கவிதைகள் - முனைவர் பீ. பெரியசமி
சட்டென்று விழித்தேன்
சங்கு சத்தம்
சடலமாய்...
இனியாரும் தோற்கபோவதில்லை
கடவுள் துணையிருப்பார்
பிச்சைக்காரன்...
அவளை மட்டும் விட்டுவிடு
ஆறுதலாய் இருந்து போகட்டும்
கணவன்..
உன் வலிகளை மறக்க
ஊமையாய் இருந்துவிடு
உணர்ந்தவன் சொன்னது
ஒருமுறை அழுதபார்
ஊரே சிரிக்கும்
ஒருமுறை சிரித்துப்பார்
உறவுகள் விழிபிதுங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக