4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

புத்தகப் புராணம் - கோ.பிரியா

 

புத்தகப் புராணம்
 

மழைக்கால குடையாகவும்

பிள்ளைகளின் விளையாட்டு ஓடமாகவும் அழுக்கெல்லாம் அழகாக்கும்

காகித குவியல் நீ...

காதல் கடிதங்களை

கச்சிதமாய் கொண்டு சேர்க்கும்

இலவச தபால்காரன்

வகுப்பறை தூக்கத்தை மறைக்கவும் பள்ளியறை ரகசியம் மறக்கவும்

போதிமரம் நீயானாய்

 கனவு ராணிகளின்

கைக்குட்டை உடைகளை

கையில் தரும் வானவில்லும் நீ

புத்தகப்பை சுமந்தே

வளர்ந்து போன முதுகெலும்புகளை எப்போது நேராக்கப் போகிறாயோ மரங்களின் மறுபிறவியே

மறந்து போன மனிதனுக்கு

நினைவூட்ட நீ இருக்கிறாய்

சான்றிதழாய்...

வரலாறு படைத்த மனிதர்களின்

வரலாறு நீ ஆகிறாய்

நாகரிகத்தின் தொட்டில்

நல்லதொரு புத்தகமே....

மயிலிறகு குட்டிகளை

சேமிக்கும் வங்கி லாக்கர் நீ

உன்னால் தானே

மனிதனும் சேமிக்க பழகிக் கொண்டான்....

மரங்கள் இல்லா பூகோளம்

கையருகே காத்திருக்கு

காற்றை சேமிக்கவும் கற்றுக் கொடு கைதாகும் குற்றவாளியை

 காட்சிப்படுத்தும் நீ

விடுதலையாகும்போது

விலகிக் கொள்கிறாய்

மனிதனைப் போல் நீயும் மாறிவிடாதே மனிதனிடம் மாற்றம் கொடு…

 

கோ.பிரியா

முனைவர் பட்ட ஆய்வாளர்

அரசு கலைக் கல்லூரி சேலம் 7