6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசாமி

 

கவிதைகள் -  முனைவர் பீ. பெரியசாமி


தாய் மரணித்தால்

தந்தை மறுமணம்

பிள்ளைகள் அணாதை...

 

சற்றே சிந்தித்துப்பார்

இறக்கும் முன் வாழ்ந்ததை

இறுதி பயணம் இன்பம்...

 

யாரிடமும் பேசவில்லை

அம்மாவின் ஆன்மா

குற்ற உணர்ச்சி

 

பட்டங்கள் நிறைந்தென்ன

பெட்டிகள் நிறைய வேண்டும்

ஊரார் உன்னை சுமக்க..

 

இரவெல்லாம் கண் விழித்தேன்

எப்படியும் விடியுமென்று

வேலையில்லா பட்டதாரி

 

சொல்லிட்டாய்

கேட்டுக் கொட்டேன்

மௌணமே மறுமொழியாய்

கடனாளி

 

யாரிடமும் கொபமில்லை

யாருமில்லாமல் கோபிக்க வேண்டியதில்லை

கைவிடப்பட்ட கடவுளின் பிள்ளை

 

நீ அழகிதான்

எனக்கு தேவையில்லை

அரைவயிற்று கஞ்சிக்கு வக்கில்லை


கருத்துகள் இல்லை: