4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூன், 2023

சிந்திக்க நேரமில்லை -- முனைவர் பீ. பெரியசாமி

 

சிந்திக்க நேரமில்லை

தேவதைகளின் உச்சமவள்

தேன் சிந்தும் உதட்டழகி

இல்லாத இடுப்பழகி

இவையெல்லாம் எதற்காக?

இங்கே மூத்த தேவர்கள் இருந்ததேயில்லை

மூத்த தேவி தான்

உன் சக்தியவன்

ஆளுமையின் அடையாளமவள்

இது பெண்வழி சமூகம்

அவளே அடிமையாக்கப்பட்டாள்….?

உன் ஆளுமை அடிபட்டு போகும்

சற்று யோசித்துப்பார்

உன்னுள் ஆளுமையை விதைத்தவள்

ஒரு பெண் என்பதை மறுக்கவியலாது

காமத்தைத் தூண்டும் கட்டழகியாக

உன் ஆசையின் இச்சைபாத்திரமாக

நீ நினைத்துக் கொண்டிருப்பவள்

ஆளுமையின் ஆளுமையென்று

நம்மைப் பற்றி சிந்திக்கின்றோம்

ஏனோ அவர்களைப் பற்றியெல்லாம்

சிந்திக்க நேரமில்லை

அவர்களும் மனிதர்களே

நம்மை உருவாக்கியவர்கள் அவர்கள்

போற்றுவோம் அவர்களை

பொக்கிஷங்களாக அல்ல

நம்மிள் ஒருவரா

-          முனைவர் பீ. பெரியசாமி