7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 மே, 2022

துளிப்பாக்கள் (ஹைக்கூ) - தா. சரவணன்

 


 

பட்டுப்போன மரம்

பூத்திருக்கிறது

பறவைகளால்

∆

வறண்ட ஏரி

வளர்ச்சியடைந்த

கட்டடங்கள்

∆

விலங்குகளின்

கதறல் சத்தம்

பற்றி எரிகிறது காடு

∆

கண்டபடி திரியும் மனிதர்கள்

வரிசையில் நின்ற மரங்களை

வெட்டிவிட்டார்கள்

∆

உண்ணாதிருந்து

உயிர்விட்டது மாடு

குடல் எங்கும் நெகிழிப்பை

 

தா. சரவணன்

கல்யாணமந்தை


கருத்துகள் இல்லை: