4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

கவிஞரேறு வாணிதாசனாரின் ஆத்திசூடி மற்றும் கொன்றைவேய்ந்தோன் - முனைவர் பீ. பெரியசாமி


 



கவிஞரேறு வாணிதாசனாரின் ஆத்திசூடி மற்றும் கொன்றைவேய்ந்தோன் ஆகிய படைப்புகளுக்கு பாவலர் வளர்மதி முருகன் அவர்கள் தெளிவான நடையில் அனைவரும் எளிதில் புரியும் வகையில் தெளிவுரை எழுதியுள்ளார். அதனை கனி குறள் பதிப்பகம், புதுச்சேரி அவர்கள் 2021 இல் வெளியிட்டுள்ளனர்.

இந்நூலுக்கு புலவர் இ. பட்டாபிராமன், கவிவேந்தர் கா. வேழவேந்தன், பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், புலவர் வெ. அனந்தசயனம், பாவலர் கருமலைத் தமிழாழன், முனைவர் சு. வேல்முருகன் ஆகியோர் அணிந்துரைகளை அளித்துள்ளனர். பாவலர் பொன்வாணி ஜானகிராமன் அவள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்துள்ளார்.

புதிய ஆத்திச்சூடியில்,

“உடைமைப் பொதுசெய்”

என்பதற்கு “நாட்டில் பொதுவான உள்ள அனைத்தையும் தனி உடைமை ஆக்காமல், பொதுவுடைமை ஆக்கவேண்டும். உடைமைகளைத் தமக்கே உரியது என்ற கொள்ளாமல் பிறருக்கும் பயன்படும் வகையில் வாழவேண்டும்.” என விளக்கமளித்துள்ளார். இதில் அவருடைய பொதுவுடைமை சிந்தனை வெளிப்படுவதை நாம் அறியலாம்.

அதேபோல்,

கொன்றைவேய்ந்தோனில்,

“சூழ்ச்சியால் பிறரை வீழ்த்தவெண் ணாதே”

என்பதற்கு, “சூழ்ச்சி செய்து கீழ்த்தரமான செயல்களால், பிறரை வீழ்த்த எண்ணக்கூடாது” என்கிறார்.

இந்நூலானது, புதிய ஆத்திசூடி, கொன்றைவேய்ந்தோன் ஆகியவற்றின் தெளிவுரையோடு நினைத்துப்பார்க்கிறேன் எனும் தலைப்பில் வாணிதாசனாரின் வாழ்க்கை வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் சுவடுகளாய் சில நிழற்படங்களும் அளித்திருப்பது மேலும் சிறப்பு. நிறைவாக வாணிதாசனாரின் படைப்புகளை வரிசைப்படுத்தி அளித்துள்ளார் நூலாசிரியர்.


நூலாசிரியரைப் பற்றி...




முனைவர் பீ. பெரியசாமி