கவிதைகள் -முனைவர் பீ. பெரியசாமி
தேடாதே இருக்க மாட்டேன்
இறுதி ஊர்வலத்தில்
பிணம்...
தனிமை ஞானம் தரும்
பொறுமை வாழ்வு தரும்
பணம் இரண்டையும் தரும்
எல்லா மரங்களும்
வளர்ந்து விட்டன
நட்டவன் நடுதெருவில்
உடைந்த கண்ணாடி
ஓராயிரம் உருவங்கள்
தனிமையின் காதலன்
இறைவனே வந்துவிடு
இருப்பது உண்மையானால்
இறப்பையாவது தந்துவிடு...
உறக்கத்தைக் கெடுக்கன்றன
உறவையெல்லாம் பதம்பார்க்கின்றன
லட்சியங்கள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக