4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஏப்ரல், 2023

மூலிகை வேலன் - முனைவர்.கோ.வா.பரத்வாஜ்

 

மூலிகை வேலன்

 

தமிழ் ழகரத்தின்

சிறப்பை

பெற்றிருக்கிறாய்

பழனி .

 

 

அம்மூனாம்  எழுத்தால்

மூனாம் வீட்டில்

மூன்றடியின்  பரம்

 

ஞான உலாவிற்கு

உலக உருண்டை மேலான

குமாரனே

 

 

மனம் கசிந்து வந்தாய்

கண்ணீர் வரிகளோடு

வருபவர்க்கு

 

வேர்க்க வேர்க்க பரிகாரம்

ஆற்றுவிக்கும் கந்தா

அத்தோற்றத்தின்

மகிமைதான்

என்ன

 

ரோம் கிரேக்கத்தின்

போர் கடவுள் செவ்வாய்

அச்செம்மையை

ஆட்சி மலையாக்கி இந்த

தேசத்தை காத்த

கதிரேசா

 

 

பிடிச்சாம்பல் நற்கேதிக்கு

நதியோடு தலை சாய்த்த நின்

சொடலை அப்பன்

பிணித்தவிப்புக்கு 

உயிர்த்துளி நீரை தூவும்

அக்கினி பூவே

 

 

நீர், சேர், மண், மலை

இதன் தாவரம்

மூலிகை வேலனை கால்

பிடித்திருக்கும்

சாமம்

 

 

சிற்றிலக்கியத்தை

உருவாக்கி நின்கலப்பு மணத்தை

காட்டிய சிங்கா

 

4 +4+4+8 கலவை வேதியின்

சரவணன் 4 + 2 + 6 முகம்

+ 3 மலை = 9 பாஷாமாகிய

தணிகனே

 

 

போகர் வடித்த

திரவிய ஆறே முக்கடலின்

ஒற்றைப் பற்றலையே எனும்

தண்டாயுதபாணியே

 

திருமால் லட்சுமி

ருத்ரன் உமையவள்

பிரம்மன் நாவில் சரஸ்வதி

கொண்ட பெயர் முருகா

 

எத்தனையோ

பெயர்களுக்கும்

முன்னும் பின்னும்

வேலன் ஐயா

 

 

முனைவர் கோ.வா. பரத்வாஜ்