4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 1 ஜூன், 2023

கல்லாததால் - முனைவர் கோ. வ.பரத்வாஜ்

 

கல்லாததால்

   

அப்பா கத்துக்கோ

என கத்திய குரல் உலகளவு

சுட்டு விரலால் மண்ணையும்

ஆணியால் சுவடியிலும்…

 

சுண்ணாம்பு கட்டியால் பலகையிலும்,

இறகால் சாந்து தொட்ட சுவற்றிலும்

கைக்குச்சியால் காகிதத்திலும்

சுண்டலியால் கணினியிலும்

பயிலாதவன் கிழக்குக் கண்ணில்

இதழ்விரியாத தாமரை ஆவான்...

 

தெய்வத்தைக் கும்பிடுதல் மாறி

ஆறறிவுனுள் எழும் அவன் கற்றல் தாய் கடுக்கு

இரண்டாம் கர்ப்ப கிரகத்தில் பயனிப்பான்…

 

இரு நான்கு திசையிலும் கைப்பேசி மணி அடித்து அழைப்பை வேண்டும்.

ஏழு ஆண்டு கவிபா புணையா பாரதி

இகழ்வாணான் தொழில் வகையில் …

வேதங்கள் கீழ்ப்படிதல் உணர்த்தும்

கல்வி உயில் நுனியின் கலசமாகும்

தந்தை செல் வனவாசம் ஆண்டு பதினான்கு

கம்பனின் வனவாச பல்கலைக் கழகம்  அல்லவோ!

 

ஐந்து வயதில் நான்கு சொற்கள் கூட்டியவன்

நாற்பத்து ஐந்தில்  வலைதளத்தில் விருப்பம் குமியும்…

மன்றத்தில் வந்தவன் வாய்ப்பாட்டை வசிக்க நீட்டினான்

ஏதும் வாசிக்காகதவர்களின் மத்தியில் ஏளனம்….

 

வானம் பூமி என பிரிவு படும் தானே!

காகிதத்தில் 247 ஐ  கற்காதவன்

கொம்பைப் கொண்டு சினத்தால் தகராறு படைக்கிறான்….

 

அப்பா ஆசான்! கல் என கொம்பால்

அடித்ததால்…

உயர்க் கம்பத்தில் மலர் தூவி பறக்கும் கொடி போல்

ஆவோம் கல்வியால்…..

 

அறிவினில் இன்மை வலிமை எதுசரி?

என வாழ்க்கையின் தின்மையை

கல்வியில் அணுவைப் பெறுவோம்.

 

 

முனைவர் கோ. வ.பரத்வாஜ்