5ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வியாழன், 6 மார்ச், 2025

சுமை தாங்கும் உள்ளங்கள் - பா.மோகனா

 

சுமை தாங்கும் உள்ளங்கள்  

 

நிலத்தைத் தாங்குபவள் 

நீதியைத் தாங்குபவள் 

நிலந்தனில் ஒவ்வொரு

உயிர்களின் பிறப்புக்கும் காரணமானவள்!!!

 

அம்மா என்னும் மூன்றெழுத்து மந்திரம்

ஆசையினைத் துறந்த ஆனந்த உறவது 

இன்பத்தை எனக்களித்த இனியவள் ஈன்றபொழுதில்அளவற்றஆனந்தமடைந்தவள்

உலகை எனக்கு அறிமுகம் செய்தவள் 

உள்ளங்கையில் என்னைத் தாங்கியவள்

ஊர்புகழ என்னை உயர்த்தியஉன்னதமானவள்

எல்லாப் புகழும் பெற்று வாழ்ந்திட 

ஏணியாய் என்னை ஏற்றிய தீபமவள் 

ஐயமின்றி சொல்வேன் என் அன்னையே 

ஒரு போதும் உன்னைப் போல் பார்த்ததில்லை 

ஓதி ஓதி உன்னால் அடைந்தேன் 

வாழ்வினில் என்றும் பேரின்ப எல்லை

 

முதலில் நீ - என்னை ஈன்றதால் தாய் 

முடிவில் நான் - நான் ஈன்றதால் தாய் 

முதலில் நாம் பிறந்தது தாயால் 

முடிவில் நாம் மடிவதும் ஒரு தாயாக

அதனால் தான் விளங்குகிறது உலகம் அழகானதாய்!!!

                               

                                             பா.மோகனா

 

கருத்துகள் இல்லை: