4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 அக்டோபர், 2022

சங்ககால மரங்கள் - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

 

சங்ககால மரங்கள்


              வரை ஓடு உரசியதால் வான் நெற்றியில்

              பௌர்ணமி சந்தன மரம்

 

செத்துப் போன விழுதுச் செத்தை மண்ணை விட்டு

 விண்ணைத் தொட்ட உரம் ஆலமரம்

 

விண்ணைத் தூய்மையாக்கும் வாழ்க்கை விலகிப்போய்

பிஞ்சு போனேன் இரண்டு நாளில் ஈச்சமரம்

 

மூச்சு தவிப்பாளருக்கு கைதட்டி தலையசைத்து

ஆக்சிஜன் தந்து எழுப்பும் அரசமரம்.

 

கட்டிட விரிசலில் ஒளிந்து சரித்தரம் படைக்கும்

வேர் குவாரியில் தேடும் சங்க நிழல் இச்சி மரம்.

 

முள்போர்வைக்குள் நற்றமிழ் வையகம்

சிறு காம்பில் உறங்காமல் ஆடுகிறது பலாமரம்.

 

இயற்கையின் தண்டு வாரா வறண்ட நாவின்

மணி ஒளியின் கார் ராகம் அண்ணாந்தால்

முல்லை தலைவி கொன்றை மரம்.

 

நுவ்வைக்கு மங்களநார் ஈட்டான தலைவன் தலைவி

விவாக பஞ்சாயத்து அடி புன்னை மரம்.

 

கன்னத்தைக் கிள்ளி கடித்தான் ஜாடையில்

தலைவன் செம்முக மந்தியின் அழியாத வரம்.

தவஞானியிடம் அத்தி மரம்.

 

இளங்கோ கதை சொன்னாயா தச்சனிடம்?

கண்ணகி 14 நாட்கள் அமர்ந்து தியானம் செய்

மரத்தை தேடுகிறோம் வேங்கை மரம்.

 

 முனைவர் கோ..பரத்வாஜ்