ஒவ்வொரு முடிவிலும்
இயற்கை
ஏதோ சொல்கிறது
நமக்குத்தான் புரிதலில்லை
அதைப் புரிந்துக் கொண்டால்
நாம் மனிதரில்லை...
ஒவ்வொரு விடியலும்
நமக்கானது என்றது
ஒருகாலம்...
அதையே எதற்காக
என்பது மற்றொரு காலம்...
உறவுகள் விசித்திரம்
நிரம்பியவை...
அவை என்றும்
நல்லவரை நாடுவதே இல்லை...
புரளியும் புரட்டும்
பேசுபவர்களையே கொண்டாடும்.
துணை தேடும் இளைஞர்களே
அவர்களுக்கும் மனமுண்டு
அதிலே காதலும் உண்டு
முன்னாள் ; இந்நாள் ;
மனங்களை மதியுங்கள்
திருமணங்கள் தித்திக்கும்
எல்லாம் கடந்த பின்பும்
அவள் மட்டும் சொன்னாள்
தோளில் சாய்ந்தபடி
பார்த்துக் கொள்ளலாம் பா.
உயிர்த்
தெழுந்தேன்
உணர்வு கொண்டவனாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக