4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 டிசம்பர், 2022

பாரதியார் - முனைவர் கோ.வா.பரத்வாஜ்

 

 

பாரதியார்

 

சிந்தனை சூடான போது

குளிர்விக்கவா தலப்பாவை

சூடினான் .

 

நெற்றியின் திலகம் தான்

தேசப் படத்தில்

 ஒளி வீசியது

அதன் கிறுக்கல்களை திரித்து

 புதுத் தமிழ் நூலாலே ஒற்றுமையில்

கட்டியவன் .

 

இரு புருவங்களை வீதியாக்கி

பெண்களை உலா செய்தவன்

அச்சமில்லை என்னும்

திறம் தந்தவன்.

 எட்டுத் திக்கிலும்

 புரண்டான்

 மீசையில் ஒட்டிய மண்

 வீரத்தை கடன் வாங்க வந்தேன்

பயன் உறவே.

 

தமிழ் தமணியை

 உடுக்கையில் கட்டி

துடிக்காத இதயங்களின்

 எண்ணங்களை

விடுதலையின்

 ஓசையாக இசைத்தார் .

 

ஏடும் கோளும் மாறிய

அடிமைகள், பிறந்ததும்

 தமிழ் அவன் கையில் தந்தது,

 கவி வாளால் நெருப்பை ஏந்தி

உலா வந்தான்

 

சாஸ்திர கேணியில்

அல்லியை மலர வைத்த

நிலவல்ல அவன்

பக்கத்தில் ஆழியின்

அலையாய் எழுந்து

மூடத் தோணிகளை ஒதுக்கியவன்

 

அவன் பழம் கொடுத்த

யானையோடு, குழந்தைகள்

வரையவில்லை  தமிழ் நம்பிக்கையால்

வா வா பாரதி என்னும்

குழந்தை பாட்டு .

 

தொல்காப்பியன்  இருந்தால்

பாரதியின் நுரையீரலுக்கு நூற்பா

எழுதி இருப்பான்

பாரதி என சீர் பிரித்தால்

 நேர் நிரை கூவிளம்

அதுவே, தமிழுக்கு புகலிடம்!!

 

முனைவர் கோ.வா.பரத்வாஜ்