4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

கதகதப்பின் இறுக்கம் - மைத்திரிஅன்பு

 

கதகதப்பின் இறுக்கம்

வியாபாரத்தை ஒட்டிய

வாசிப்புகளும்

எடுத்துரைப்புகளும்

இலக்கியங்களும்

இயங்க மனமின்றி

இயக்கமற்று

இறுதிவரை இருகியே

கிடக்கின்றன.. ..

 

போதுமான தொட்டுணரலும்..

அன்பு தோய்ந்து வெளிப்பாயும்

சொல்லொன்றின் கூர்மையும்..

பழகிய பிரியத்தோடு

கை தொட்டு நீளும்

சிரிப்பொன்றே ஆறுதலென.. ..

முப்பொழுதும் தேவையாகிறது.. ..

 

நெய்ந்து பிரித்த நுலிழையென

மெலிந்துபோன இதயங்களுக்கான

இளைப்பாறளுக்கு

வேறெதுவும் தேவையில்லை.. ..

உடைந்து உறுகுலைத்தாலும்

மணல் துகளெனச் சலித்துச் சிறுசானாலும்

ஏதும் மாறாத மண்ணுலகில்

என்றும் மனித எதிர்ப்பார்ப்புகள்

யாவும்

பேரன்பு ஒன்றே..!

 

இனிக்கப் பேசும் சொற்களுக்கிடையே

அலங்காரங்கள் ஏதுமற்ற

அழுக்கு படிந்த

அன்பின் அவிழ்ப்பு ஒன்றே

அள்ளி எடுத்து அணைத்துகொள்ள

முற்படும் எல்லாவுமாகிறது.

 

உயிர் தெய்ப்புகள் யாவும்

உணர்வின் உறவுடைப்புகளானபோதும்

மெது மெதுவாகத் தொட்டுப் பற்றிக் கொள்ளும்

கதகதப்பின் இறுக்கம் அதிகரிக்க

வலி சூழ்ந்த வாழ்வொன்று

அசொகரியம் இழந்து

அழகாகிறது.

-     மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்