4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஜூலை, 2022

வருடும் நினைவு - மைத்திரி அன்பு

 

வருடும் நினைவு

 

வழிமறித்தல்

பற்றுதல்

 

தொலைதூரத்துக்குப் பின் தொடர்தல்

 

திசைமாற்றி இழுத்துச் செல்லல்

 

இரசனை மறுக்கச் செய்து

எண்ணக் கூட்டங்களின்

நுழைவாயில் அடைத்து

ஒற்றைப் புள்ளிக்குள் மையப்படுத்துதல்

 

இரவை நிறுத்தி

மனதூக்கத்தைக் கட்டிவைத்தல்

 

அகாலத்தில்

குரலாய் ஒலி எழுப்புதல்

 

துள்ளியமாய் உணரச் செய்தல்

 

தருணங்களைக் கடந்து போகவிடாமல்

நிறுத்திவைத்தல்

 

மனிதனால் நினைவின் பிடியிலிருந்து

அத்தனைச் சுலபமாய்

வெளியேற முடிவதில்லை

ஆம்

அதன் வருடல்

வாழ்நாள் குருரத்துடனாது.