6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

புதன், 1 ஜனவரி, 2025

புதுக்கவிதை பூக்கள் - முனைவர் பீ. பெரியசாமி

 

புதுக்கவிதை பூக்கள்

பிறை இடுக்கிள்

பிள்ளையானேன்

உன் விழிக்குள்

சிக்கிக்கொள்ளவே...

 

உடுக்கை இடைக்குள்

உயிர்மூச்சு இறைக்க

இறைவனைக் கண்டேன்...

 

வெட்டுப்பட்ட அம்புகள்

இதயத்தைத் துளையிட்டன

சிந்திய ரத்தமும்

சிந்தைக்குள் இன்பமானது...

 

கடல் வற்றலாம்

வானம் நிறம் மாறலாம்

உன் மடிசாயும்

என் கனவுகளுக்கு மட்டும்

மரணம் என்றுமில்லை...

 

கடிகார முட்களும்

சிலகாலம் ஓய்வெடுக்கலாம்

உன்னை நினைத்த

என் இதயத்துடிப்பிற்கு

ஒருபோதும் ஓய்வில்லையே...

 

உன் கூந்தலில்

தொலைந்து போன

மழைத்துளி நான்

மீண்டுவர மனமில்லை

நெற்றிச் சுருக்கத்தில்

நிலைகொண்டுவிட்டேன்...

 

வெடித்த கோவைப்பழம்

விரல் இடுக்குள் வட்டமிட

வேதனைகள் தீர்ந்த்து

வெப்பம் எனைத் தீண்டிச் செல்ல

 

ஆயிரம் உருவங்களின்

ஆலயம் அவள்

ஆயுசுக்கும் அவதானிக்க

அவள் மட்டும் போதுமே...

 

இறந்து போனாய்

வெட்டப்பட்டது சிறகுகள்

சிறகில்லா பறவையானேன்

தாயில்லா மகன்...

 

இறந்துவிட்டேன்

இமைக்குள்

பிழைக்க விருப்பமில்லை

 

 

யாருக்குத்தான் தெரியும்

என் இதயவான் நீயென்று

நீங்காமல் இருந்து போ..

நித்தம் நான் பிழைத்துக் கொள்கிறேன்...

 

அவள் மட்டும் அழகி

யாரிடம் சொல்ல

யாருமில்லை

என் வாழ்வை சொல்ல....

கருத்துகள் இல்லை: