பன்முகப் பார்வையில் பாரதியார்
கி. சரவணன்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
டாக்டர் எம்.ஜி.ஆர்.
சொக்கலிங்கம் கலைக்
கல்லூரி,
ஆரணி, திருவண்ணாமலை- 632317.
முன்னுரை
பாரதியின் கவிதைகள் அவரின் அனுபவத்தையும் அவரின் கொள்கைகளையும்
எடுத்துரைப்பவனாய் அமைந்துள்ளன. அவ்வகையில் பாரதியின் இனியவை குறித்த
பார்வையும் ஐம்பூதங்களில் தீ, சூரியன்குறித்த பார்வையும் ஒன்றே தெய்வம்
என்ற த்த்துவத்தையும் இக்கட்டுரைவழி காணலாம்.
இனியவைகள்
வாழ்வில் சில இனிமைகள் அனைவரிடமும் இருந்தும் பலர் அதனை தெரிந்தும் தெளிந்தும் கொள்வதில்லை. இதில் பாரதியார் தாம் வாழும் உலகில் உள்ள இனிது பற்றியும் இனியவை பற்றியும் தமது கவிதையின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் அனிமை யுடைத்து:
காற்றும் இனிது தீ இனிது நீர் இனிது நிலம் இனிது” (முதற்கிளை: இன்பம்)
இவ்வரிகளில் இனிதாவதென உலகம் வான் காற்று தீ நீர் நிலம் ஆகியவற்றை குறிப்பிடுகிறார்.
“மழை இனிது மின்னல் இனிது இடி இனிது
கடல் இனிது மலை இனிது காடு இனிது
ஆறுகள் இனியன,
உலோகமும், மரமும், செடியும், கொடியும்,
மலரும், காயும், கனியும், இனியன, பறவைகள் இனிய” (முதற்கிளை: இன்பம்)
மேற்கண்ட கவிதை வரிகளில் மழை மின்னல் இடி கடல் மலை காடு ஆறுகள் உலோகம் மரம் செடி கொடி மலர் காய் கனி பான்றவை இனியன என்கிறார்.
”மனிதர் மிகவும் இனியர்
ஆண் நன்று பெண் இனிது
குழந்தை இன்பம்
இளமை இனிது முதுமை நன்று
ஊயிர்நன்று. காதல் இனிது”. (முதற்களை: இன்பம்)
இப்பாடலில் மனிதர்கள் பெண் குழந்தை இளமை காதல் போன்றவற்றை இனிது எனக் கூறிகின்றார். இவர் தமது கவிதையில் இனிது பற்றிக் கூறும்போழுதே நல்லன பற்றியும் குறிப்பிடுகிறார்
நன்று
”ஞாயிறு நன்று திங்களும் நன்று“
”ஆண் நன்று பெண் இனிது
இளமை இனிது முதுமை நன்று
உயிர் நன்று காதல் இனிது” (முதற்கிளை இன்பம்)
இவ்வரிகளில் ஞாயிறாகிய கதிரவனும் திங்களாகிய சந்திரனும் நன்று என்கிறார். ஆண் முதுமை உயிர் போன்றளவும் நன்று என்கிறார் மேலும் தெய்வங்கள் நன்று என்பதனை
” தெய்வங்களை வாழ்த்துகின்றோம்,
தெய்வங்கள் இன்பமெய்துக
அவை வாழ்க
அவை வெல்க
தெய்வங்களே!
என்றும் விளங்குவீர் என்று இன்பமெய்துவீர்
என்றும் வாழ்வீர் என்றும் அருள்புரிவீர்
எவற்றையும் காப்பீர்
உமக்கு நன்று
எம்மை உண்பீர் எனக்கு உணவாவீர்
உலகத்தை உண்பீர் உலகத்துக்கு உணவாவீர்
உமக்கு நன்று”
தெய்வங்களே! (முதற்கிளை இன்பம்)
இது மட்டுமின்றி தெய்வங்களுக்கே உரிய காத்தலினை இனிது என்று அழித்தலை நன்று என்றும் கூறுகின்றனர். உண்பதும் உண்ணப்படுதலும் சுவையும் நன்று நன்று என்கிறார். தெய்வத்திற்கு அடுத்து ஞாயிறை நன்று என்பதனை
”ஒளி தருவது யாது? தீராத இனமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது?
முழை எவன் தருகிறான்? கண் எவனுடையது?
ஊயிர் எவன் தருகிறான்?
புகழ் எவன் தருகிறான்? புகழ் எவனுக்குரியது?
அறிவு எதுபோல சுடரும்?
அறிவுத் தெய்வத்தின் கோயில் எது?
ஞாயிறு
அது நன்று”. (இரண்டாம் கிளை : புகழ்)
என்ற பாடல் வரியின் மூலம் ஒளி தருபவனும் வளம் குறையாத இளமையினையும் மழை தருபவனும் புகழ் உயிர் தருபனும் அறிவுத் தெள்வத்தின் கோயிலான ஞாயிற்றை நன்று என்கிறார். தெய்வங்கள் ஞாயிறு மட்டுமின்றி மழையினையும் நன்று என்கிறார் இதனை
”புலவர்களே அறிவுப் பொருள்களே உயர்களே
பூதங்களே சக்திகளே எல்லோரும் வருவீர்
ஞாயிற்றைத் துதிப்போம் வாருங்கள்
அவன் மழை தருகின்றான்
ழை நன்று” (இரண்டாம் கிளை : புகழ்)
நமக்கெல்லாம் துணையாகவும் உயிர் வாழ்வதந்கு ஆதாரமாகவும் உள்ள ஞாயிற்றின் உதவியுடன் பொழிகின்ற மழையினை நன்று என்கிநார் பாரதியார்.
ஓன்று
இனிது நன்று பற்றிக் கவிதை பாடிய பாரதி ஒன்று என்ற கருத்தினையும் முன்மொழிகிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றும் மொழிக்கேற்ப உலக உயிர்கள் அனைத்தும் ஒன்று என்பதனை தம் கவிதையில் குறிப்பிடுகிறார்.
”இவ்வுலகம் ஒன்று
ஆண் பெண் மனிதர் தேவர்
பாம்பு பறவை காற்று கடல்
உயிர் இறப்பு இவையனைத்தும் ஒன்றே
ஞாயிறு வீட்டுச்சுவர் ஈ மலை யருவி
குழல் கோமேதகம்-இன்பமு இவையனைத்தும் ஒன்றே
இன்பம் துன்பம் பாட்டு
வண்ணான் குருவி
மின்னல் பருத்தி
இஃதெல்லாம் ஒன்று
முடன் புலவர்
இரும்பு வெட்டுக்கிளி இவை ஒரு பொருள்
வேதம் கடல்மீன் புயற்காற்று மல்லிகைமலர்
இவை ஒரு பொருளின் பல தோற்றம் உள்ளதெல்லாம் ஒரே பொருள் ஒன்று”.
(முதற்கிளை: இன்பம்)
இவ்வரிகளில் உலகம் ஆண் பெண் மனிதர் தேவர் பாம்பு பறவை காற்று கடல் இறப்பு ஞாயிறு வீட்டுச்சுவர் ஈமலை அருவி குழல் கோமேதகம் இன்பம் துன்பம் பாட்டு வண்ணான் குருவி மின்னல் பருத்தி முடன் புலவர் இரும்பு வெட்டுக்கிளி வேதம் கடல்மீன் புயற்காற்று மல்லிகைமலர் இவையனைத்தும் ஒன்றே என்கிறார்.
நீ
நீ என்று ஞாயிற்றைக் குறிப்பிடுகிறார் அதன் தன்மையினை கீழ்கண்டவாறு தெளிவுறுத்துகிறார்.
நீ ஒளி நீ சுடர் நீ விளக்கம் நீ காட்சி
மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து
இவையெல்லாம் நினது நிகழ்ச்சி
கண் நின்று வீடு
புகழ் வீரம் – இவை நின்று லீலை
அறிவு நின் குறி அறிவின் குறி நீ
நீசுடுகின்றாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க
உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்
வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்
நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க” (இரண்டாம் கிள: புகழ்)
நீ ஆகிய ஞாயிற்றை ஒளி சுடர் விளக்கம் காட்சி மின்னல் இரத்தினம் கனல் தீக்கொழுந்து புகழ் வீரம் அறிவு உயிர் உடல் நீர் காற்று ஆகியவைத் தருபவனாக உருவகப்படுத்துகிறார். மேலும்
”நீ சுடுகின்றாய் நீ வருத்தந் தருகின்றாய்
நீ விடாய் தருகின்றாய் சோர்வு தருகின்றாய்
பசி தருகின்றாய்
இவை இனியன.
நீ கடல்நீரை வற்றழக்கிறாய் இனிய மழை தருகின்றாய்
வானவெளியிலே விளக்கேற்றுகிறாய்
இருளைத் தின்று விடுகின்றாய்
நீ வாழ்க” (இரண்டாம் கிளை: புகழ்)
நீ ஆகிய ஞாயிறானது சுடுவதாகவும் வருத்தம் தருவதகவும் சோர்வு பசி தருவதாகவும் கடல் நீரைவற்ற வைப்பதாகவும் மழை தருவதாயும் குறிப்பிடுகின்றார்.
”ஒளியே நீ யார்?
ஞாயிற்றின் மனளா?
அன்று நீ ஞாயிற்றின் உயிர் அதன் தெய்வம்” (இரண்டாம் கிளை : புகழ்)
என்ற வரியில் ஒளியாகிய ஞாயிற்றினை உயிராகவும் தெய்வமாகவும் கருதி குறிப்பிடுகிறார். இவ்வாறு தன் பாடல்கள் வழி ஞாயிற்றை நீ என்று குறிப்பிட்டு அறிவுறுத்துகிறார்.
தீ
ஐம்பூதங்களில் ஒன்றான் தீ குறித்தும் பாரதி தன் கவிதைகளில் கூறியுள்ளார். இதனை
”ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு?
வெம்மையே ஒளி தோன்றும்,
வெம்மையைத் தொழுகின்றோம்
வெம்மை ஒளியின் தாய் ஒளியின் முன்னுருவம்
வெம்மையே நீ தீ
தீ தான் வீர தெய்வம்
தீ தான் ஞாயிறு
தீயின் இயல்பே ஒளி
தீ எரிக
அதனிடத்தே நெய் பொழிகின்றோம்
தீ எரிக
அதனிடத்தே தசை பொழிகின்றோம்
தீ எரிக
அதற்கு வேள்வி செய்கின்றோம்
தீ எரிக
அறத்தீ அறிவுத்தீ உயிர்த்தீ
விரதத்தீ வேள்வித்தீ
சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ
இவை யனைமைத்தீ கொடுமைத்தீ
இவை யனைத்தையும் தொழுகின்றோம்
இவற்றைக் காக்கின்றோம்
இவற்றை ஆளுகின்றோம்
தீயே நீ எமது உயிரின்தோழன்
உன்னை வாழ்த்துகின்றோம் (இரண்டாம் கிளை: புகழ்)
இப்பாடல் பாரதி ஐம்பூதங்களில் ஒன்றான தீயினை வாழ்த்தியும் தொழுதும் கூறியுள்ளார். தீ யானது வீரத்தெய்வம் என்றும் ஒளி என்றும் கூறுகின்றார். அதுவின்றி தீ யானது அறம உயிர் அறிவு விரதம் வேள்வி சினம் பகைமை கொடுமை என்றும் உயிரின் தோழன் என்றும் குறிப்பிடுகிறார். இவ்வாறு தீயின் தன்மைகள் குறித்தும் அது மனிதர்களால் போற்றியும் புகழ்ந்தும் வாழ்த்தியும் இருக்க வேண்டியதனை குறிக்கின்றார்.
முடிவுரை
ஐம்பூத வழிபாட்டில் நாட்டம் கொண்டவராகவும், ஒன்றே தெய்வம் எனும் கொள்கை உடையவராகவும் இவ்வுலகம் இனியவைகளால் நிறைய வேண்டும் என்ற ஆசை கொண்டவராகவும் பாரதியார் இருந்துள்ளார் என்பதை இக்கட்டுரை தெளிவுபடுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக