4ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 நவம்பர், 2023

அன்பாதல் - மைத்திரிஅன்பு

 

அன்பாதல்

ன்பானவர்களின்

நரம்பிழைகளை இணையுங்கள்.!

நேயம் பகிர்ந்து..

காதல் பேசி.. கசிந்துருகி..

கண்களால் விழுங்க - பெற..

முயற்சியுங்கள்.

முண்டியடியுங்கள்..

 

கைவிடப் பெறாத

முழு அன்பின் முடிச்சிக்குள்

முடியாது போனாலும்..

 

குளுமையின் பரவலென –

ஜன்னல் கண்ணாடிகளை உடைத்திராத

மெல்லிய காற்றாடலென –

நிறைகுள அன்பைத் தேக்கிய

கண்களின் உளநுகர்வென –

உணர்வாய் உயிர் சேரும்

உன்னதத் தருணங்களிலேனும்

கசிந்துருகவும்

கரைந்து போகவுமான

உண்மையுடனான ஊடுருவலை

உறுதிப்படுத்துங்கள்

 

தடயங்கள் ஏதுமின்றி..!

 

-     மைத்திரிஅன்பு, காஞ்சிபுரம்