4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

மானுடச் சரிவு - மைத்திரி அன்பு

 

மானுடச் சரிவு

 

ஒரே இரவானாலும்

காலை தீட்டும் திரையினூடே

அபூர்வமென

பகல்கள் பலமாதிரி!

 

வையம் வரண்டகல

பெருமழை ஏதுமின்றி

துயரங்கள் துருபிடித்துப்போக...

 

இருந்துமிருக்கிறது

வறட்சி மட்டும் மீதமாய்...

 

தற்போது ரகசியங்களில்லை

அம்பலப்படுத்த...

குறிப்புகளில்லை சேகரிக்க...

எழுத்துகளில்லை பகிர்ந்துகொள்ள...

சுய பரஸ்பரமில்லை நேசிக்க-நிரூபிக்க...

இருந்தும் எல்லாம் அதனதனூடே

ஒரே மாதிரி!

 

தொடர் செலவழிதலினூடே

மானுடம் சரிய

 

இரவு ஒரே மாதிரியும்

பகல்கள் பலமாதிரியும்.