இதயம் நொருங்கியது….
எழுத்தாணிகள்
எதற்கு?
இதயங்கள் நொருங்கிய
பிறகு
எதை எழுத வேண்டும்
நொருங்கிய இதயங்களையா?
நொருக்கிய இதயங்களையா?
பாவம் இதயங்கள்
யாருக்குத்தான்
நொருங்கிட ஆசையிருக்கும்
இனியொரு அவை
செய்வோம்!
இதயம் நொருங்கியோர்
பேரவையென
பாரினில் பலரும்
ஒன்றுகூடுவர்
சாதி சமய தேசிய
பாகுபாடற்று
அங்கே அலருவதற்கல்ல…
நொருக்கப்பட்ட
இதயங்களைப் புதைப்பதற்கு
புதைக்கப்பட்டவர்கள்
புத்துயிர் பெறட்டும்
நொருக்கப்படாத
இதயங்கள்
பூவுலகில் உலவட்டும்…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக