4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

திங்கள், 1 மே, 2023

பணம்... - முனைவர் கோ. வ பரத்வாஜ்

 

பணம்...

 

பணம் ஆறாம் பூதம்

பிணத்தின் வாயை விரிக்கும் திறவுகோல்...

ஏன்? எது

மண்ணால் ஆன மானிடன் கையில்

உலோகத்தால் உருளுகிறாய்

இயந்திரத்தில்  பிரசவம் ஆகிய

கைக்குழந்தை நீ...

அங்கே காற்றால்

எடையில் இட

சிலர் மூச்சில் குறைவில் வருகிறாய்...

எழுத இயலாத ஏட்டை

சுமக்க வைத்து சரஸ்வதியை

எதிரியாக்கிவிட்டாய்...

தனமே 

உயர்ந்த பெயர்களால் அழைத்ததால்

பணக்காரர்களின் இடமானாய்

எப்படி ஏழைகளின் நிலாவாகும்?

நெருப்புக்கு ஆசை தேய்ந்து போனாலும்

எரித்து காசுகளாக்குகிறது

 பாவத்தை சிம்மாசனமாகிய  துட்டு

புண்ணியத்தை கால உண்டியல் ஆகிறது...

காணிக்கையாய் எங்கே போகிறாய் 

மக்கள் கரத்தில் தன ரேகையில்

கட்சிக்காரனின் கொடியை பறக்கிறாய்

தெரு கோடியில் நின்ற சிலைக்கு

மாலையிட்டவர்கே

காட்டிலும் கடலிலும் காயும் நிலவிலும்

கரையாத கரன்சி மாளிகை

வாழ்வு கால் அறை ஒரு நாள் என

எங்கள் நான் கீதம் பாடியது

 அன்று எந்த அரத்தில்

உன்னை கொண்டு வாழ்வோம் சொல்

வையகத்தை அழித்து

வானத்தை ஆளும் காலம் வேண்டாம்

பூதமே…!

 

முனைவர் கோ. பரத்வாஜ்