

References:

1.       Atkinson, J.M. (1992). Shamanisms Today. Annual Review of Anponthrology 21: 307 – 330

2.       Bernard, H.R. (2011). Research methods in anthropology: Qualitative and Quantitative approaches. Rowman Altamira.

3.       Boas, F. (1930). The religion of the Kavakitutl Indians. Colombia University Press.

4.       Campbell, C. (2015). Easternization of the West: a thematic account of cultural change in the modern era, Roudledge.

5.       De Silva, W.A. (1911). “Note on the Bali Ceremonies of the Sinhales”, Journal of the Royal Asiatic Society (Ceylon Branch). Vol.XXIII

6.       Dougles, Mary (1966). Purity and Danger: An Analysis of the concepts of pollution and Taboo, London: Routledge and Kegan Paul.

7.       Dubois, T.A. (2009). An Introduction to shamanism. Cambridge University Press Cambidge.

8.       Durkheim, Emile. (1912/1965). The Elemantaryy Forms of Religious Life > New York. Free Press.

9.       Eliade, M. (1954). The myth of Eternal return or Cosmos and Hostory, Princeton University Press: Princeton.

10.   __________________, (1959). The Sacred and Profane: The Nature of religion, Harcourt Brace Jovanovich.

11.   ___________________ (1964). Shamanism: Archaic Techniques of Ecstacy: Princeton University Press: Princeton.

12.   Evans – Pritchard, E.E. (1937). Witchcraft, oracles, and magic among the Azande. Clarendon Press.

13.   Fleisher, Saith.L. Rethinking Historical Change in Sri Lankan Rituals: Deities, Demons, Sorcery and the Ritualization of Resistance in the Sinhala Tradions of Suniyayam “Journal of Anthropological research 52, 19 Spring, 1996, 29- 59.

14.   Frazer.J. (1922). The golden bough: A study in magic an d religion, Macmillan Press.

15.   Geertz, Cliford (1969). Religion as a Cultural System. In Michael Banton 9ed.). Anthropological to the study of Religion, Tavistock: London.

16.   Harner, M. (1990). The way of shaman. Harper & Row.

17.   La Barre, W. (1970). The ghost dance: Origins of religion. Doubleday Publications.

18.   Levi- Strauss, C. (1963a) The Sorcerer and his magic. In: Structural Anthropology Vol. I pp. 167 – 185. Basic Books.

19.   Lewis, I.M. (2003). Ecstatic religion: A study of shamanism and spirit possession, 3rd ed. Routledge.

20.   Malinowski, B. (1948).  Magic, Science, and Religion. In: Magic Science and religion and other essays. pp.17- 92. Doubleday Publications.

21.   Mauss, M. (1902/ 2001). A general theory of magic. Rouledge.

22.   Nadel, S. F. (1946). A study of Shamanism in the Nuba Mountains. The Journal of the Royal Anthropological Institute 76: 25- 37.

23.   Obeysekere, G. (1963). “The Great Tradition and the Little in the perspective of Sinhales Buddhism”. In Journal of Asian Studies.

24.   _____________________ (1972). “Religious Sympolism and Political Change in Ceylon. Modern Ceylon Studies I no 1.

25.   _______________________ (1977). “Spcial Change and the deities: The rise of the Kataragama Cult in Modern Sri Lanka. Man, ns,12.

26.   _______________________(1978). “The Fire – Walkers of Kataragama: The rise of Bhakthi Religiosity in Buddhist Sri Lanka “. Journal of Asian Studies, 36.

27.   Park, W.Z.  (1938). Shamanism in Western North America: A study in cultural relationships. Northwestern University Press. 

28.   Radcliffe- Brown, A.R. (1964). The Andaman Islanders First Free. The Free Press.

29.   Rogers, S. L (1982). The Shaman: His symbols and his healing power. Charles C. Thomas.

30.   Tylor, E.B. (1883). Primitive Culture: Researchers into the development of mythology, philosophy, religion, language, art and custom. Third Amer. Henry Holt and Company.

31.  Wallace, A.F./ (1966). Religion: An Anthropological view. Random House. 

32.  Winkeleman, M. (1986). Trance States: A theoretical model and cross- cultural analysis. Ethos 14: 174 – 203.

33.  _______________(2002) . Shamanism and Cognitive evolution. Cambridge Archaeological Journal 12: 71 – 101.

34.  __________________(1990). Shamans and other “magico – religions “healers: A cress – cultural study of their origins, nature, and social transformations, Ethos,18 308 -352.

35.  Turner, Victor. (1967). The Forest of Symbols: Aspects of Nidembu Ritual, Ithaca, NY, Cornell University Press.

36.  ­­­­­­­­­­­­­­­­­__________________(1972). "Religious Specialists", In D.L. Sills (ed.). International Encelopedia of the Social Sciences, 13, New York: Macmillan ,437 – 44.

37.  Weber, Max. (1922/ 1963) The Sociology of Religion, Boston: Beacon.