4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2022

மழலைப்பாட்டு - முனைவர் கோ.வ.பரத்வாஜ்

 

மழலைப்பாட்டு

திமிங்கலமே! திமிங்கலமே!

எங்கே திரியுற

திருவள்ளுவன் சொன்ன

உலகக் கடலில் நீந்துற

 

கொக்குகளே! கொக்குகளே!

எங்கே பறக்குறீங்க

நதிக்கரையில்

ரிங்காரோசஸ் ஆடப்போறங்க

 

கூவும் குயிலே! கூவும் குயிலே!

பாட்டு யாருது?

தமிழ்ப்பற்றால் பாடிய

பாரதிதாசனது

 

ஒளவைப்பாட்டி! ஒளவைப்பாட்டி!

இங்கே வாருங்க

முதுகில் தமிழைச் சுமந்ததுபோல்

என்னையும் தூக்குங்க

 

குழந்தைகளே! குழந்தைகளே!

சோலை வனத்தில் என்ன செய்யுறீங்க?

நாம் உயிர்வாழ கலாம் அய்யா

மரம் நடச் சொன்னாருங்க

 

நாட்டை ஆண்ட நேரு மாமா

நெஞ்சுல ரோஜா பூ அது

மழலைச் சிரிப்பின் கவலையில்லா

வாழ்க்கையைக் காட்டுது

 

நிலாவே! நிலாவே!

நமக்கும் ஏன் இடைவெளி?

நட்சத்திர முகக் கவசம் அணிந்தால்

வராது கொரோனா நோய்

 

வள்ளியப்பா பிறந்த தேதி ஏழு

இரண்டால பெருக்கினால்

மழலை தினம் பதினாலு


முனைவர் கோ..பரத்வாஜ்