4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2022

பறவைகளின் கவிதை- முனைவர்.கோ.வ.பரத்வாஜ்

 


பறவைகளின் கவிதை

 

காக்கா                    :  அமாவாசை கும்பிட கடன் வாங்கி

                            வருவதற்குள் வட, பாயசத்து

                            இலைக்கு கரைகின்றது

 

மயில்          :  தேசத்தில் பச்சைமழை  பொழியாததால்

              முராரி அகவல் இறைவனிடம்

 

கழுகு           :  குறிஞ்சியில் வறுமையில் வாழுகிறேன்

               அமெரிக்கா நாணயத்தில் நீ

                           அல்லவா! கொண்டு வா எனக்கு

 

அன்னம்     :  பாலைப் பருகி காவிரியை

                           விட்டுவிட்டேன். நான்

               கர்நாடக மாநிலம் அல்ல

 

பச்சைக்கிளி        :  டாய்!!! மீனாட்சி சொல்கிறேன் டா

               அவன் வாயில், சொடக்கில், சீட்டில்

               மாட்டிக்கிடாதீங்க பொழப்புக்கு போங்கடா

 

குயில்         :  மண்ணின் விரலான மூங்கில் நுனியில்

   ஆகாய ராகம்

   கண்ணனோடு  கவிஞர்களும்

   இவ்விசையில் தியானம்

 

புறா             :  இராஜாவுக்கு சக்கரையாம்

   சப்பாத்தி சாப்பிட அழைப்பின்

   ஓலை.... சிபி உடனடியாக

 

கொக்கு      :  பள்ளங்களில் மேகங்களை நிரப்ப

   மீன்கள் எம் முகவரிக்கு வர

   ஒற்றைக்கால் தவம்

 

வாத்து               :  குளத்தில் மகிழ்ச்சி மன்ற கூட்டம்

           தலைப்பு துன்பமே பேக்

 

நாரை            : பனங்கிழங்கை  தூதாக

                           விட்டு காதலை

   தெரிவித்தவன் ராக்கெட் ராஜா

 

 

 சேவல்          : 4 மணி நடைப்பயிற்சிக்கு பூமி ஓட

   விளையாட்டு ஆசிரியர் அரோகரா துவக்கம்

 

 

பெட்டைக்கோழி: உலக உருண்டையை சுமக்கலாம் சாப்பிடுங்கள்

    நான் தரும் நாட்டு முட்டை

 

 

 

 

 

துக்கான குருவி : காதலை சம்மதித்ததால் தர்பை

    நாரில் ஆடும் வாஸ்து

    கப்பல் மின்மினி கேமராவோடு

 

சிட்டுக்குருவி   : எங்கள் உயிரை காக்க

    அலெக்சாண்டர் கிரஹாம்பெல் இன்

    கல்லறையில் எழுந்து வா என்ற

    ரிங்டோன் வைத்திருக்கிறோம்

 

யோசனை சிட்டு : பிளவுபட்ட நாக்கில்

     மலர்தேன் பட்டதும் இரட்டைக் கிளவியின்

     இலக்கண தமிழிசை

 

மரக்கொத்தி           :  பயன் மரத்தின் பொந்தில்

பாதுகாக்கும் அந்த சித்தருக்கு

ஜீவசமாதி இல்லை

 

பென்குயின்            :        பனிப்பாறையில் பருதியின்

விரலைத் தேடும் தம்மை

காக்க வட்டமான

உயிர் ஓவியம்

 

ஆந்தை          :  வானத்தில் தீண்டாமையின் பரப்பு இல்லை

மக்களின் பார்வை எண்ணத்தில்

இந்த லட்சுமி எப்படித்தான்

வாழ்வது

 

மைனா          :        ஏழு ஸ்வரத்தில் இசைக்கப்படுகிற

கருவிகள் உன் பாட்டின்

ஏழு குரலுக்கு தாளம்

எப்படி முடியும்

 

வெட்டுக்கிளி         :  சீனாக்காரர்கள் உண்கிறார்கள்

எங்கள் வம்சத்தின் புரட்சித்

தலைப்பு வயல் ஒழிப்பு

 

முனைவர்.கோ..பரத்வாஜ்