4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜூன், 2022

உடல்மொழியாடல் - மைத்திரி அன்பு

 உடல்மொழியாடல்

அர்த்த ராத்திரியின் கருகருப்பு

அடர்ந்து

அறைமுழுவதும் இரைந்து கிடக்க...

கிழிந்த நளினத்தோடு

நடுசாமம் கவிழ...

 

இன்னதென இனம் புரியா

பரிதவிப்புகளுடன்

வாசிக்க நேர்ந்தது,

 

மெளனம் நிரப்பியுள்ள

உடல் மொழி கவிதையொன்றை...

 

சொல்லப்படாத சொல்ல முடியாத

இயலாமையினூடே...

வசீகரிப்பின் ஓயாத அலைகழிப்பு

அரங்கேற்ற அபிப்ராயங்களின்

அடையாளம் தெரியாத அளவில்

அதற்குள்

தன் இருப்பை நிரப்பியிருந்தது.

 

சீரமைக்கப்பட்ட

அர்த்தமும் ஒழுங்கீனமும்

அதற்குள் வியாபித்திருக்க...

அதற்கான அர்த்த தேடலில்

முயற்சித்து முயற்சித்து

விடுபடமுடியாமல்

மூழ்கடிக்கப்பட்டேன் நான்!

 

இன்னும் கூட அறியபடவில்லை

மரணம் உடுத்தி வரும்

ஆண் பெண் புரிதலும்!

அதனூடான காதலும்!!

 மைத்திரி அன்பு, காஞ்சிபுரம்