4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2023

கூட்டம் - கி.மல்லிகா

 

கூட்டம்

கி.மல்லிகா,  (நெறியாளர்.இரா.ஜெயத்தி)                     

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்

ஸ்ரீ  விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கலை கல்லூரி,

நல்லம்பள்ளி, தருமபுரி மாவட்டம். - 636807

Cell - 7598449226

         அன்றும் மாதம்மாளின் வீட்டின் முன்பு அவ்வூர் மக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர் ஒவ்வொருவரும் தங்களுக்கான அனுதாபங்களை வெறும் வாய் வழி  மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வாறு  கரிசனம் காட்டுவது மாதம்மாளுக்கு  ஒன்றும் புதிதல்ல வழக்கமான ஒன்றுதான். குடித்துவிட்டு வந்து அவர் கணவர் முனியாண்டி செய்யும் அந்த இடையரா சண்டைகள் அவளுக்கு எப்போதும் வழக்கமான ஒன்றுதான். அவளுக்காக அவ்வூர் மக்களுக்கும் வருத்தப்படுவது வழக்கம் தான்.

        அது ஒரு அழகான மலை கிராமம் மலைவாழ் மக்களுக்குரிய  இயற்கை அறன்களோடு இணைந்து இருக்கக்கூடிய ஒரு கிராமம். எந்த பகுதியாக இருந்தால் என்ன  பெண்கள் மீதான ஒடுக்கு முறைகளும், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படக்கூடிய வன்முறைகளும், ஆணாதிக்க ஒடுக்கு முறைகளும் எல்லா நிலத்திலும் ஒன்றாகவே தான் இருக்கின்றது. அது பெண்களுக்கு உரிய ஒரு சாபம் என்று சொல்லலாம்.

         மாதம்மாள் அதே கிராமத்தைச் சார்ந்த ஒரு ஏழை குடும்பத்து பெண் காடுகளில் கிடைக்கும் கிழங்குகள் , கீரை வகைகள் மூலிகைகள் தேன் ஆகியவை விற்று அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை போக்கிக் கொள்ளும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த பெண் அவளின் தந்தை குப்புசாமி மிகுந்த இரக்க குணம் கொண்டவர், தாய் பொன்னியோ கணவன் சொல்லை சிறிதும் தட்டாத ஒரு பெண் அந்த கிராமங்களில் உள்ள பெண்களுக்கு உரிய ஒரு சிறப்பு அம்சமாக இருப்பது கணவன் சொல்லை மீராதிப்பதுவே. ஒருவேளை அந்த ஒரு வழக்கத்தில் மட்டும் பெண்களுக்கு பொது உடமை சுதந்திரம் இருக்கின்றதோ என்னவோ? கிராமங்களில் உள்ள பெண்கள் தங்கள் கணவன்களுக்குக் கட்டுப்பட்ட ஒரு நிலையிலேயே இருக்கின்றார்.

     இப்படி தினமும் ஒரே சூழலில் வாழும் அவளுக்கு ஆறுதலாக இருப்பது அவர் வீட்டு அருகில்

இப்படி தினமும் ஒரே சூழலில் வாழும் அவளுக்கு ஆறுதலாக இருப்பது அவர் வீட்டு அருகில் உள்ள ஒரு மரம் மட்டுமே. காரணம் அவள் அழும் பொழுது அவளுக்கு ஆறுதலாக அதன் இலைகளை அவள் மீது சிந்திவிடும் அதும் அவளுக்கு ஒரு ஆறுதலாக இருக்கும். காரணம் அவளுக்கு ஆறுதலாக இருந்த  அவளின்  தந்தையான குப்புசாமி  மகளின் நிலையை எண்ணி எண்ணி  மன உளைச்சலில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் இறந்து போனார்.  கணவன் இறந்த பின்பு செய்வதறியாது மாதம்மாளின் தாயும் தனது மகளின் கணவனை எதிர்த்து நிற்க துணி இல்லாமல் வீட்டின் ஒரு மூலையில் தங்கிவிட்டார். 

  இவ்வளவு துன்பங்களுக்கு இடையிலும்  மாதம்மாளுக்குச் சற்று இன்பத்தைத் தரக்கூடிய ஒரு செய்தி மட்டும் அவள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது அது  அவள் ஒரு குழந்தைக்குத் தாயான  காலம்.   இப்படி ஒரு மகிழ்வான சேதியை அவள் குடும்பத்தில் சொல்லி அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு வாழ்வு அவளுக்குக் கிடைக்கவில்லை. ஏனெனில் தன்னைப் போன்று பிறக்கும் அக்குழந்தையும் துன்பப்படுமோ என்று ஒருவித பயம் அவள் உள்ளத்தில் ஓடிக்கொண்டே இருந்தது.

     அனுதினமும் தன் கவலைகளைப் போக்கிக் கொண்டு இருந்த அவளுக்கு ஒரு ஆண்டு கழித்து ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.  அவளால் மகிழ்ச்சி கொள்ளவும் முடியவில்லை துன்பம் என்றும் நினைக்கவும் முடியவில்லை ஒரு குழந்தை என்று எண்ணி இருந்த அவளுக்கு இரண்டு குழந்தை பெற்றது மகிழ்வாக இருந்தாலும் இரண்டும் பெண் குழந்தை என்று ஒரு கவலை அவளுக்குள் இருந்தது. அதற்கு வேறு எந்த காரணமும் இல்லை வழக்கமாக எல்லா ஆண்களைப் போல ஆண் குழந்தை வேண்டுமென்று ஒரு எண்ணம் கொண்டவன் அவளின் கணவன் முனியாண்டி.

       பெண் குழந்தைகள் பெற்றெடுத்த அவளை இன்னும் ஏளனமாகவே நடத்த ஆரம்பித்தான் முனியாண்டிஅவ கேட்கும் எதையும் அவளுக்கு தர மறுக்க ஆரம்பித்தா ன்குழந்தைகளின் வாழ்க்கைக்காகஅவள் அவனிடம் கேட்டது ஒன்னே ஒன்னு தான் குழந்தைகளை நன்றாக பள்ளிக்கூடத்துக்கு அனுப்பனும் அப்பதான் அந்தப் புள்ளைங்க படிச்சு நல்ல வரணும்னு அவநினைச்சா அது அவனுக்கு இன்னும் கோபத்தை வர வச்சது இதுங்கெல்லாம் படிச்சு என்ன பன்ன போகுது அதனால உன் வேலையை பாருடி என்று ஏசினான் .

 அவளுக்கு அவ புள்ளைங்கள பள்ளிக்கூடத்தில் அனுப்பி படிக்க வைக்குனும்னு  ஆசை வந்ததுக்குக் காரணம் அவ சின்ன புள்ளையா இருந்தப்போ அந்த ஊருக்கு வந்த டீச்சரு  பார்த்தது தான் அவ வயசு புள்ளைங்க எல்லாம் புவனா டீச்சர் பத்தி மாதமம்மா  கிட்ட தினமும் வந்து சொல்லிட்டு இருந்தாங்க.   அத பாக்கும் போதெல்லாம் அவளுக்கும் இருக்கும் போதெல்லாம் நம்மளும் இதே பள்ளிகூடத்துக்குப் போயி படிச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு அவளுக்கு ஆசையா இருந்தது ஆனால் அவங்க அப்பாவால  முடியல தனக்குக் கிடைக்காத ஒன்று தன்னோட பிள்ளைகளுக்காவது கிடைக்கட்டும் என ஆசைப்பட்ட மாதம்மா கஷ்டப்பட்டு அந்த பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாள்.

    பள்ளிக்கு அனுப்பியதற்காக முனியாண்டி எப்போ பார்த்தாலும் மாதம்மாளஏதாவது ஒரு சாக்கு வச்சுக்கிட்டு அடிச்சிக்கிட்டு இருந்தா ஒவ்வொரு கஷ்டத்திலும் அவ மரத்து கிட்ட போயிட்டு  ஒக்காந்துட்டு அழுதுட்டு இருப்பா அதுவும் அழுது கிட்டு இருக்கிற மாதிரி இலைகளை போட்டுக்கிட்டே இருக்கும் இப்படி காலங்கள் போயிட்டே இருந்து பிள்ளைகளும் பெரியவர்கள் ஆயிட்டாங்க  ஆனாலும் முனியாண்டி அவளை திட்டுவதும் அடிக்கிறதும் அவஅதுக்காக வருத்தப்பட்டு இருக்கிறதும் மட்டும் மாறவே இல்ல.

  பிள்ளைங்க காலேஜுக்குப் போகணும்னு கேட்ட உடனே இத்தனை வருஷமா அடக்கி வைத்திருந்த ஒட்டு மொத்த கோவத்தையும் பொண்டாட்டி மேல முனியாண்டி கொட்டிடான்  பாவம் அவளால என்னதான் பண்ண முடியும். அது எவ்வளவு முயற்சி பண்ணாலும் அவ புள்ளைங்க அவ்வளவு அழகா காலேஜ் அனுப்ப முடியல பக்கத்து வீட்டு கிராமத்துல இருக்குற படிக்காத ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க அன்றைக்கே உங்க வீட்டுக்கு முன்னாடி கூட்டம் நின்று கொண்டு இருந்தது இத்தனை நாளா அவளுக்காக கஷ்டப்பட்டஊர்க்காரங்கஇப்ப அந்த பிள்ளைகளையும் பார்த்துகஷ்டப்பட ஆரம்பிச்சுட்டாங்க இப்படியே வாழ்க்கை போயிட்டு வந்து சமயங்கள்ல பிள்ளையோட வாழ்க்கையும் சரி இல்ல மாப்பிள்ளையும் சரியில்லமா ஒவ்வொரு நாளும் நரகத்தில் இருக்கிற மாதிரி அவளுக்கு புலம்பி கொண்டு இருந்தாள் ஒரு நாள் காட்டுக்குள்ள விறகு எடுக்குறதுக்காக போயிருந்த சமயத்துல அந்த காட்டுல அதிகமா சுத்திட்டு இருந்த காட்டு பண்ணி கூட்டம் அவள இடிச்சு தள்ளிடுச்சு கூட இருந்த மத்தவங்க அவளைக் கொண்டு வந்து அவர் வீட்டில் கெடுத்து நாங்க ஊர்ல இருந்து எல்லாரும் வந்து இப்படிப்பட்ட பொண்ணுக்கு இந்த மாதிரி ஒரு நிலைமையான கூட்டமா நின்னுஅவளுக்காக கஷ்டப்பட்டவாழ்க்கையிலமுதல் முறையா முனியாண்டிஅவளுக்காகக் கஷ்டப்பட்டோம் ஒட்டு மொத்த வாழ்க்கையும் கஷ்டத்திலேயே போயிட்டா அவளுக்குஇது ஒரு பெரிய கஷ்டமா தெரியலபொதுவா பொண்ணா பொறந்த ஒருத்திஎந்த அளவுக்குசந்தோசமா இருக்கணுமாஅந்த அளவுக்கு இவ கஷ்டம் தான் பட்டான்ரொம்ப நாளா படுக்கையில் கிடந்த அவளுக்குவாழ்க்கையே போதுன்னுஅதை எம நினைச்சுட்டாலும் என்னவோ இறங்கி  இறந்து போன அவள எரிக்கணும்னு முடிவு பண்ணாங்கஅவ கஷ்டப்படும்போது எல்லாம்எந்த மரம்அவளுக்கு ஆறுதலா இருந்ததோஅந்த மரத்தை வெட்டி அதுல அவ்வளவு கெடுத்தி அவளை எரிய விட்டாங்கஇப்பவும்அந்த மரம்தான்அவ கூட அவளுக்காக கஷ்டப்பட்டது கண்ணீர் விட்டதுஅவ கூட சேர்ந்து எரியவும் செய்து அதையும் அந்த ஊர் மக்கள் கூட்டமா நின்றுகடைசியாமரம் மாறி வாழ்ந்தஅவளை நினைத்து வருத்தப்பட்டாங்க.