6 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2025

கவிதைகள் - முனைவர் பீ. பெரியசமி

 

கவிதைகள் -  முனைவர் பீ. பெரியசமி


மறதி மறதி

மறந்தே போனது

தாயின் மரணம்

 

கொல்லையில் இருக்கும்

மரங்களைக் கேட்டுப்பார்

என் கண்ணீர்

கதைகளைச் சொல்லும்

கிணற்றடி தொட்டிச் சொல்லும்

பலநாள் பட்டினியை

தலையணையிடம் தலையசைத்துப்பார்

கண்ணீர் அருவி பெருகும்

வேறுயாரிடம் சொல்ல

என் தந்தைக்கும்

வேற்றான் ஆகிவிட்டதை..

நாடே சிரிக்குமே

நானழுத கதை கேட்டால்

மனதுக்குள் புதைந்து போனது

பலநாள் கனவுகள்

உயிரோட்டமுள்ள பல நினைவுகள்

நினைக்கவே கூடாதவைகள்...

கருத்துகள் இல்லை: