4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

என்றைக்குப் பொங்கல் - முனைவர் கோ. வா. பரத்வாஜ்

 

என்றைக்குப் பொங்கல்

பரந்த உலகத்தின்

பசுமையில்

எத்தனை மைல்

விவசாயம்

உளழசேற்றை

உருவாக்கி நாத்து விட்டு

போனான் ஆறாம்

மாதத்துக்குள்

களம் குழம்பிப் போனது

வாய்க்கரிசி இல்லாத

உழைப்பாளிகள் திறந்தபடியே

உழைக்கிற காளைகளை

எதிர்பார்க்கிற

பசுக்கள் வாசலிலே

வைக்கோல் சாணம் அருகம் புல்

பூசணிப்பு கோலத்திற்குப்  

பச்சரிசி மஞ்ச நாத்து

பனங்கிழங்கு இவைகள் எங்கே எங்கே

இயற்கை கரும்புக்கு

வளையல் போட்டு பருவத்தைக்

கண்டது பயிராக்கியவனின் மனைவி மச்சினிச்சி

மணப்பெண் கையில்

குலுங்கவில்லையே

வரம்புகள் மாநில

மத்திய வெளிநாடு

தொழில் கூடமானது

அதில் விவசாய ஆன

தொழிலாளிக்குப்

பொங்கல் போனஸ்

தையில் பூக்கள்

புன்னகைக்கும்

சாகுபடியின்

விளைக்காக மாண்ட

கடன்பெட்டியின்

பிணத்தின் மேலும்

படைப்பான் இதய

பானையில்

மகிழ்ச்சியைப்  பொங்க

வைத்தான் எடுப்பான்

தண்ணீர் தெளிந்து

அமர்த்தி விட்டான் என்றைக்கும்

பொங்கல் உழவனுக்கு

எழுது பிரம்மா

ஒரே

ஆட்சி உலவு தான்

என்ன மூச்சு விட்டவர்களுக்காக

வயலில்

காத்திருப்போம்

பகல்வனே இன்னொரு

குண்டு போடு

விவசாய அறுவடை

பயனுறவே அந்த

தனி காட்சி கண்டு

பொங்கலோ பொங்கல்

என்போம்.....

முனைவர் கோ. வா. பரத்வாஜ்