7 ஆம் ஆண்டில் நமது இலக்கியச்சுடர்
படைப்புகளை periyaswamydeva@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இதழின் வளர்ச்சிக்கு உதவுங்கள்

சனி, 1 ஆகஸ்ட், 2026

தீட்டு - முனைவர் பீ. பெரியசாமி

 தீட்டு

குருதியில் தொடங்கும் வாழ்க்கை,

குருதிக்குள் அடங்கும் காலம்.

உயிரைத் தாங்கும் பெண்ணை,

'தீட்டு' எனும் ஒரே சொல்லால்

தூரம் நிறுத்துகிறது சமூகம்!

கருப்பையின் கண்ணீருக்குத்

தீட்டு என்று பெயரிட்டு,

கோவிலின் வாசலில்

கொப்பளிக்கும் மனிதர்களே...

அவள் சிந்திய குருதிதானே

நீங்கள் உருவான கருவரை!

இயற்கையின் நியதியை

இழிவெனக் கருதும் உலகே,

சுத்தத்தின் வரைவிலக்கணம்

துணியில் இல்லை...

சுயநலமற்ற பெண்ணின்

மனதில் இருக்கிறது!

விளக்கி வைக்கும் சுவர்களையெல்லாம்

உடைத்தெறியும் நாள் வரும்...

தீட்டு என்பது குருதியில்லை,

அதை இழிவாய் நினைக்கும்

மனித மூளையில்தான்!

கருத்துகள் இல்லை: